Top posting users this month
No user |
Similar topics
கெஜ்ரிவால் நடத்திய பேரணியில் பலர் முன்னிலையில் தற்கொலை செய்துகொண்ட விவசாயி
Page 1 of 1

டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி நடத்திய பேரணியில் ராஜஸ்தானைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் இன்று ஆம் ஆத்மி கட்சி பேரணி நடத்தியது.
அப்போது ஜந்தர் மந்தர் பகுதியில் நடந்த கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கலந்து கொண்டார்.
கெஜ்ரிவால் வந்த சிறிது நேரத்திலேயே அருகில் இருந்த மரமொன்றில் ராஜஸ்தான் மாநிலத்தின் தவுசாவைச் சேர்ந்த கஜேந்திர சிங் என்ற விவசாயி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மரத்தில் அவர் தூக்கிட்டுக் கொள்ளும் போது மரத்தின் கீழே இருந்தவர்கள் வேண்டாம் என்று தடுக்க முயற்சி செய்துள்ளனர்.
ஆனால் யாருடைய பேச்சுக்கும் செவிசாய்க்க மறுத்த கஜேந்திர சிங் கழுத்தில் துணி இறுக்க கீழே தொங்கினார்.
உடனடியாக இவரை ராம் மனோஹர் லோகியா மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர், ஆனால் அவர் இறந்து விட்டதாக அங்கு தெரிவிக்கப்பட்டது.
பேரணியில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் இருந்த போதே இந்தத் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்த நபர் எழுதிய குறிப்பு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில், நடப்பு ஆண்டில் விவசாயம் தோல்வியடைந்ததால் தனது தந்தை வீட்டை விட்டு துரத்தியதால் மனமுடைந்து இந்த தீவிர முடிவுக்கு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், விவசாயியின் தற்கொலைக்கு பொலிசார் தான் காரணம் என குற்றம் சாட்டியுள்ளார்.
ஆனால், விவசாயியின் தற்கொலையை தடுக்க தவறி விட்டதாக காங்கிரஸ் புகார் தெரிவித்துள்ளது.
மேலும், விவசாயியின் தற்கொலைக்குப் பின்னரும் பேரணி நடந்தது வெட்கக் கேடானது என்றும் காங்கிரஸ் கட்சி விமர்சனம் செய்துள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்ட மாணவர்கள்!
» ஓரினச்சேர்க்கை கணவரின் கொடுமை தாங்க முடியவில்லை: தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவர்
» 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை: வாட்ஸ் ஆப்பில் உருக்கமான தற்கொலை கடிதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum