Top posting users this month
No user |
Similar topics
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யவுள்ள மகிந்த!
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் இன்று முறைப்பாடொன்றை செய்யவுள்ளார்.
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் அவருக்கெதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டுக்கு எதிராகவே முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகள் இம்முறைப்பாட்டை மேற்கொள்ளவுள்ளனர்.
ஜனநாயக முன்னணியினால் முன்னாள் ஜனாதிபதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டடுள்ள முறைப்பாடு தொடர்பாக அவரை அழைப்பதில் தோல்வியடைந்தால் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
எனவே இது தொடர்பாக இன்று முன்னாள் ஜனாதிபதியின் சட்டத்தரணிகளினால் முறைப்பாடு ஒன்று மேற்கொள்ளப்படவுள்ளது.
முறைப்பாடுகளுக்கு எதிராக முறைப்பாடு செய்த மகிந்த
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று மதியம் இலஞ்ச, ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
அவரின் சட்டத்தரணிகள் இன்று ஆணைக்குழுவிற்கு சென்று அவருக்கெதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகளுக்கு எதிராக முறைப்பாடுகளை செய்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடக இணைப்புச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சவுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தாலும் ஆணைக்குழு அவருக்கு அழைப்பாணை அனுப்ப முடியாது. இந்த விடயம் தொடர்பில் ஆணைக்குழுவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி விசாரணை ஆணைக்குழுவிற்கு அழுத்தங்கள் கொடுக்கும் முயற்சிகள் காணப்படுவதாகவும் வெலிவிட்ட குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் நேரத்தில் திஸ்ஸ அத்தநாயக்கவை அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமித்தமை தொடர்பில் ஆணைக்குழு அண்மையில் முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பாணை விடுத்திருந்தது.
நாடாளுமன்றத்தில் இதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டதை அடுத்து அழைப்பாணையை இரத்துச் செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதியிடம் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொள்ள ஆணைக்குழுவின் அதிகாரிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» ராஜிதவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு
» இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் கோத்தபாய- ஞாபகம் இல்லை கால அவகாசம் தேவை- சிறந்த முறையில் பணியாற்றிய அரச அதிகாரி நான்
» 600 மில்லியன் யூரோக்கள் வீணாக செலவிடப்பட்டுள்ளது!– லஞ்ச ஆணைக்குழுவில் முறைப்பாடு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum