Top posting users this month
No user |
Similar topics
அம்பர்நாத்தில் சிவலிங்கம் இல்லாத சிவன் கோவில்…
Page 1 of 1

மகாராஷ்டிர மாநிலத்தில் முக்கிய பெருநகரான மும்பைக்கு புறநகராக SDC10732விளங்கும் அம்பர்நாத் என்ற இடத்தில் பழங்கால சிவன் கோவில் ஒன்று உள்ளது. தலத்தின் பெயரும் அம்பர்நாத். அம்பர் என்றால் ஆகாயவெளி நாதர் என்றால் இறைவன்.
இங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கமோ, நடராசர் சிலையோ காணப்படவில்லை. ஈசன் அணியும் புலித்தோல் போலத் தரையை அமைத்திருக்கிறார்கள். கோவிலைச் சுற்றிலும் மாமரங்கள், நான்கு வாயில்களில் மேற்கு வாயிலில் மட்டும் நந்தி தேவர் உள்ளார்.
இதன் வழியாக உள்ளே செல்லும் பக்தர்களுக்கு அர்ச்சகர் மஞ்சள் கயிறைக் கட்டி விடுகிறார். சுற்றிலும் சாம்பிராணி ஊதுபத்தி வாசனை வருகிறது. கருவறை என்று சொல்லப்படும் இடத்தில் சிறிய பள்ளம் காணப்படுகிறது. இந்த பள்ளத்தை தான் சிவபெருமான் என்று கூறுகின்றனர்.
கருவறை சுற்று தாழ்வான பகுதியில் உள்ளது. பள்ளத்திற்கு பூ ஜைகள் எதுவுமே கிடையாது. அருகில் உள்ள வெட்ட வெளிமேடையில் சிவபக்தர்கள் பாடிக் கொண்டே ஆலயத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில் கொங்கன் என்ற பகுதியை ஆட்சி செய்த சில்காரா அரச பரம்பரையில் வந்த சித்தராஜன் கடம்பவன அரசர்களைப் போர் செய்து வெற்றி பெற்றான். அந்த வெற்றிக்குக் காணிக்கையாக இந்த ஆலயத்தை கி.பி. 1060 -ல் அமைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கிற இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடக்கும். மும்பை வாசிகள் அனைவரும் இங்கே கூடுவார்கள். அம்பர்நாத் ரெயிலடியிலிருந்து மிக அருகில் உள்ளது. மும்பை செல்வோர் வணங்கி வர வேண்டிய அதிசய கல்வெட்டுக் கோயில் இது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum