Top posting users this month
No user |
வேண்டுவதை நிறைவேற்றும் திருவண்ணாமலை திருத்தல வழிபாடு
Page 1 of 1

திருவண்ணாமலையில் லிங்கமே மலையாக அமைந்துள்ளது. தென்னிந்தியாவின் மிகச் சிறந்த சிவதலமாக இத்தலம் திகழ்கிறது. பஞ்சபூதம் தலங்களில் முக்கியமான அக்னி தலம் இது. நினைத்தாலே முக்தி தரும். நான் என்ற அகந்தை அழிந்த தலம் உண்ணாமுலையம்மன் சிவபெருமானிடம் இடப்பாகம் பெற கிரிவலம் வந்து தவம் செய்த தலம் பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் காட்சி தந்த தலம்.
அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்து வாழ்ந்து முக்தி அடைந்த தலம் அருணகிரிநாதர் வாழ்க்கை வெறுப்புற்று தற்கொலை செய்து கொள்ள முயன்றபோது முருகனே வந்து காப்பாற்றி திருப்புகழ் பாட உத்தரவிட்ட தலம் எல்லா சிவதலத்திலும் மூலவர் பின்புறமுள்ள லிங்கோத்பவர் தோன்றிய தலம். 48 நாட்கள் விரதமிருந்து அதிகாலையில் கணவனும் மனைவியும் நீராடி மலை வலம் வந்தால் மகப்பேறு கிடைக்கும்.
அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது அருணை சக்தி பீடம் ஆகும். திருவண்ணாமலையில் அம்பிகை அபீத குஜாம்பாள் எனும் உண்ணாமுலையம்மனாக அருள்பாலிக்கிறாள். இங்கு ஆடிப்பூரம் அன்று தீமிதி திருவிழா நடக்கும். பார்வதிக்கு சிவபெருமான் தன் உடம்பில் சரிபாதியாக இடப்பாகம் தந்து ஜோதி சொரூபமாய் கார்த்திகை மாதம் காட்சி தந்த தலம் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்றைய தினம் திருவண்ணாமலையை கிரிவலம் வருவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. சுவாமிக்கு வேஷ்டியும், அம்பாளுக்கு மஞ்சள் பொடி அபிஷேகம், புடவை சாத்துதல் ஆகியவற்றையும் செய்கிறார்கள். சுவாமி அம்பாளுக்கு கல்யாண உற்சவம் செய்து வைப்பதையும் நேர்த்திக்கடனாக நிறைய பக்தர்கள் செய்கிறார்கள்.
இத்தலத்தில் வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கேட்கும் வரங்களை எல்லாம் தரும் மூர்த்தியாக அருணாச்சலேசுவரர் உள்ளார். கல்யாண வரம் வேண்டுவோர், குழந்தை வரம் வேண்டுவோர், வியாபாரத்தில் விருத்தியடைய விரும்புவோர், உத்தியோக உயர்வு வேண்டுவோர், வேலைவாய்ப்பு, சுயதொழில் வாய்ப்பு வேண்டுவோர் என்று எந்த வேண்டுதல் என்றாலும் இத்தலத்து ஈசனிடம் முறையிட்டால் நிச்சயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum