Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில்

Go down

பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில் Empty பெரம்பலூர் மதனகோபால சுவாமி கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 2:52 pm

ஸ்தல வரலாறு:

தனிமரம் தோப்பாகாது என் பார்கள். குடும்பங்கள் கூடி வாழ்வது தான் கோடி நன்மை தரும். நமது குடும்ப விழாக் களுக்கு உறவு குடும்பங்கள் கூடி வந்தால் தான் பெருமை. வாழும் போது வாழ்த்துவதும், வீழும் போது தாங்கி பிடிப்பதும் சொந்த, பந்தங்கள்தான். ஆனால் குடும்பங்களுக்குள் தான் எத்தனை பிரச்சனை.

உறவு குடும்பங்களுக்குள் பிரச்சினை வருவது இன்று, நேற்று நடப்பது அல்ல. புராணகாலத்தில் இருந்தே அது தொடர்கிறது. அதிலும் சகோதர குடும்பங்களுக்குள் எழுந்த பகையால் பஞ்சபாண்டவர்கள் பட்டபாடு அனைவரும் அறிந்ததே. அந்த பாண்டவர்களே தங்கள் குடும்பத்தில் அமைதி நிலவ, சகோதர ஒற்றுமை ஓங்கிட வேண்டி நின்ற ஒரு கோவில் தமிழகத்ததில் உள்ளது.

பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோவில் தான் அது. சாபம் ஒன்றினால் புலியாகத் திரிந்த வியாக்ரம மகரிஷியின் சாபம் விலகிய தலம் வியாக்ரபுரம்...! யார் அந்த முனிவர்? அவருக்கு என்ன சாபம்? துர்வாசரின் சீடராக இருந்த ஒரு முனிவர், ஒருசமயம் கவனக் குறைவால் தம் குருநாதரின் கமண்டலத்தில் இருந்த நீரைத் தட்டிவிட்டார்.

அதனால் கோபமடைந்த துர்வாசர். அவரைப் புலியாக மாறும்படி சபித்தார். பதறிப்போனார் சீடர். மன்னிக்கும்படி வேண்டினார். சாபம் விட்டது விட்டதுதான் அதை மாற்ற முடியாது. ஆனால் விமோசனம் சொல்கிறேன். புலியாக நீ உலாவும் பகுதிக்கு பஞ்சபாண்டவர்கள் வருவார்கள். அப்போது பீமனின் கதையால் நீ அடிபடுவாய்.

அந்த சமயத்தில் உன் சாபம் விலகும் என்றார் துர்வாசர். சாபம் பலித்து சீடன் புலியாகித் திரிந்தான். பூர்வ ஜென்ம வாசத்தால், அக்காட்டிலிருந்த பெருமாளைத் துதித்தான். கவுரவர்கள் சூழ்ச்சியால் வனவாசம் செய்தார்கள் பாண்டவர்கள். அப்போது ஒரு முனிவர் அவர்களைச் சந்தித்தார். உங்களின் இந்த நிலைக்குக் காரணம் தீவினை பாவம்தான்.

அது தொலைய தீனரட்சகனான அப்படியே புருஷோத்தமனை பூஜிக்கத் தொடங்கினார்கள் பாண்டவர்கள். ஒருநாள் பூஜைக்குத் தேவையான நீரை எடுக்க ஆற்றங்கரைக்குச் சென்ற பாஞ்சாலி, தண்ணீர் எடுக்காமலே பதற்றத்துடன் ஓடிவந்தாள். அவளை ஆசுவாசப்படுத்திய பீமன், அவளது அச்சத்திற்கு காரணம் கேட்டான்.

பெரிய புலி ஒன்று துரத்துவதுதான் தன் கிலிக்குக் காரணம் என்றாள், பாஞ்சாலி. உடனே கதையுடன் புறப்பட்டான் பீமன். தவறவிட்ட நோஞ்சானான பெண்ணுக்கு பதில், திடகாத்திரமான ஆண்... கொழுத்த வேட்டை என்று பாய்ந்தது புலி. அடுத்த கணம் அதன் தலையில் இடி போல் விழுந்தது ஓர் அடி. மரண ஓலம் எழுப்பிய புலி, கீழே விழுந்து துடித்தது, துவண்டது.

சட்டென்று முனி வராக மாறி எழுந்தது. புலி பாய்ந்தபோது துணிவுடன் நின்ற பீமன், அது முனிவராக மாறியதும் அதிர்ந்தான். பெரும் தவறு செய்துவிட்டதாக பயந்தான். மன்னிப்பு வேண்டிப் பணிந்தான். கனிவுடன் அவனைப் பார்த்த முனிவர், தமது சாபம் விலகிய கதையை அவனுக்குச் சொன்னார்.

தனக்கு நன்மை செய்த அவனுக்கு வீரம் பன்மடங்காகப் பெருக வரம் அளித்தார். வியாக்ரம் என்றால் புலி என்று அர்த்தம். முனிவர் புலிவடிவில் இருந்ததால், அந்தத் தலம் வியாக்ரமபுரம் என்றானது. தமிழில் பெரும் புலிவனம் பெரும்புலியூர், அதுவே மருவி பெரம்பலூர் ஆகிவிட்டது. வழிபாடு செய்த பாண்டவர்களுக்கு வரம் தர வந்தார் வாசுதேவன்.

அவர்கள் துன்பம் தீர அருளினார். வினை தீர்க்க வந்த வேணு கோபாலா, இத்தலத்தில் நீங்கள் நிரந்தரமாக வாசம் செய்திடவேண்டும். எங்களுக்கு இந்தத் துன்பங்கள் வந்ததற்கு முக்கியமான காரணம், உறவினர்களிடையே ஒற்றுமை இல்லாமல் போனது தான்.

எனவே இங்கே வந்து உம்மை வணங்குவோரின் இல்லறம் நல்லறமாக அருள வேண்டும் என வேண்டினார்கள் பாண்டவர்கள். பாண்டவர்களுக்கு அருளிய அதே வாசுதேவன், மதன கோபாலசுவாமியாக இன்றும் இங்கு அருள்பாலிக்கிறார். தினமும் ஏராளமான மக்கள் தங்கள் சகோதர ஒற்றுமைக்கும், குடும்ப அமைதிக்கும் கோபாலனை வணங்கி செல்கின்றனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum