Top posting users this month
No user |
Similar topics
கணவன்-மனைவி ஒற்றுமைக்கான வழிபாடு
Page 1 of 1
கணவன்-மனைவி ஒற்றுமைக்கான வழிபாடு
திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீசுவரர் தலம், கணவன்-மனைவி ஒற்றுமைக்கு வழிபட மிகச் சிறந்த தலமாகும். இது சதய நட்சத்திரத்திற்குரிய தலமும் ஆகும். எனவே சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சதய நட்சத்திரத்தன்று இங்கு சென்று சனீஸ்வரருக்கும் நாகராஜருக்கும் அர்ச்சனை செய்யலாம்.
இத்தலத்தின் வரலாறு வருமாறு:- கேதார கவுரி இறைவனிடம் சுவாமி தங்கள் உடலில் இடப்பாகம் எனக்குத் தர வேண்டும் எனக் கேட்டார். அதற்கு சிவபெருமான் தேவி நீ செங்குன்று சென்று அங்கு மரகத லிங்கத்தை வழிபட்டு வா. உமக்கு அவ்விடத்தில் நீ கேட்ட வரத்தை அருளுவோம் என்று கூறினார். கேதார கவுரி இந்த தலம் அடைந்து மரகத லிங்கத்தை வழிபட்டு வந்தார்.
இறைவன் தனது உடலில் இடப்பாகத்தில் இடமளித்தார். இவ்வாறு அர்த்த நாரீஸ்ரர் வடிவத்தைத் தரிசிக்கும் கணவன்-மனைவி என்றும் ஒற்றுமையுடன் இருக்க அருள்புரிய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். சிவபெருமானும் அவ்வாறே அருள்வதாகக் கூறியருளினார். இத்தலம் முருகப்பெருமான் தலமாகவும் உள்ளது.
முருகப் பெருமானுக்கு செங்கோட்டு வேலவர் என்ற பெயர் வழங்கப்பட்டு வருகிறது. இத்தலம் 108 திருப்பதிகளில் ஒன்று. இந்தக்கோவிலில் நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஆதிகேசவப் பெருமாள் உள்ளார். சில கணவன் மனைவியரிடையே அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படும்.
அத்தகைய தம்பதியினர் இருவருமோ அல்லது ஒருவரோ இந்த தலத்திற்குச் சென்று பவுர்ணமி தினத்தில் தங்கள் இருவரின் பெயர் நட்சத்திரம் கூறி மூலவருக்கு அர்ச்சனை செய்து கொள்ளவும். அர்ச்சனை செய்யும் போது குருக்களிடம் தம்பதிகள் அன்யோன்யத்திற்காக என்று கூறவும். அவர்கள் அதற்குத் தக்கவாறு சங்கல்பம் செய்வார்கள்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கணவன் மனைவி ஜோக்ஸ்
» வாழ மறுத்த கணவன்: 7 பேரை எரித்துக் கொன்ற மனைவி
» முதலிரவில் ஆபாச படம் எடுத்த கணவன்: மனைவி பரபரப்பு புகார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum