Top posting users this month
No user |
Similar topics
விரதங்கள் கடைபிடிக்கும் முறை
Page 1 of 1
விரதங்கள் கடைபிடிக்கும் முறை
விரதம் என்றால் விரதம் இருப்பவர்கள் சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பது மட்டுமே அல்ல, மனதை ஒருநிலைப்படுத்தி கடவுளை நினைத்து வழிபாடுகளை மேற்கொள்வதாகும். கடவுளின் பெயர்களும், துதிகளும் வழிபாட்டு முறைகளும் வேறுபடுமே தவிர மற்றப்படி ஒரே மாதிரியே தான் விரதங்கள் கடைப்பிடிக்கப்படுகிறது. விரதங்களைக் கடைபிடிக்கும் முறைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
எந்த விரதத்தை கடைப்பிடிப்பதாக இருந்தாலும் அன்றைய தினத்திற்கு முதல் நாளே வீட்டைக் கழுவி, சுத்தம் செய்து அரிசிமாவினால் பூஜை அறை வாசல் படியில் கோலம் போட்டு, துளசி மாடத்திற்கு பொட்டு வைத்து விளக்கு ஏற்றி, வாசலில் மாவிலை தோரணம் கட்டி வழிபாட்டு ஏற்பாடுகள் ஆரம்பிக்க வேண்டும். பூஜைக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி, பூஜைப் பாத்திரங்களையும் கழுவி தயாராக வைத்திருக்க வேண்டும். விரத தினத்தன்று சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து நீராடி தூய ஆடையினை அணிந்து குங்குமம், திருநீறு, சந்தனம் அணியுங்கள்.
வழிபடப் போகிற தெய்வ உருவங்கள், படங்களை நன்றாகத் துடைத்து சந்தனம், குங்குமம் பொட்டுகள் இட்டு, மலர்களால் அலங்கரியுங்கள். அனைத்து பூஜைகளுக்கும் தூய்மையான நீரும், பூவும் அவசியம். எந்த விரதத்தை ஆரம்பிக்கும் முன்பும் பிள்ளையாரை பூஜிக்க வேண்டியது மிகவும் அவசியம். மஞ்சளில் தண்ணீர் கலந்து மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து குங்குமம் வைத்து வழிபடுவது நல்லது. விரதம் நிறைவடைந்த பின் அல்லது மறுநாள் அந்த மஞ்சள் பிள்ளையாரை நீரில் கரைத்துவிட வேண்டும். அதாவது கடல், ஏரி, தெளிந்த நீரோடையில் கரைக்க வேண்டும்.
ஒரு கலசத்தில் மஞ்சள் தண்ணீர் ஊற்றி அதன் மேல் 5 மாவிலையை வைத்து அதற்கு மேல் மஞ்சள் தடவி குங்குமம் வைத்த தேங்காயை வைத்து அதன் மேல் பூ வைத்து கலசத்தினை அலங்கரித்து வைக்க வேண்டும். ஏகாதசி விரதம் போன்ற விரதங்களில் உணவருந்தாமல் இருப்பது அவசியம். விரத நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தியும் விரதமிருக்கலாம். அல்லது ஒரு வேளை மட்டும் உணவருந்தியும் விரதமிருக்கலாம்.
விரதம் இருக்கும் சமயத்தில் இயன்றவரை இறை சிந்தனையுடன் இருப்பது அவசியம். முடிந்தவரை பேசுவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். விரத நாட்களில் மவுன விரதம் இருப்பது மேலும் நல்ல பலன்களை கொடுக்கும். விரதகாலத்தில் எவர் மீதும் கோபப்படுவதோ, கெட்ட வார்த்தைகளை உபயோகிப்பதோ, வீண்விவாதங்கள் செய்வதோ கூடாது. பூஜைக்கு உரிய தெய்வத்தின் துதிகள், பாடல்களை அன்று முழுவதுமே கேட்பது, படிப்பது, சொல்லவும் வேண்டும்.
தெரியாதவர்கள் விரதம் அனுஷ்டிக்கும் கடவுளின் நாமத்தை திரும்பத் திரும்ப சொன்னாலும் போதும். எந்த விரதமாக இருந்தாலும் அதை ஆடம்பரமாக செய்ய வேண்டும் என்பதில்லை. உங்களால் என்ன இயலுமோ அதனை நிறைவாகச் செய்யுங்கள். விரதம் இருப்பது நிச்சயம் பலன்தரும் என்பதை முழுமையாக நம்புங்கள். அதே சமயம் பலனை எதிர்பார்த்து மட்டுமே விரதத்தை அனுஷ்டிக்காமல் மனப்பூர்வமாக பக்தியுடன் கடைப்பிடியுங்கள். விரதம் இருக்கும் நாட்களில் உங்களால் இயன்ற உதவிகளை ஏழைகளுக்கு செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum