Top posting users this month
No user |
Similar topics
மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி திருத்தல வழிபாடு
Page 1 of 1
மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி திருத்தல வழிபாடு
மூர்த்தி, தீர்த்தம், தலம் என்ற முப்பெருமைகளால் அமையப் பெற்ற திருத்தலம் மன்னார்குடி ராஜ கோபாலசுவாமி திருத்தலம், மூலவர் பரவாசுதேவப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்கரம் கதையுடன் தங்கக் கவசம் பூண்டு கம்பீரமாய்க் காட்சி தருகின்றார். இந்த கோவிலில் பங்குனி மாதம் நடைபெறும் 18 நாள் பிரமோற்சவமும், தொடர்ந்து 12 நாள் நடை பெறும் விடையாற்றி விழாவும் பிரசித்தி பெற்றது.
கோகுலத்தில் குழந்தை கண்ணன் ஆயர் வீடுகளில் புகுந்து வெண்ணை திருடி தின்னும் வைபவத்தை சித்தரிக்கும் வகையில் வெண்ணைத்தாழி வைபவம் நடைபெறுகிறது. திருவிழா அன்று ராஜகோபாலசாமி தவழும் கண்ணன் வடிவு அலங்காரத்தில் கையில் வெள்ளி குடத்துடன் பல்லக்கில் கோவிலில் இருந்து வீதி உலா காட்சியாக புறப்படுவார்.
வீதிகள் தோறும் கண்ணனுக்கு பிரியமான வெண்ணை மற்றும் விசிறி கொடுத்து வணங்குவார்கள். மதியம் வெண்ணைத்தாழி மண்டபத்தில் செட்டி அலங்காரத்திலும், குதிரை வாகனத்திலும் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு தரிசனம் தருவார். ஆவணி மாதத்தில் `திருபவித்ரோத்ஸவம்' என்று போற்றப்படும் விசேஷமான உற்சவம் 10 தினங்கள் நடைபெறும். இந்நாட்களில் ஆண்டு முழுவதும் நடைபெற்று வரும் பூஜைகளில் குறைபாடுகளிருப்பின் அவற்றை நிவர்த்தி செய்வதற்காக 365 வகையிலான பூஜைகள் நடைபெறும்.
இவ்விழா நாட்களில் யாகசாலையில் பல்வேறு ஹோமங்களைச் செய்து பெருமாளுக்கு பூஜைகள் செய்வது மிகச்சிறப்பான ஒன்றாகும். இந்நாட்களில் பெருமாள் திருப்பவித்ரமாலைகளை அணிந்து காட்சி தருவார். இவ்விழாவின் இறுதி நாளில் தீர்த்தவாரி ஹரித்ராநதியில் நடைபெற்று விழா நிறைவுறும். மேலும் ஸ்ரீஜெயந்தி எனப்படும் கண்ணன் பிறப்பு வைபவம் சிறப்பாக உரியடித்திருவிழாவுடன் நடைபெறுவது மிகச்சிறப்பு அம்சமாகும்.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வேண்டுவதை நிறைவேற்றும் திருவண்ணாமலை திருத்தல வழிபாடு
» குறைகளை போக்கும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி
» திருக்கோணேஸ்வர திருத்தல யாத்திரை
» குறைகளை போக்கும் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி
» திருக்கோணேஸ்வர திருத்தல யாத்திரை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum