Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பிள்ளைத் தாய்ச்சி அம்மன்

Go down

பிள்ளைத் தாய்ச்சி அம்மன்   Empty பிள்ளைத் தாய்ச்சி அம்மன்

Post by oviya Thu Apr 23, 2015 2:49 pm

பொன்மேனி ஓர் அப்பாவி விவசாயி. கொடுமைக்காரன் ஒருவனிடம் அவசரத் தேவைக்கு நிலத்தை அடமானம் வைத்ததையும், அவன் நிலத்தை அபக ரித்துக் கொண்டதோடு, கொடுமைகள் செய்வதையும் எண்ணி எண்ணி அழுதான். அன்று சிவராத்திரி. குடும்பத்தோடு கோயிலுக்குப் போகலாம் என்று முடிவு செய்த நேரத்தில், அந்தக் கொடுமைக்காரன், ‘‘இன்று பொழுது விடிவதற்குள், பூங்காவனத்தை உழுது, விதை விதைத்து முடி. இல்லாவிட்டால் குடும்பத்தோடு தொலைத்து விடுவேன்‘‘ என்று மிரட்டினான். விதியை நொந்தபடி ‘‘ஈஸ்வரா… காளியாத்தா உங்கள வந்து பாக்கும் பாக்கியம் எனக்கு இன்னைக்கு இல்லாம போச்சே… இந்த நட்ட நடுகாட்டில் நீங்கதான் துணை’‘ என்றபடி ஏர் பிடித்து உழத் தொடங்கினான்.

தனது பக்தன் பொன்மேனியின் மன வேதனையை உணர்ந்த பரமன் சின்னதாய் ஒரு திருவிளையாடலுக்குத் தயாரானார். உலக ஜீவராசிகளை எல்லாம் தனது கருணை பொங்கும் கண்களால் பார்த்த பராசக்தி, தாய்மை உணர்வால் நெகிழ்ந்தாள். எல்லா உயிர்களையும் தனது அருள் கரங்களால் வருடினாள். உலகம் ஒருமுறை சிலிர்த்துக் கொண்டது. ‘மனதில் தோன்றும் தாய்மை உணர்வே இத்தனைப் பிரியமாய் வெளிப்படுகிறதே… வயிற்றில் கருவாய் சுமந்தால் எப்படி இருக்கும்?’ ஒருமுறை எண்ணிப் பார்த்த உலக நாயகிக்கு அந்த ஆசை பற்றிக்கொண்டது. அதை ஈசனிடமும் வெளியிட்டாள்.

சாதாரணப் பெண்ணாக கரு சுமக்க அம்பிகை ஆசைப்படுவதை அறிந்த ஐயன், உலக உயிரனைத்தையும் கருவாக்கி அவள் வயிற்றில் வைத்தான். கர்ப்பிணியான தாய், உலகை ஒருமுறை நடந்து வலம் வர விரும்பினாள். ஈசன் இசைந்தார். அம்மை சாதாரணப் பெண்ணாக மாறி, இடுப்பில் கூடையை இடுக்கிக் கொண்டு நடக்கத் தயாரானாள். கர்ப்பிணிப் பெண்ணைத் தனியாக வெளியே அனுப்ப முடியுமா? ஈசன், சூலத்தை தடியாக மாற்றி எடுத்துக் கொண்டு, மானிடனாய் வடிவமெடுத்து துணையாக நடந்தார். ஒரு உயிரை வயிற்றில் சுமப்பவளுக்கே மேல் மூச்சு, கீழ் மூச்சு வாங்கும். உலக உயிரையெல்லாம் சுமந்து நடப்பதென்பது லேசுபட்ட காரியமா?

கணவனின் தோள்பற்றி நடந்த அன்னை களைப்படைந்தாள். தாகத்தால் தவித்தாள். மாமரமும் வேப்ப மரமும் இலுப்பை மரமும் சூழ்ந்த… நறும ணம் வீசும் பூங்காவனத்தை அடைந்தாள். மரத்தடியில் அமர்ந்தாள். ‘‘இந்த இடம் இதமாய் இருக்கிறது. கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன். தாக மாய் இருக்கிறது, தண்ணீர் கொண்டு வாருங்கள்’’ என்றாள். ‘வேஷம் போட்டாயிற்று… நடித்துத்தானே ஆகணும்’ நாடகத்தின் முக்கிய கட்டத்தை உணர்ந்த ஈசன் தண்ணீர் கொண்டு வரத் தயாரானார். அங்கே உழுது கொண்டிருந்த பொன்மேனியிடம், ‘‘இங்கே தண்ணீர் எங்கு கிடைக்கும்’’ என்று கேட்டார்.

‘‘தண்ணியா சாமி… கூவத்த தாண்டி போவனும். இது யாரு… உம்பொஞ்சாதியா? வா சாமி, நான் கூட்டிட்டு போறேன்’’ என்றபடி முன்னே நடந்தான். உலகை வழி நடத்தும் ஈசன், தன் பக்தனைப் பின் தொடர்ந்தார். மரத்தடியில் அமர்ந்த மகேஸ்வரி கால் நீட்டிப் படுத்தாள். கண்களை மூடி தன் வயிற்றை கவனித்தாள். தன் கருவில் கவலையில்லாது நகரும் ஜீவன்களைக் கண்டாள். அவைகளின் நகர்வு ஏற்படுத்தும் சிலிர்ப்பை ஆனந்தமாய் அனுபவித்தாள். இந்தப் பேரானந்தம், தாய்மை தரும் சந்தோஷம், தொடர்ந்து நீட்டிக்க வேண்டும் என்று முடிவு செய்தாள். அப்படியே ஆகாயத்தைப் பார்த்தபடி கால் பரப்பி படுத்தாள். மெல்ல… புற்றாக மாறினாள். ஆற்றைத் தாண்டி தண்ணீர் கொண்டு வந்த ஈசன், நடந்ததை உணர்ந்து சிரித்தார்.

தாய்மையின் பெருமை உணர்ந்து வியந்தார். பொன்மேனியோடு மரத்தடிக்கு வந்தார். அருவமாய் அம்மையின் அருகிலேயே அமர்ந்தார். அப்படியே மறைந்தார். கர்ப்பிணியைக் காணாது பொன் மேனி, ‘‘எங்க சாமி உம் பொஞ்சாதி…’’ என்று கேட்டபடி திருப்பினான். தன்னோடு வந்த வரையும் காணாது குழம்பினான். ‘நடந்தது கனவா இல்லை நனவா?’ என்று ஒன்றும் புரியாமல் தவித்த பொன்மேனி, கொடுமைக்காரனின் நினைவு வர உடனே தன் வேலையைத் தொடர்ந்தான். பொழுது புலரும் வேளை. ஏரின் மழு எதிலோ பூப்போல் இறங்க ரத்தம் பீறிட்டு வந்தது. இதைக் கண்டு அலறிய பொன்மேனி அப்படியே மயங்கிச் சரிந்தான். அலறல் சத்தம் கேட்டு ஊர் திரண்டது. அவனை உலுக்கி எழுப்பியது. அவன் பேச முடியாது தவித்தான்.

பொங்கி வரும் குருதி கண்டு ஊர் மிரண்டது. தவித்தது. அன்னை தன்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினாள். ஒரு கிழவியின் குரல் வழியே பேசினாள். ‘‘நான், அங்காள பரமேஸ்வரி. நான் இங்கே புற்று வடிவத்தில் அமர்ந்துவிட்டேன். இது என் இடம். இங்கே எனக்கு கோயில் கட்டி என்னை வழிபடுங்கள்’’ என்றாள். நடந்ததை அறிந்து பொன்மேனி கண்ணீர் விட்டு அழுதபடி, ‘‘தாயே, தெரியாம ஏரால உழுதுட்டேன். என்ன மன்னிச்சிடு’’ என்றான். உடனே அன்னையும் ‘‘கவலைப்படாதே, இனி நீயும் உன்னைத் தொடர்ந்து உன் வம்சமும் எனக்கு தொடர்ந்து சேவை செய்து வாருங்கள். நான் உன்னையும் மக்களையும் இங்கிருந்து காப்பேன்’’ என்றாள்.

கொடுமைக்காரன் அம்மன் அருள் பெற்ற பொன்மேனியிடம் மன்னிப்புக் கேட்டு ஒதுங்கிக் கொண்டான். தனது விளையாட்டின் மூலம் பக்தனின் துயரையும் தீர்த்து, தாய்மையின் உயர்வையும் உணர்த்திய ஈசன் அன்னையுடனேயே உறைந்தார். ஊர் மக்களும் புற்று வடிவில் சுயம்புவாய் தோன்றிய அம்மனுக்கு கோயில் கட்டி வழிபடத் தொடங்கினார்கள். பொன்மேனி பூசாரியாகி அன்னையின் பணியில் தன்னை இணைத்துக் கொண்டான். பூங்காவனத்தில் தோன்றியதால் அன்னையை ‘பூங்காவனத்தம்மன்’ என்றும் அழைக்கிறார்கள். இன்றும் தங்கள் குறைகளைச் சொல்லி, வரம் கேட்டு வருகிறார்கள். அன்னையும் தனது குழந்தைகளுக்குத் தாயன்போடு வேண்டியதை தந்து வருகிறாள். அன்னையை, பிள்ளைத் தாய்ச்சி அம்மன் என்றே அழைத்து வழிபடுகிறார்கள்.

எங்கிருக்கிறாள் பூங்காவனத்தம்மன்? திருவள்ளூர் அருகே உள்ள Putlur Angalammanராமாபுரத்தில். வாருங்கள் அன்னையை தரிசிப்போம். அன்னைக் குடிகொண்டுள்ள ராமாபுரம், சின்னஞ்சிறு கிராமம். நாம் கோயிலுள் எதிரே உள்ள குளத்தில் கை, கால் கழுவிக் கொண்டு உள்ளே நுழையும் போதே மஞ்சள் வாசனை நாசியைத் தீண்டுகிறது. அழகிய நுழைவாயில். கோயில் கொடி மரத்தின் எதிரே பெரிய சூலம். அதில் செறுகப்பட்ட எலுமிச்சம் பழத்தின் சாறு அந்தப் பகுதியை ஈரமாக்கிக் கொண்டிருக்கிறது. சூலத்தின் எதிரே கற்பூரம் தகதகவென்று எரிந்து கொண்டிருக்கிறது.

அது, தன்னை உருகி இழந்து அன்னையோடு இரண்டறக் கலப்பது எப்படி என்று மவுனமாய் சொல்லிக் கொண்டிருக்கிறது. அப்படியே வலப்புறமாக நகர, தல விருட்சமான வேம்பும் அதன் அருகிலேயே அரச மரமும் இருக்கின்றன. இவற்றில் ஏராளமான தொட்டிலும், மஞ்சள் கயிறும் கட்டப்பட்டிருக்கின்றன. அத்தனையும் திருமணம் வேண்டி நிற்கும் பெண்களின் பிரார்த்தனை; குழந்தை வரம் கேட்கும் பெண்களின் வேண்டுதல். அதற்கு கீழே புற்று, நாகர் சிலை. அதன் மீது பெண்கள் மஞ்சளையும் குங்குமத்தையும் கொட்டி வழிபடுகிறார்கள். அடுத்து நாகாத்தம்மன் அமர்ந்திருக்கிறாள். அன்னையிடம் தமது வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி கயிறு கட்டிக் கொள்கிறார்கள்.

கோயில் பின்புறமும் வேப்ப மரம் உள்ளது. இங்கும் மஞ்சள் கயிறும் தொட்டிலும் நிறைய கட்டப்பட்டுள்ளன. மரத்தின் கீழே தற்போது வைக்கப்பட்டி ருக்கும் மாரியம்மன் சிலையைக் கண்டுகளிப்புடன் வணங்கலாம். அடுத்து நாம் தரிசிப்பது கோயிலின் இடப்புறம் உள்ள நவகிரகங்களை. அரச மர விநாயகரை வணங்கி உள்ளே பிராகார மண்டபத்தை அடைகிறோம். அதில் கொடிமரம். அருகில் பாவாடைராயன். கொஞ்சம் முன்னால் பலிபீடம். கோயில் உள்ளே ஈசனும் இருப்பதால் நந்தி தேவனும் இருக்கிறார். தங்கள் குறைகளை அவரது காதில் சொல்ல கூட்டம் வரிசை கட்டி நிற்கிறது.

அடுத்து மகா மண்டபம். இதில் திருவள்ளுவர், விநாயகர், மதுரை வீரன், வள்ளி-தெய்வானை ஆகியோரோடு முருகன், தட்சிணாமூர்த்தி, துவார பாலகிகளை வணங்கி அருள் பெறலாம். கற்பலகைகளால் கட்டப்பட்ட இந்த மண்டபத்தில் துலாபாரமும் உள்ளது. பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேறியவுடன் தாங்கள் வேண்டிக் கொண்டபடி எடைக்கு எடை பொருளை அன்னைக்கு சமர்ப்பணம் செய்கிறார்கள். காய்கறி, சர்க்கரை, வெல்லம் என அந்தப் பட்டியல் நீளுகிறது.

அடுத்து அர்த்த மண்டபம். இங்கே நமக்கு தரிசனம் தருவது புற்று வடிவில் சுயம்புவாகத் தோன்றிய பூங்காவனத்தம்மன். மல்லாந்து படுத்திருக்கும் கர்ப்பிணிப் பெண்ணாக அன்னையைக் காணும்போது மனம் நெகிழ்ந்து போகிறது. அவள் வாய்த்திறந்து கிடப்பதைப் பார்க்கும் போது, குழந்தையை சுமக்கும் நிறைமாத கர்ப்பிணியின் அயர்ச்சி மனக்கண்ணில் ஒரு நிமிடம் வந்து போகிறது. ஒவ்வொரு பெண்ணையும்… தாயையும் கடவுளாக வணங்க வேண்டும் என்று தலைக்கு மேலே தாமே உயர்கின்றன நம் கரங்கள். சுயம்புவாக புற்று வடிவில் தோன்றியுள்ள அன்னை, மனித உடலின் அத்தனை உறுப்புகளும் கொண்டு காட்சித் தருகிறாள். அன்னையருகில் கூடையும் சூலமும் இருக்கிறது.

மஞ்சளாய் சிவப்பு சேலையோடு படுத்திருக்கும் அன்னையின் காலடி பணிந்து, மடியேந்தி எலுமிச்சம் பழம் பெற்றுச் செல்பவர்கள் குழந்தைப் பாக்கி யம் பெறுகிறார்கள். அன்னைக்கு வளையல் கொடுத்து அவளது அன்பைப் பெறுபவர்கள் ஏராளமானோர். அன்னைக்குப் பின்னால் கர்ப்ப கிரகம். இதன் மேற்கூறை மரத்தால் கட்டப்பட்டுள்ளது. இங்கே அங்காள பரமேஸ்வரியும், நடராஜரும், விநாயகரும் அமர்ந்து அருள்கின்றனர். கற்களாலான இந்த மூலவர் விக்ரகங்கள் முன்னால் அன்னையின் உற்சவர் விக்ரகமும் அன்னையின் தோழி மற்றும் கபாலம் அமைந்துள்ளன.

தீப ஒளியில் இவர்களின் தரிசனம் நமக்கு வார்த்தையாக்க முடியாத மயக்கத்தைத் தருகிறது. பூங்காவனத்தம்மனின் பாதம் தொட்டு வணங்கும் போது மனம் லேசாகிறது. உலகம் தாய்மை உணர்வால், பெண் என்னும் மகா சக்தியின் கருணையால்தான் இயங்குகிறது என் பதை உணர முடிகிறது. இவள் நமக்கு மிகவும் நெருக்கமானவள். கோயிலின் முன்னால் விழுந்து வணங்கும் போது தாய்மையின் அருள் பெற்ற ஆனந்தத்தில் மனம் திளைக்கிறது. சென்னை ஆவடி – திருவள்ளூர் வழியில் காக்களூர் நிறுத்தத்திற்கு முன்பாக உள்ளது ராமாபுரம் என்ற புட்லூர். ஒரு முறை சென்று அன்னையைப் பாருங்கள். உள்ளம் கொள்ளை போகும். நெஞ்சில் நிம்மதி குடியேறும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum