Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


திருக்குமார சுவாமி கோவில்

Go down

திருக்குமார சுவாமி கோவில் Empty திருக்குமார சுவாமி கோவில்

Post by oviya Sat Apr 18, 2015 3:17 pm

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திற்கு அருகே உள்ளது ராசேந்திரபட்டினம். கொள்ளிடம் ஆற்றின் வடக்கிலும், சுவேதநதி எனப்படும் வெள்ளாற்றின் தெற்கிலும் அமைந்துள்ளது இந்த ஊர். இதன் புராணக் கால பெயர் சுவேதார்க்க வனம் என்பதாகும். மிகவும் பழமைவாய்ந்த சிவாலயங்களில் ஒன்றான இது. 274 தேவாரத் திருத்தலங்களில் 215-வது திருத்தலமாகும்.

முருகனுக்கு பேச்சாற்றல் :

கயிலாயத்தில் ஒரு முறை சிவபெருமான் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை பார்வதிதேவிக்கு உபதேசித்தார். ஆனால் பார்வதி தேவி அதில் நாட்டமின்றி இருக்க, கோபம் கொண்ட ஈசன், அம்பாளை பூலோகத்தில் பிறக்கும்படி சபித்தார். தாயாருக்கு தந்தை சாபம் அளித்ததை பொறுக்க முடியாத முருகப்பெருமான், பிரச்சினைக்கு காரணமான வேத நூல்களை எடுத்து கடலில் வீசி எறிந்தார்.

முருகப்பெருமானின் இந்த செய்கையால் மேலும் கோபமாக சிவன், அவரையும் பூலோகத்தில் ஊமையாக பிறக்கும்படி சபித்துவிட்டார். இதையடுத்து மதுரையில் தனபதி- குணசாலினி ஆகியோரது மகனாக பிறந்தார் முருகப்பெருமான். அவருக்கு உருத்திரசண்மர் என்னும் பெயரிட்டு பெற்றோர் வளர்த்து வந்தனர். முருகப்பெருமான் பிறவியிலேயே வாய்பேச முடியாதவராக இருந்தார்.

வாலிப வயதை எட்டிய, முருகப்பெருமானுக்கு தன்னுடைய பிறப்பின் காரணம் புரியத் தொடங்கியது. அவர் தனக்கு விதிக்கப்பட்ட சாபத்தில் இருந்து விடுபட தல யாத்திரை மேற்கொண்டார். ஒவ்வொரு ஊராக சென்று அங்குள்ள சுயம்பு லிங்கங்களுக்கு பூஜை செய்து வழிபட்டார்.

பல ஊர்களுக்கு சென்று வழிபட்ட நிலையில், இங்குள்ள தலத்திற்கு வந்து சிவபெருமானை பூஜை செய்ததும், முருகப்பெருமானுக்கு பேச்சு வந்ததாக, இத்தல புராணம் தெரிவிக்கிறது. மரங்கள், பறவைகளாக... நைமிசாரண்யத்தின் தென்பகுதி, திருமுதுகுன்றம் என்று அழைக்கப்பட்ட இன்றைய விருத்தாசலம் வரை பரவியிருந்தது.

இந்தப்பகுதியில் ரிஷிகளும், முனிவர்களும் தங்கி தவம் செய்து வந்தனர். எனவே இப்பகுதி ரிஷிவனம் என்றும் அழைக்கப்பட்டது. ஒரு சமயம் இங்கு தவம் இருந்து வந்த முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தவம் விரைவில் சித்தியடைய வழிகாட்டுமாறு சிவபெருமானை வேண்டினர்.

அவர்களுக்கு காட்சியளித்த சிவபெருமான், 'முருகப்பெருமான் குரல்வரப் பெற்ற தலத்திற்கு வந்து என்னை வழிபட்டால், உங்கள் அனைவரின் வேண்டுதல்களும் நிறைவேறும்' என்று வரம் அருளினார்.

அதன்படி இந்தத் தலத்திற்கு வந்த ரிஷிகளும், முனிவர்களும் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலித்த சிவபெருமானை வணங்கியதுடன், தொடர்ந்து இந்த வனத்திலேயே தங்கியிருந்து வழிபட எண்ணினர். இதற்காக இறைவனை வேண்டியபோது, சிவபெருமான் அவர்களை, மரங்களாகவும் பறவைகளாகவும் உருமாற்றி வனத்திலேயே தங்கியிருக்கும்படி செய்தார்.

வெள்ளெருக்கு செடிகளாக :

இந்த காலகட்டத்தில் வனத்திற்குள் நுழைந்த வேடர் கூட்டம் ஒன்று, மரங்களை வெட்டி வீழ்த்தி, பறவைகளை வேட்டையாடினர். இதனால் பயந்து போன முனிவர்கள் மீண்டும் சிவபெருமானிடம் சரணடைந்தனர். சிவபெருமான், முனிவர்களையும், ரிஷிகளையும் எதற்கும் பயன்படாத, எவரும் தீண்டாத வெள்ளெருக்குச் செடிகளாக உருமாற்றினார். மரங்கள் யாவும் வெள்ளெருக்குச் செடியானது கண்டு வேடர்கள் அனைவரும் பயந்தனர்.

இது இறைவனின் செயல் என்பதை உணர்ந்ததும், இறைவனை பணிந்ததும், அந்தப் பகுதியில் இறைவனுக்கு ஆலயம் எழுப்பவும் முயற்சித்தனர். இறைவனின் திருவருளால் வெள்ளெருக்கு வளர்ந்த ஊர் என்பதால், இந்த ஊர் எருக்கத்தாம்புலியூர் (வடமொழியில் ஸ்வேதார்க்க வனம்) என்று பெயர் பெற்றது.

காலப்போக்கில் யாழ் இசையுடன் பண்ணிசைப்பதை தங்கள் குலத் தொழிலாகக் கொண்ட சிலர் இந்த வனப்பகுதியில் வந்து குடியேறினர். இவர்கள் பாணர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

இந்த பாணர்களின் வழிவந்தவரான திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார் இத்தல இறைவன் மீது அதீத ஈடுபாடு கொண்டு, இவரது கீர்த்தியை பல ஊர்களிலும் பரவச் செய்தார். இதையடுத்து இத்தல இறைவனை வழிபடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.

கோவில் அமைப்பு :

சோழ மன்னர்களின் பெரும் புகழ் கொண்ட ராஜராஜ சோழன், புத்திர பாக்கியம் வேண்டி இத்தலத்தில் யாத்திரை மேற்கொண்டான். அதன்பயனாக அவனது மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. ராஜேந்திர சோழன் என அழைக்கப்பட்ட அவனது நினைவாகவே இத்தலம் அமைந்த பகுதிக்கு ராசேந்திரப்பட்டினம் என்று அழைக்கப்படுவதாக பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

குழந்தை பாக்கியம் கிடைத்ததும் ராஜராஜ சோழன் இந்த பகுதிக்கு வந்து இறைவனின் ஆலயத்தை செங்கல் தளியாக மாற்றினான். அவனது மகன் ராஜேந்திர சோழன் ஆட்சிக்கு வந்ததும், இக்கோவிலை கருங்கல் கொண்டு கட்டி முடித்தான். அவர்களைத் தொடர்ந்து பலராலும் நடைபெற்ற திருப்பணிகளால் தற்போது கோவில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது.

சுமார் 4 ஏக்கர் பரப்பளவில் இரண்டு பிரகாரங்களையும், மூன்று மண்டபங்களையும் கொண்டு கிழக்கு நோக்கி அமைந்துள்ளது இந்த ஆலயம். கோவிலின் நேர் எதிரில் கந்தபுஷ்கரணி தீர்த்தம் உள்ளது. 40 அடி உயரத்தில் ஐந்து நிலை ராஜகோபுரம் கம்பீரமாக எழுந்துள்ளது. ஆலயத்தின் பலிபீடத்தையும், அதிகார நந்தியையும் கடந்து உள்ளே சென்றால், நிருத்த கணபதி, கூர்த்த கணபதி வீற்றிருக்கின்றனர்.

சுவாமிக்கு எதிரில் உள்ள மூல நந்தியை வணங்கி, துவார பாலகர்களை வழங்கி கருவறைக்குள் நுழைந்தால், சுயம்புமூர்த்தியான திருக்குமார சுவாமியை தரிசிக்கலாம்.

கல்யாண கோல அமைப்பு :

மூலவர் சன்னிதிக்கு அடுத்ததாக தென் திசையில் செப்புத் திருமேனியால் ஆன பஞ்சமூர்த்திகளின் சன்னிதியும், அதற்கடுத்ததாக நீலமர்கன்னி எனப்படும் வீறாமுலை அம்பாள் சன்னிதியும் உள்ளது. பெரும்பாலான சிவாலயங் களில் அம்பாள் சன்னிதி, சுவாமி சன்னிதிக்கு இடதுபுறம் தெற்கு நோக்கியே அமைந்திருக்கும்.

ஆனால் இந்தக் கோவிலில் சுவாமி சன்னிதிக்கு வலதுபுறம் கிழக்கு நோக்கி அம்பாள் சன்னிதி இருப்பது, கல்யாண கோல காட்சியை நினைவூட்டுகிறது. ஆலயத்தை வலம் வருகையில் அம்பாளின் தெற்கு கோஷ்டத்தில் பதினாறு கோஷ்ட சக்திகளில், ஐந்து சக்திகள் இடம்பெற்றுள்ளனர்.

மேற்கு திருமாளப்பத்தியில் தல விநாயகர் எனப்படும் கோடி விநாயகருக்கான சன்னிதியும், மற்றொரு சன்னிதியில் காசி விஸ்வநாதர், சமயாச்சாரியார்கள், திருநீலகண்ட யாழ்ப்பாணர் நாயனார், அவரது மனைவி மதங்கசூளாமணி, சேக்கிழார், அடுத்ததாக ஆஞ்சநேயருடன் கூடிய பெருமாள் சன்னிதி, வாயு மூலையில் கஜலட்சுமி சன்னிதி அமைந்துள்ளன.

சுவாமி சன்னிதியில் தெற்கு கோஷ்டத்தில் கணபதி, நாக பூஷணத்துக்கு பதில் ஜெப மாலையை கையில் கொண்ட மேதா தட்சிணாமூர்த்தி, அவருக்கு மேலே மலைக்கோவிலில் சட்டைநாதர், மேற்கு கோஷ்டத்தில் லிங்கோத்பவர், வடக்கு கோஷ்டத்தில் பிரம்மாவுக்கு பதிலாக தத்தாத்ரேயர் காட்சியளிக்கின்றனர். அடுத்ததாக துர்க்கை அம்மனும், பிரகாரத்தில் சண்டிகேஸ்வரர், நடராஜர் ஆகியோரும் அருள்பாலிக்கிறார்கள்.

திருவிழா :

வழக்கமான சிவாலய உற்சவங்கள் தவிர, ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரி அன்று நான்காம் ஜாமத்தில், சூரியன் இவ்வாலய இறைவனை பூஜிக்கும் கோலாகல காட்சி இன்றளவும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதைக் காண இந்த ஆலயத்திற்கு திரளான பக்தர்கள் வருகை தருவார்கள்.

பேச்சு குறைபாடு உள்ளவர்கள், இத்தல இறைவனை வேண்டி, தீர்த்தக்குளத்தில் நீராடினால் நன்மை நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இருபத்தேழு நட்சத்திரங்களுக்கான கோவில்களில், இந்த ஆலயம் திருவோண நட்சத்திரம் உள்ளவர்கள் வழிபட வேண்டிய கோவிலாகும்.

காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum