Top posting users this month
No user |
Similar topics
இறுதிக்கட்ட யுத்தம் முடியும் வரை இந்தியாவுடன் நெருக்கமான உறவு காணப்பட்டது: கோத்தபாய
Page 1 of 1

நான் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த போது மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் நாட்டின் நன்மையை கருத்திற்கொண்டே செய்தேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆங்கில வார இதழொன்றுக்கு அண்மையில் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் எனக்கு வழங்கப்பட்ட பொறுப்புக்கள் அனைத்தையும் நான் சரிவர செய்து காட்டினேன், மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகவிருந்த முற்பகுதியில் நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதே எனது முக்கிய பணியாக காணப்பட்டது. அதை நான் சரியாக செய்தேன்.
இரண்டாவது பதவி காலத்தில் நகர்ப்புற வளர்ச்சிக்கு எனக்கு கூடுதலான பொறுப்பு வழங்கப்பட்டது. அதையும் நான் சரிவர செய்தேன் என என்னால் தெளிவாக கூறமுடியும்.
யுத்தத்தின் பின்னர் நாட்டில் அமைதியை நிலைநாட்ட என்னால் முடிந்தது எனவும், நாட்டில் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்குவதற்கு அல்லது ஆரம்பிப்பதை தடுப்பதற்கு நாங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம் எனவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் என்ன சொன்னாலும், நாங்கள் மக்களுக்கு தேவையான சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்தோம், குறிப்பாக வட,கிழக்கை இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்கு பாரிய முயற்சிகளை மேற்கொண்டோம்.
யாரும் இந்த உண்மைகளை அங்கீகரிக்கவில்லை, 13 ஆயிரத்திற்கும் மேலதிகமானவர்களுக்கு தண்டனைகளை பெற்று கொடுக்காமல் மறுவாழ்வளித்தோம்.
அது மாத்திரமல்லாது ஜனாதிபதி அவர்களுக்கு மறுவாழ்வளித்து, அவர்களை மீண்டும் சமூகத்தில் ஒன்றிணைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
நாம் வெற்றிகரமான மறுவாழ்வு திட்டத்தை முன்னெடுத்ததுடன், சமூகத்திலும் ஒன்றிணைத்துள்ளோம், ஆனால் இவை தொடர்பில் சர்வதேச அரங்குகளில் இதுவரையிலும் கலந்துரையாடப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
சர்வதேச அரங்குகளில் எங்களுக்கு எதிராக விவாதிக்கப்படுகின்றதே ஒழிய எமக்கு சாதகமாக எதுவும் விவாதிக்கப்படவில்லை.
நான் எனது பொறுப்புக்களுக்கு பின்னால் அதிகாரங்களை பயன்படுத்தவில்லை என அவர் உறுதியாக தெரிவித்துள்ளார்.
நான் நல்லதொரு தீர்வை கொண்டு வருவதற்காக நம்பிக்கையுடன் எனது பொறுப்புக்களை சரியாக செய்து முடித்தேன்.
நான் நகர்ப்புற வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு கொழும்பு நகரில் மேற்கொண்டுள்ள அபிவிருத்திகளை ஒரு கணம் உற்று நோக்குங்கள் என தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர்,
மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக அமைத்த நடைபாதைகள் குறித்து கூட விமர்சனங்கள் எழுந்தன எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தை பொறுத்தவரை அதன் வலுவே மிக முக்கியமான விடயமாக காணப்பட்டதுடன், எந்த அரசாங்கமும் இதனை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுக்கவில்லை.
யுத்தத்தை வெற்றிகொள்ள வேண்டும் என்றால் படையினரின் எண்ணிக்கையை மும்மடங்காக்க வேண்டும் எனவும், திறைசேரி பல பிரச்சினைகளை எதிர்கொண்ட போதிலும் இதனை செய்தே ஆகவேண்டும் என நான் ஜனாதிபதியிடம் கோரினேன்.
நாங்கள் பெருமளவு பணத்தை செலவிடவேண்டியிருக்கும் ஆனால் இதனை செய்யாத பட்சத்தில் நாங்கள் வெற்றிபெற முடியாது என்பதை குறித்தும் நான் அவருக்கு தெளிவாக சுட்டிக்காட்டினேன்.
இந்நடவடிக்கையை அச்சந்தர்ப்பத்தில் மேற்கொண்டிராவிட்டால் நாங்கள் எந்த தந்திரோபாயத்தை பயன்படுத்தியிருந்தாலும் அது வெற்றியளித்திருக்காது.
மேலும் இராஜதந்திர ரீதியில் இந்த யுத்தத்தை தொடர்வதற்கு இந்தியாவை கருத்தில்கொள்ள வேண்டும் என்பதையும், இந்தியாவை எங்களுடன் வைத்திருக்க வேண்டும் என்பதையும் நான் உணர்ந்தேன்.
அதுமாத்திரமல்லாது எந்த நாடும் எங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம் ஆனால் இந்தியா எங்களுக்கு எதிராக திரும்பினால் நாங்கள் யுத்தத்தை தொடரமுடியாது என்பதை நான் உணர்ந்தேன்.
இதன் காரணமாக இந்தியாவை எங்களுடன் வைத்திருப்பதற்கு நாங்கள் திட்டமொன்றை தீட்டிய போதிலும் வெளிவிவகார அமைச்சை பயன்படுத்தும் பாரம்பரிய வழிமுறையை நாங்கள் பின்பற்றவில்லை.
இலங்கையை சேர்ந்த மூவரும் இந்தியாவை சேர்ந்த மூவரும் இணைந்த குழுவொன்றை உருவாக்கினோம் பல விடயங்கள் குறித்து வெளிப்படையாக விவாதித்து உணர்வுபூர்வமான பல விடயங்களுக்கு தீர்வு கண்டோம் என தெரிவித்த முன்னாள் பாதுகாப்பு செயலாளர்,
கருணாநிதி உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்த வேளை இந்திய குழுவிடமிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது.
அவர்கள் தாங்கள் ஜனாதிபதியை சந்திக்க விரும்புவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து நான் ஜனாதிபதிக்கு அறிவித்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டேன்,
அவர்கள் சந்திப்பை மேற்கொண்ட பின்னர் நாங்கள் கனரக ஆயுதங்களை பயன்படுத்தாமல் இராணுவ நடவடிக்கையை மேற்கொள்வோம் என அறிக்கையொன்றை வெளியிட்டோம்.
இதனால் மகிழ்ச்சியடைந்த கருணாநிதி உண்ணாவிரதப் போரட்டத்தை கைவிட்டார் நாங்கள் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தோம்.
யுத்தம் முடியும் வரை இந்தியாவுடன் நெருக்கமான உறவுகள் காணப்பட்டன, பின்னர் புதிய நபர்களின் வருகையினால் இரு நாட்டிற்கும் இடையிலான உறவு பெரிதும் பாதிக்கப்பட்டது என கோத்தபாய ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இலங்கையுடன் நெருக்கமான பொருளாதார உறவை எதிர்பார்க்கின்றோம்: இந்திய பிரதமர்
» இந்தியாவுடன் சிறப்பான உறவை மேம்படுத்திக் கொள்ள விருப்பம்: ஜனாதிபதி
» முடியும் என்றால் முடியும் !
» இந்தியாவுடன் சிறப்பான உறவை மேம்படுத்திக் கொள்ள விருப்பம்: ஜனாதிபதி
» முடியும் என்றால் முடியும் !
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum