Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில்

Go down

உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில் Empty உடுமலை பிரசன்ன விநாயகர் கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:12 pm

உடுமலை நகரில் பழனி - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் நகரின் முகப்பில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அனைத்து சவுபாக்கியங்களையும் அள்ளி தருபவராக விளங்குகிறார் பிரசன்ன விநாயகர். உடுமலை ஸ்ரீபிரசன்ன விநாயகர் கோவில் 5 நிலை ராஜகோபுரத்துடன் சுமார் 1 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

ராஜகம்பீரம் :

கோவை ஈச்சனாரியில் எப்படி அருள்மிகு விநாயகர் பெருமாள் கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றோரோ அதே போன்று உடுமலை பிரசன்ன விநாயகரும், இங்கே கம்பீரமாக அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள்பாலித்து வருகிறார்.

ஐஸ்வர்யம் :

பிரசன்ன விநாயகப் பெருமானை மனதில் எண்ணி, விரதமிருந்து அவரை வணங்கி வந்தால் சகல ஐஸ்வர்களையும் வழங்கி அருள்பாலிப்பார் என்பதும் ஐதீகமாகும். தொடர்ந்து விநாயகப் பெருமானை இங்கு வந்து வணங்கி வந்தால் பக்தர்களின் மனக்குறைகளை போக்குவார். மேலும் பக்தர்களின் மனமறிந்து அவர்களுக்கு நல்லவைகளை அருள்கிறார்.

பிரசன்ன விநாயகர் :

பிரசன்ன விநாயகருக்கு நாள்தோறும் அபிசேகம், ஆராதனை உள்பட பல சேவைகள் நடக்கிறது. திருமணங்களும் மற்றும் பல சுப காரியங்களும், நல்ல நாட்களில் நடைபெறுகிறது. அன்னதானம், இந்த விநாயகர் பெருமான் சன்னதியில் நடப்பது மிகவும் புண்ணியமாகும் என்பதும் ஐதீகம். சங்கடகர சதுர்த்தி விழா இங்கே முக்கிய நிகழ்வாக நடக்கிறது.

இந்த நாளில் பக்தர்கள் திரளாக கூடி விநாயக பெருமானை தரிசனம் செய்வார்கள். உடுமலை பிரசன்ன விநாயகர் கோவிலில் விநாயக பெருமானை தொடர்ந்து காசி முருகப்பெருமான் (வள்ளி- தெய்வானை) சமேதரராய், தட்சிணாமூர்த்தி, சவுந்திர ராஜ பெருமாள், சண்டி கேஸ்வரர், துர்க்கையம்மன், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீநடராஜர், நவக்கிரக நாயகர்கள், நால்வர் சன்னதி, பிரம்மா, ஸ்ரீஅண்ணாமலையார், ஸ்ரீகால பைரவர், ஸ்ரீஆண்டாள், இப்படி ஒரே ஆலயத்தில் பல்வேறு தெய்வங்கள் வீற்றிருந்து அருள்பாலித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் இது போன்று ஒரே ஆலயத்தில் அனைத்து தெய்வங்களை தரிசிக்கலாம் என்பது பக்கதர்களுக்கு கிடைத்துள்ளவர பிரசாதமாகும் என்பதில் சந்தேகமில்லை. பிரசன்ன விநாயகர் கோவில் 300 ஆண்டு பழமையானது என பக்தர்கள் தெரிவித்தனர். உடுமலை பிரசன்ன விநாயகர் ஆலயம் சுயம்பு ஆலயம் என்ற தகவல் ஸ்தல வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

குறிப்பாக உடுமலை பிரசன்ன விநாயகர் மறுவடிவமே ஈச்சனாரி விநாயகப் பெருமாள் என மூத்த பழம் பெரும் பக்த பிரமுகர்கள் வரலாற்று தகவலாக கூறுகின்றார்கள். பிரசன்ன விநாயகரை தரிசிக்க உடுமலைக்கு பயணம் செய்தால் போதும், உடுமலை மத்திய பஸ் நிலையத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் ஆலயம் அமைந்துள்ளது. நகர பேருந்து, ஆட்டோ வசதி உள்ளது.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum