Top posting users this month
No user |
Similar topics
வயோதிப தம்பதியினர் வீட்டில் நகைகள், பணம் கொள்ளை! யாழில் முகமூடியணிந்த ஆயுததாரிகள் கைவரிசை
Page 1 of 1

வயோதிபத் தம்பதியினர் தனித்திருந்த வீட்டில் நேற்று அதிகாலை துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளைக் கும்பல், வீட்டில் இருந்த பல லட்சம் ரூபா பெறுமதியான நகைகள், பணம் உள்ளிட்டவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளது.
யாழ். குப்பிளான் வடக்கு, கேணியடிப் பகுதியில் இடம்பெற்ற இக்கொள்ளைச் சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளரினால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரியவருவதாவது,
நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலை 2.00 மணியளவில் முகமூடி அணிந்து துப்பாக்கி மற்றும் கூரிய வாள்களுடன் வந்த திருடர்கள், வீட்டிலுள்ள பிரதான மின் ஆளியை நிறுத்திவிட்டு இந்தக் கொள்ளையில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் ஆளி நிறுத்தப்பட்டதை அறியாது லைற் போடச் சென்ற எனது கணவரை மறைந்திருந்த கொள்ளையர்களில் ஒருவர் பலமாகத் தாக்கினார்.
விபரீதத்தை உணர்ந்து தொலைபேசி அழைப்பு எடுக்க முயன்ற என்னையும் கொள்ளையர்கள் துப்பாக்கியால் தாக்கினர் என வீட்டில் இருந்த வயதான பெண் தெரிவித்தார்.
அத்துடன், சத்தம் போட்டால் வெட்டுவோம் எனக் கொள்ளையர்கள் எங்களை மிரட்டிப் பணியவைத்தனர். நாம் அச்சத்தால் எதுவும் செய்யமுடியாத நிலையில் அமைதியாக இருக்க அவர்கள் வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடினர்.
வீடு முழுவதும் தேடி யாருக்கும் தெரியாமல் நான் மறைத்து வைத்திருந்த ஒன்பதரைப் பவுண் தாலிக்கொடி, நான்கு பவுண் காப்பு, 2 பவுண் மோதிரம் ஆகிய நகைகளுடன் ஒரு லட்சம் ரூபா பணம் என்பவற்றையும் அக்கும்பல் கொள்ளையிட்டுச் சென்றது என அவர் கூறினார்.
வீட்டின் சமையலறையில் பாதுகாப்பாக பணத்தை மறைத்து வைத்திருந்தேன். அதைக்கூட தேடி எடுத்துச் சென்றுவிட்டனர். எனது கணவர் அணிந்திருந்த மோதிரத்தை மிரட்டிப் பறித்துச் சென்றனர் எனவும் அப்பெண் தெரிவித்தார்.
இதேவேளை, கொள்ளையர்கள் வீட்டை உடைத்து உள்ளே நுழைந்தமைக்கான தடயங்கள் எதுவும் காணப்படவில்லை. அவர்கள் முன்னரே வந்து வீட்டில் பதுங்கியிருந்திருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
குடிமனைகள் நெருக்கமாகவுள்ள பகுதியில் ஆயுத முனையில் இடம்பெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கடத்தப்பட்ட இலங்கையரை விடுவிக்க பெருந்தொகை பணயப்பணம் கோரும் ஆயுததாரிகள்
» கொட்டாஞ்சேனையில் பொலிஸாரை அச்சுறுத்திய ஆயுததாரிகள்!
» போலி வீசாவில் வெளிநாடு செல்ல முயன்ற தம்பதியினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum