Top posting users this month
No user |
Similar topics
மைத்திரியின் 100 நாட்கள் நல்லாட்சியில் 17 தமிழர்கள் விமானநிலையத்தில் கைது! பா.அரியம் பா.உ
Page 1 of 1

இந்த நாட்டில் இன்னுமொரு தேர்தல் வந்து அரசியலில் ஸ்திரமான தன்மை வரும் வரைக்கும் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் இலங்கை வருவதனை தவிர்த்துக் கொள்வது காலத்தின் கட்டாயமாகும் என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார்.
நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து ரகுபதி கனகசூரியம் கைது செய்யப்பட்டமை பற்றி கருத்துக் கூறும் போதே இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கருத்துரைக்கையில்..
நேற்று புதன்கிழமை காலை கொழும்பு கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த சவுதியில் தொழில் புரியும் ரகுபதி கனகசூரியம் (வயது 34) என்பவர் மத்திய கிழக்கு நாடான சவுதிக்கு தனது வறுமை நிமித்தம் தொழிலுக்காகச் சென்று மீண்டும் நாடு திரும்பும் போது இலங்கை புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அழைத்துச்
செல்லப்பட்டிருக்கின்றார் என்ற செய்தியினை கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலையத்தினுடாக அவரது வீட்டிற்கு தெரியப்படுத்தியிருக்கின்றார்கள்.
இந்த நாட்டிலே தற்போது நல்லாட்சி நடைபெறுகின்றது என்று கூறுகின்றார்கள்.
அவ்வாறு நல்லாட்சி நடைபெறுமாக இருந்தால் இவ்வாறான கைதுகள் எவ்வாறு நடைபெறும் இங்கு கைது செய்யப்பட்டவர் பல தடவைகள் இந்த விமான நிலையத்தினூடாக மத்திய கிழக்கு
நாடுகளுக்கு சென்று வந்திருக்கின்றார்.
ஆனால் நேற்று நாடு திரும்பிக் கொண்டிருக்கும் போது புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த நாட்டிலே பல இன்னல்களை அனுபவித்த மக்கள் தங்களது நிலைமையை சீர்செய்வதற்காக தமது உறவுகளை பிரி்ந்து உழைப்பிற்காக சென்று தமது உறவுகளிடம் வரும் வேளை இவ்வாறான கைதுகள் இடம்பெறுவதனை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாததொன்றாகும்.
புதிய ஆட்சி அதிகாரத்தில் வந்த பின்னர் இந்த நாட்டிலே நல்லாட்சி நடைபெறுகின்றது.
என்று கூறும் இந்த அரசாங்கத்தில் 100 வது நாளான நேற்றுடன் 17வது கைதாக இவரது கைது இடம்பெற்றிருக்கின்றது.
ஆகவே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இங்கு ஒரு ஸ்திரமான அரசியல் அதிகாரம் வரும் வரைக்கும் இந்த நாட்டிற்குள் பிரயாணத்தை மேற்கொள்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் கூறினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நல்லாட்சியில் குழப்பம்?
» இந்தியாவில், உணவு தவிர்ப்பு போராட்டம் நடத்தி வரும் தமிழர்கள் கைது
» நல்லாட்சியில் எமக்கும் பிரச்சினைகள் உள்ளன: ஊவா முதலமைச்சர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum