Top posting users this month
No user |
Similar topics
மன அமைதி தரும் ஊட்டி காசி விஸ்வநாதர் கோவில்
Page 1 of 1

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ளது காந்தல். இங்கு பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் ஆலயம் உள்ளது. இங்குள்ள சித்தர்கள் சமாதி அருள் வாய்ந்தது. நீலகிரி மாவட்டத்திலேயே தட்சிணாமூர்த்தி உள்ள சிவாலயம் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சித்தர்கள் பலர் இங்கு வாழ்ந்து தவம் செய்துள்ளனர்.
எனவே இந்த ஆலயத்தில் பிரார்த்தனை செய்தால் மன அமைதி கிடைக்கிறது என்பது சிறப்பாகும். ஆலயத்தில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதரை மனமுருகி வேண்டினால் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது. மேலும் மனநிம்மதி வேண்டுவோர் இந்த ஆலயத்துக்கு அதிகம் வருகின்றனர்.
இங்குள்ள பாணலிங்கத்தின் மீது இயற்கையிலேயே பூணூல் அணிவது போன்ற ரேகை அமைப்பு படர்ந்திருக்கும். 1000 கல் சிவலிங்கத்திற்கு ஒரு ஸ்படிக லிங்கம் சமமாகும். அதேபோல் 12 லட்சம் ஸ்படிக லிங்கங்களுக்கு ஒரு பாணலிங்கம் சமம் ஆகும். பாணலிங்கம் வடித்தெடுக்கப் படுவதில்லை. பிரம்மா, விஷ்ணு முதலிய தேவர்கள் பூஜித்த புண்ணிய நதிகளான கங்கை யமுனை நர்மதை போன்றவற்றில் லிங்க வடிவிலே உருண்டோடி வரும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த பாணலிங்கமே இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. மற்ற சிவாலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி போல் இல்லாமல் இங்குள்ள தட்சிணாமூர்த்தி சின் முத்திரையோடு காட்சி அளிக்கிறார். சின் முத்திரை அமைப்பின்படி மற்ற மூன்று விரல்களுடன் சேராமல் ஆள் காட்டி விரல், பெருவிரலுடன் இணைந்து இருக்கும்.
சன்னியாசம் பெற , உபதேசம், ஞானம் பெற இந்த யோக தட்சிணா மூர்த்தியை வணங்குவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இங்குள்ள சித்தர்கள் மடத்தை 1882-ம் ஆண்டு ஏகாம்பர தேசிகர் என்பவர் நிறுவினார். சிதம்பரத்தில் பணியிலிருந்த இவர் திடீரென துறவு பூண்டார். அதன்பிறகு நீலகிரி முழுக்க காடுகளிலும், மலைகளிலும் சுற்றித் திரிந்து தவம் செய்தார்.
இறைவனை நினைத்து அடிக்கடி சமாதி நிலை அடைந்து தவத்தில் மூழ்கியதால் சீடர்கள் இவரது பணியை உன்னிப்பாக கவனித்தனர். பின்பு அவரது காலத்துக்குப் பின்னர் வழிவழியாக வந்த சீடர்கள் சித்தர்கள் மடத்தை கவனித்து வந்தனர். ராயபோயர் என்பவர் காலத்தில் இப்போதுள்ள பாணலிங்கம் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டி வழிபாடு தொடங்கியது. இங்கு வாழ்ந்த சித்தர்களின் சமாதி அனைத்தும் கோவில் வளாகத்திற்குள் உள்ளது. பாணலிங்கமே இங்கு மூலஸ்தானத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
திருவிழா :
இந்த கோவிலில் மகாசிவராத்திரி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து தரிசனம் செய்வார்கள். புத்தாண்டு அன்றும் திருவிழா நாட்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதும். பிரதோஷ நாட்களிலும் பக்தர்கள் கூட்டத்துக்கு குறைவில்லை.
பூஜை நேரம் :
தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் கோவில் நடை திறந்திருக்கும்.
புண்ணியம் கிடைக்க :
காசிவிஸ்வநாதருக்கு பால், எண்ணெய், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யலாம். விரதம் இருத்தல், தானதருமம் செய்தல் ஆகியவையை இந்த கோவிலில் செய்தால் புண்ணியம் கிடைக்கும். இவை தவிர வழக்கமான அபிசேக ஆராதனைகளும் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கலாம். சுவாமிக்கு நைவேத்தியம் செய்தும் பக்தர்களுக்கு வழங்கலாம்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அமைதி தரும் ஆன்மீகம்
» மன அமைதி தரும் பாராயண தமிழ் மந்திரங்கள்
» நீங்காத செல்வம் தரும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்
» மன அமைதி தரும் பாராயண தமிழ் மந்திரங்கள்
» நீங்காத செல்வம் தரும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum