Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கொல்கத்தா காளி கோவில்

Go down

கொல்கத்தா காளி கோவில்            Empty கொல்கத்தா காளி கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:48 pm

ஸ்தலவரலாறு:

கொல்கத்தா நகருக்கு புகழ் சேர்த்துகொண்டிருப்பது இந்த காளிகோவில். விவேகானந்தரின் குரு ஸ்ரீ ராமகிருஷ்ணருக்கு ஞானத்தை வழங்கியவள் இந்த காளி. தன்னுடைய குருநாதரான ராமகிருஷ்ணரின் ஆசியால் அமெரிக்கா சென்று ஹிந்து தர்மத்தை பரப்பினார் விவேகானந்தர். விவேகானந்தரின் குருவான ராமகிருஷ்ணரின் புகழ் பரவக்காரணமாக இருந்தவள் இந்த காளிதேவி ஆவாள்.

கொல்கத்தா - மகான்கள் பலர் வாழ்ந்த பூமி. மகான் அரவிந்தரை நினைவூட்டும் அலிப்பூர், ஸ்ரீராமகிருஷ்ணரின் கோவில் உள்ள பேளூர், கொல்கத்தா நகருக்கே தெய்வமாக விளங்கும் அன்னை காளி கோவில் என்று ஆன்மிகச் சுற்றுலாவுக்கு கொல்கத்தா நகரில் பஞ்சமில்லை! இருந்தாலும், சுவாமி விவேகானந்தர், கடவுளைக் கண்டிருக்கிறீர்களா என்று ஸ்ரீராமகிருஷ்ணரிடம் கேட்க, அவர், கடவுளைக் கண்டிருப்பது என்ன; பேசவும் செய்திருக்கிறேனே என்று சுட்டிக் காட்டிய இடமே இக்கோவிலாகும்.

அழகான கொல்கத்தா நகரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த ஹூப்ளி ஆற்றின் கரையில் இந்த காளி தேவி கம்பீரமாக வீற்றிருக்கிறாள். கரைபுரண்டு ஓடும் ஆறு. தண்ணீருக்கு பஞ்சமில்லை. எல்லாம் கங்காமாதாவின் கருணை. கோவிலுக்கு அருகே, குளிப்பதற்கு என்று படித்துறைகள் நிறைய உள்ளன. அவற்றை ஒவ்வொரு பெயரில் காட் என்று அழைக்கிறார்கள்.

மகான் ஸ்ரீ ராமகிருஷ்ணரால் புகழ்பெற்ற இந்தக் கோயில் கட்டப்பட்ட விதமும் சுவாரஸ்யமானதுதான். 1793ல் பிறந்த ராணி ராஷ்மோனி, ஜான்பஜாரைச் சேர்ந்த ஜமீன்தார் பாபுராஜாசந்திர தாஸை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் கணவன் இறந்துவிட ஜமீன்தாரிணியாக நிர்வாகப் பொறுப்பேற்று நன்கு கவனித்து வந்தார்.

அப்போது அவருக்கும் கிழக்கிந்தியக் கம்பெனிக்கும் நடந்த உரசல்கள், மோதல்கள் அந்தப் பகுதியில் வெகு பிரசித்தம். தேவியின் பக்தையான அவர் ஒருமுறை காசிக்குச் சென்று அன்னையை தரிசிக்க எண்ணம் கொண்டார். அதற்கான ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினார். கிட்டத்தட்ட இருபத்து நான்கு படகுகளில் உறவினர்கள் மற்றும் பணியாளர்களுடன் தேவையான பொருள்களுடன் யாத்திரைக்குத் தயாரானார்கள்.

அவர்கள் செல்லவேண்டிய தினத்துக்கு முந்தினநாள் இரவு, ராணி ராஷ்மோனியின் கனவில் தேவி தோன்றினாள். நீ காசிக்கு வந்துதான் என்னை தரிசிக்க வேண்டும் என்று இல்லை இந்த கங்கை நதியின் முகத்துவாரத்தில் எனக்காக ஒரு ஆலயம் எழுப்பி, அதில் என்னை பிரதிஷ்டை செய். அங்கே நான் இருந்து, உன் பக்தியை ஏற்றுக்கொண்டு அருள்தருகிறேன் " என்றாள் அன்னை. அடுத்த நாள், அன்னையின் உத்தரவை செயல்படுத்தினார் ராஷ்மோனி.

கங்கைக் கரையில் இடம் வாங்கப்பட்டது. வெள்ளத்தில் இருந்து பாதுகாப்பாக கோயில் அமைய, அழகான மேடை கட்டி, அதன் மீது கோயிலை அமைத்தார்கள். 1847ல் இருந்து 1855க்குள் கோவிலைக் கட்டி முடித்தனர். 1855 மே 1ம் தேதி அன்னையின் விக்ரஹம் அங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டது. அன்னை ஸ்ரீஸ்ரீ ஜகதீஸ்வரி மஹாகாளி எனப்பட்டாள்.

கோவிலின் பூஜாரியாக, ராம்குமார் சட்டநூபாத்யாய என்பவர் நியமிக்கப்பட்டார். அவருக்கு உதவியாக அவருடைய தம்பி கதாதர் அவருடன் சேர்ந்து கொண்டார். ஆனால், ஒரு வருடத்துக்குள் ராம்குமார் சட்டநூபாத்யாய இறந்துவிடவே, பிரதான பூஜாரியாக கதாதரே நியமிக்கப்பட்டார். அவருடன் அவர் மனைவி சாரதாதேவியாரும் தரைத்தளத்தில் இருந்த மிகச் சிறிய அறையான நஹபத்தில் (இசை அறை) வந்து தங்கினார்.

இன்று அந்த அறை, சாரதா தேவியாரின் நினைவாக அழகுறத் திகழ்கிறது. இந்த கதாதர்தான், ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸராக, உலகம் போற்றும் மகானாகத் திகழ்ந்தவர். சுமார் முப்பது ஆண்டுகள் அன்னையின் பணியில் இருந்தார். கடவுளைக் கண்டிருக்கிறேன் என்று சுவாமி விவேகானந்தருக்கு வழிகாட்டிய ஸ்ரீராமகிருஷ்ணரின் பக்தி சாதனையால், தட்சிணேஸ்வர காளி கோயிலின் புகழ் எல்லா இடங்களிலும் பரவியது.

அன்னை மகாகாளி பவதாரிணி என்று பக்தர்களால் போற்றப்படுகிறாள். சாக்த தந்த்ர சாஸ்திரத்தில் ஒரு வகையின்படி இந்தக் கோவில் அமைக்கப்பட்டுள்ளது. தரையில் சயனித்திருக்கும் சிவனாரின் மார்பில் ஒரு காலை ஊன்றியபடி, சிவந்த நாக்கை நீட்டியபடி, அகல விரித்த கண்களுடன் கையில் தாமரைப் பூ ஏந்தி காளிதேவி காட்சி தருகிறாள்.

அன்னையின் பிரதான கோவிலின் வலப்புறம், கிழக்கு நோக்கிய பன்னிரண்டு சிவன் சந்நிதிகள் உள்ளன. வங்காளக் கோவில் கட்டடக் கலையை பிரதிபலிக்கும் இந்தக் கோவில் வளாகத்தின் வடகிழக்குப் பகுதியில் ராதாகாந்தர் கோவில் ஒன்றும் இருக்கிறது. ராதையும் கண்ணனும் அங்கே தரிசனம் தருகிறார்கள்.

அன்னை காளியை தரிசித்து, ஸ்ரீராமகிருஷ்ணர் நினைவாக எழுப்பப்பட்டிருக்கும் பேளூர் மடத்துக்கும் சென்று வந்தால், இந்த யாத்திரை முழுமை பெறும். பேலூர் மடத்தில்தான், சுவாமி விவேகானந்தர் சமாதிக் கோவிலும் உள்ளது
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum