Top posting users this month
No user |
Similar topics
நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம்.. வட இந்தியாவில் நிலநடுக்கம் உணரப்பட்டது
Page 1 of 1

நேபாளத்தில் மீண்டும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் வட இந்தியாவில் மீண்டும் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நேபாளத்தில் சிக்கித்தவித்த 550 இந்தியர்கள் மீட்பு
நேபாளத்தில் சிக்கித்தவித்த சுமார் 550 இந்தியர்களை இந்திய விமானப்படை தலைநகர் டெல்லிக்கு மீட்டு வந்துள்ளது.
நேபாளில் நேற்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில், அந்நாட்டுக்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பலர் சிக்கிக்கொண்டனர்.
எனவே மத்திய அரசு இந்திய விமான படை மூலம், அவர்களை மீட்க துரித நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்த மீட்பு பணிக்காக 10 விமானங்களும், 12 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதன் ஒரு கட்டமாக அந்நாட்டில் சிக்கி தவித்த குழந்தைகள் உள்பட 550 பேர் மீட்கப்பட்டு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளனர்.
நேற்று பின்னிரவிலும், இன்று அதிகாலையிலும் இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த விமானங்கள் தலைநகர் டெல்லியை வந்தடைந்தன.
மேலும், பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் சிதான்ஷு கர் கூறுகையில், நேபாளில் சிக்கி தவிக்கும் மேலும் பலரையும் மீட்கும் வகையிலும், நிவாரண பணிகளை அனுப்பும் பொருட்டும், இன்று மட்டும் 10 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக கூறியுள்ளார்.
இந்தியாவில் 51 பேர் பலி:
நேபாளில் சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பீகார் உள்பட 3 மாநிலங்களில் 51 பேர் பலியாகியுள்ளனர்.
டெல்லி, பீகார், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் பீகாரில் 38 பேர் பலியாகியுள்ளனர், 133 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேலும் உத்தர பிரதேசத்தில் 11 பேர் பலியாகியுள்ளனர், 69 பேர் காயம் அடைந்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் 2 பேர் பலியாகியுள்ளனர், 35 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இதுவரை 51 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நேபாளத்தின் கோதாரியில் இரண்டாவது நிலநடுக்கம் நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வட இந்தியாவின் மீண்டும் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பீகார், ஜார்கண்ட், அசாம், மேற்குவங்கம், டெல்லி மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது.
நிலநடுக்கத்தின் அளவானது நேபாளத்தில் 6.7 ஆக ரிக்டரில் பதிவாகியுள்ளது.
மெட்ரோ ரயில் நிறுத்தம்
டெல்லி, கொல்கத்தா நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து மெட்ரோ ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அவசர ஆலோசனை
மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பிரதமர் தலைமையில் பிற்பகலில் அவசரக் கூட்டம் நடத்தப்படவுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இந்திய பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
» இந்தியாவில் மீண்டும் மேகி நூடுல்ஸ் விற்பனைக்கு வரும்: நெஸ்லே அதிரடி அறிவிப்பு
» நேபாளத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் சிக்கித் தவிக்கும் 311 தமிழர்கள்: தமிழக அரசு தகவல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum