Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இறக்கை சிவலிங்கம்!

Go down

இறக்கை சிவலிங்கம்!          Empty இறக்கை சிவலிங்கம்!

Post by oviya Sat Apr 11, 2015 2:31 pm

கோவை மாவட்டம் அன்னூரிலுள்ள மன்னீஸ்வரர் கோயிலில், பறவை போல இறகுகளுடன் கூடிய லிங்க அமைப்பில் சிவபெருமான் காட்சி தருகிறார்.
தல வரலாறு: வனமாக இருந்த இப்பகுதியில் அன்னி என்ற சிவபக்தன், வேட்டையாடும் தொழில் செய்து வந்தான். ஒருநாள், அவன் வேட்டைக்குச் சென்றபோது, விலங்குகள் ஏதும் சிக்கவில்லை. பசியால் களைப்படைந்தவன் ஓரிடத்தில் அமர்ந்தான். சாப்பிடுவதற்காக அங்குஇருந்த வள்ளிக்கிழங்கை கோடரியால் வெட்டினான். கிழங்கை வெட்டிய பிறகும், அது அளவில் குறையாமல் அப்படியே இருந்தது. மேலும் மேலும் அதை வெட்டவே, கிழங்கிலிருந்து ரத்தம் வெளிப்பட்டது. அதிர்ந்த வேடனிடம் அசரீரியாக ஒலித்த குரல், "" இனி உயிர்களைக் கொல்லும் கொடிய பாவத்தை செய்யாதே! இதுவரையில் நீ செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விட்டது,'' என்றது.
வேடன் மன்னனிடம் சென்று நடந்த சம்பவங்களைத் தெரிவித்தான். அங்கு வந்த மன்னன் ரத்தம் வெளிப்பட்ட இடத்தில் தோண்டியபோது, மண்ணிற்கு அடியில் லிங்கம் இருந்ததைக் கண்டான். அதை வெளியில் எடுக்க முயற்சித்தான், முடியவில்லை. லிங்கத்தின் மீது சங்கிலியைக் கட்டி, யானையைக் கொண்டு இழுத்தான். ஆனால் அசைக்கக்கூட முடியவில்லை. அன்றிரவு மன்னன் கனவில் தோன்றிய சிவன், தான் அவ்விடத்திலேயே இருக்க விரும்புவதாக கூறினார். எனவே, மன்னன் லிங்கம் இருந்த இடத்திலேயே கோயில் கட்டி வழிபட்டான். வேடன் செய்த பாவச்செயலை மன்னித்ததால் இங்குள்ள சிவன், "மன்னீஸ்வரர்' என்று பெயர் பெற்றார் என்று சொன்னாலும், இந்தச் சொல்லுக்கு "நிலையானவர்' என்ற பொருளே சரியானது.
இறக்கை லிங்கம்: கைலாச விமானத்தின் கீழ் மேற்கு நோக்கி சிவலிங்கம் உள்ளது. அதன் மேற்பகுதியில் சங்கிலி கட்டிய தடமும், உச்சியில் கோடரியால் வெட்டப்பட்ட தடமும் இருக்கிறது. மணல் நிறத்தில் இருக்கும் இந்த லிங்கத்தின் இருபுறமும் பறவை போல, இறகு வடிவம் இருக்கிறது. உற்றுப் பார்த்தால் கருடன் தனது இறக்கைளை மடக்கி அமர்ந்திருப்பது போல காட்சியளிக்கிறது. கருடன் கூர்மையான பார்வை கொண்டது. எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், கீழே இருக்கும் மிகச்சிறிய பொருளையும் கவனிக்கக்கூடியது. அதுபோல, சிவனும் நாம் யாருக்கும் தெரியாது என்றெண்ணி செய்யக்கூடிய தவறுகளையும், பாவங்களையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதை இந்த வடிவம் உணர்த்துகிறது. செய்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைக்க வேண்டுபவர்கள், இவரது சந்நிதியில், "இனியும் பாவம் செய்ய மாட்டேன்' என உறுதி எடுத்துக் கொள்ளலாம்.
தாய்க்கு நேரே மகன்: அம்பாள் அருந்தவச்செல்வி தனிச்சந்நிதியில் இருக்கிறாள். வெள்ளிதோறும் இவளுக்கு ஊஞ்சல் உற்ஸவம் நடக்கிறது. கன்னிப்பெண்கள் நல்ல கணவர் கிடைக்க வேண்டி, இந்த உற்ஸவத்தில் கலந்து கொள்கிறார்கள். பொதுவாக சிவன் சந்நிதி கோஷ்டத்தில் காட்சி தரும் துர்க்கை, இங்கு அம்பாள் சந்நிதி கோஷ்டத்தில் இருக்கிறாள். அம்பாள் சந்நிதி எதிரில் விநாயகர் சந்நிதி இருக்கிறது. இவர் தாயைப் பார்த்தபடி இருப்பதால், இவரிடம் வேண்டிக்கொள்ளும் பிரார்த்தனைகள் நிறைவேறும் என்கிறார்கள்.
சூரிய சந்திர பூஜை: கோயில் ராஜகோபுரத்தின் அருகில் சூரியன், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. தமிழ் மாத முதல் ஞாயிறன்று சூரியனுக்கும், முதல் திங்களன்று சந்திரனுக்கும் அதிகாலையில் விசேஷ பூஜை நடக்கிறது. அமாவாசை தோறும் சிவனுக்கு விசேஷ பூஜை உண்டு. நவக்கிரக மண்டபத்தில் கிரகங்கள் அனைத்தும், சூரியனைப் பார்த்தபடி இருக்கின்றன. பிரகாரத்தில் பைரவர், தட்சிணாமூர்த்தி, நடராஜர், சுப்பிரமணியர், ஆஞ்சநேயர், நால்வர், திருநீலகண்டர், சர்ப்பராஜர் சந்நிதிகள் உள்ளன. கல்வெட்டுக்களில் இவ்வூர் "மேற்றலைத் தஞ்சாவூர்' என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இருப்பிடம்: கோவை- சத்தியமங்கலம் ரோட்டில் 32 கி.மீ., தூரத்தில் அன்னூர். பஸ் ஸ்டாண்ட் அருகில் கோயில்.
திறக்கும் நேரம்: காலை 6.00- 1.00, மாலை 4.30 - 8.30.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum