Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


ஏற்றம் தரும் கசவனம்பட்டி சித்தர் சுவாமிகள் கோவில்

Go down

ஏற்றம் தரும் கசவனம்பட்டி சித்தர் சுவாமிகள் கோவில் Empty ஏற்றம் தரும் கசவனம்பட்டி சித்தர் சுவாமிகள் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:22 pm

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ளது இவரின் ஜீவசமாதி கோவில். இவ்வூரில் வாழ்ந்து பக்தர்கள் வாழ்வில் பல அற்புதங்கள் நிகழ்த்திய கசவனம்பட்டி ஸ்ரீ மெளன ஜோதி நிர்வாண சுவாமிகளுக்காக இக்கோவில் கட்டப்பட்டுள்ளது.

ஸ்தல வரலாறு: பாரத நாட்டில் பரப்பிரம்மத்தின் முழு அவதாரமாய் தன்னை மறந்து ஆடையணியாமல் உணவருந்தாமல் சித்தர்கள் போல் மிகுந்த ஞானமுள்ள, சக்தியுள்ள மகான்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து மறைந்திருக்கிறார்கள் அப்படிப்பட்ட மகான்கள்,கர்மாக்களின் தாக்கத்தால் துயரத்தில் அவதியுறும் மக்களுக்கு தன் ஆத்ம ஞானத்தாலும் சக்தியாலும் துன்பம் துயரங்களில் இருந்து விடுபடும் முறையை உணர்த்திவிட்டு சென்றுள்ளனர்.அப்படியாக வாழ்ந்து மறைந்த மகான்களில் ஒருவர்தான் சுவாமிகள், இவர் வாழ்ந்த இடம் மிகப்பெரிய காடோ,மலையோ,அருவியோ அல்லாமல் கசவனம்பட்டி என்ற குக்கிராமத்திலேயே வசித்தார்.சுவாமிகள் மிகவும் மெளன நிலையிலேயே இருப்பார் யாரிடமும் பேசமாட்டார் தமிழ் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்துவரும் சாமியார்கள்,மகான்கள் இவரை வந்து வணங்கி விட்டு செல்வார்கள் துன்பங்களினால் தன்னைக்காணவரும் பக்தர்களிடமும் கசவனம்பட்டி சுவாமிகளை சென்று வணங்க வழிமுறை சொல்வர்.

சுவாமிகள் துறவு என்னும் சொல்லுக்கே இலக்கணமாகத் திகழ்ந்தவர்கள் என்று கூறினால் அது மிகையாகாது. இந்த உலகத்திற்கு எந்நிலையில் அவதாரமெடுத்து வந்தார்களோ அந்நிலையிலேயே உலக மக்களுக்குக் காட்சியளித்து அந்த நிலையிலேயே மகாசமாதி அடைந்தவர்கள் நம் சுவாமிகள்.

நிர்வாண நிலையில் இருந்தாலும் அவரை ஊர்மக்கள் அன்புடன் உபசரித்தனர் உற்றார் உறவினர் போன்று பேணிக்காத்தனர் அத்தகைய
பெருமை ஊர்மக்களையும் பக்தர்களையுமே சாரும் 85 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு கிழக்கே குட்டத்து ஆவரம்பட்டி காடு என்ற இடத்தில் 12 வயது மதிக்கத்தக்க தோற்றத்தில்தான் மக்கள் பார்த்தனர் இவர் பிறந்த வருடம் இடம் யாருக்கும் சரியாக தெரியாது சிறுவயதிலேயே ஆடைகளைத்துறந்து சாமியார் போல சுவாமிகள் திரிந்தார் அந்த வழியாக ஆடு மாடு மேய்ப்பவர்கள் சிறுபிள்ளையாக இருந்த இவருக்கு உணவு கொடுத்து மகிழ்ந்தனர்.பக்கத்தில் இருந்த பல கிராமங்களுக்கு சென்ற இவர் இறுதியாக மக்களால் அழைத்து வரப்பட்ட இடம் கசவனம்பட்டி கிராமம் ஆகும்.

சுவாமிகள் ஆடைகள் எதுவும் இல்லாமல் இருப்பார் எந்த ஆடை கொடுத்தாலும் சிறுவயதில் கிழித்து வீசியதுண்டு.பிறவிக்கோலத்துடனயே இருப்பதைப்பார்த்து அவரை ஒரு அவதார புருஷராக மகானாக மக்கள் ஏற்கதொடங்கினர் கஷ்டங்களை சொல்லத்தொடங்கினர்.சுவாமிகள் அதிகம் பேசாவிட்டாலும் தம்மிடம் வரும் பக்தர்களிடம் நடக்கும் போ என்று ஓரிரு வார்த்தைகள் மட்டுமே சொல்வார் தன்னுடைய அருளால் பலவித நோய் உபாதைகளையும் கஷ்டங்களையும் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு தீர்த்து வைத்திருக்கிறார்.பழனி,திண்டுக்கல் உட்பட பல இடங்களில் இவருக்கு நிறைய பக்தர்கள் இன்றளவும் உள்ளனர்

பகலில் சுவாமிகள் ஊரின் நாலாபுறங்களிலும் திரிவார். குறிபாக அருள்மிகு சிவசக்தி கோயில், மாலா கோயில், பூங்காணியம்மன் கோயில் சுற்றுப்புறங்களில் இருப்பார். சிறு குச்சிகளால் தரையில் கிறுக்கிக்கொண்டே இருப்பார். பகலிலும் இரவிலும் பெரும்பாலும் முத்தாலம்மன் கோயிலில் அமர்ந்திருப்பார் சுவாமியவர்கள் ஊரில் உள்ள அனைவரின் வீட்டிற்கும் விளையாடித்திரியும் குழந்தையைப் போல போவார்கள். வருவார்கள் சுவாமி வந்து சென்றால் வீட்டில் நல்லது நடக்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. இது நல்ல வீடு, கெட்ட வீடு என்ற பாகுபாடு கிடையாது. அதே நேரத்தில் (பெரும் பணக்காரர்கள் அனைத்து வகை உயர்பதார்த்தங்களை வைத்துக் கொண்டு சுவாமிகளைப் பின் தொடர்ந்து சென்று படைத்தாலும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள்). பக்தர்கள் கொண்டு வரும் உயர்வகைப் பதார்த்தங்களை சுவாமிகள் விரும்பிச் சாப்பிட்டதில்லை. மாறாக அரிசி, கீரை, உணவுகளை சிறிது எடுத்துக் கொள்வார்கள்.இயற்கை அன்னை தன்னைப்படைத்த வண்ணமே காட்சி அளித்த சுவாமிகள் பார்வைக்கு ஒர் ஏழை விவசாயி போல் காணப்பட்டார்கள்.

சுவாமியவர்கள் ஒரு நாளும் நோய்களால் அவதிப்பட்டதில்லை பல பெரிய மகான்களுடைய உடல்களெல்லாம் தங்கள் அடியார்களுக்கும், சீடர்களுக்கும் அருள்புரிந்த காலத்தில் அவர்களுடைய பாவங்களை ஏற்றதனால் அம்மகான்களுடைய உடல்கள் துன்புற்றதாக விளக்கம் அளிக்கப்படுகிறது. ஆனால் அனைத்தையும் பஸ்பமாக்கும் ஆற்றல் பெற்று விளங்கிய சுவாமிகளின் உடலை எந்தவொரு பாவமோ, தோஷமோ தீண்டமுடியவில்லை.

பலவித அற்புதங்களை புரிந்து மக்களை காத்த சுவாமிகள் ஐப்பசி மாதம் ஆறாம் நாள்[23.10.1982] ம் வருடம் சமாதியடைந்தார்,(23-10-1982) சனிக்கிழமை சமாதி வைக்கும் நேரத்தில் அதுவரை வெளிர்ந்திருந்த வெண்மேகக் கூட்டங்கள், சுருண்டு திரண்டு, அந்தக் குறிப்பிட்ட எல்லையில் மட்டும் முக்கோடி தேவர்கள் பூமாரி பொழிந்தது போல், கனமழை பெய்தது.கருடன் வலம் வர சுவாமிகள் சமாதி எழுப்பபட்டது.இவர் மறைந்து பல ஆண்டுகள் ஆகியும் இன்றும் மக்களை காத்து வருவதாக மக்கள் நம்புகின்றனர்

பக்தர்களால் அவர் சமாதியடைந்த இடத்தில் மிகப்பெரும் கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது ஒவ்வொரு வியாழனும்
பெளர்ணமிகளிலும் இக்கோவிலில் விசேஷ பூஜைகள் நடைபெறும்.

செல்லும் வழி:சென்னை அல்லது எந்த ஊரிலிருந்தும்:
முதலில் திண்டுக்கல் செல்லுங்கள். கன்னிவாடி அருகில் இருக்கும் கசவனம்பட்டிக்கு திண்டுக்கல்லிலிருந்து பேருந்துகள் செல்கின்றன. ஆட்டோவிலும் செல்லலாம்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum