Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


சர்ப்ப தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் அகல கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு

Go down

சர்ப்ப தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் அகல கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு Empty சர்ப்ப தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் அகல கன்னிகா பரமேஸ்வரி வழிபாடு

Post by oviya Sat Apr 18, 2015 9:33 am

‘கன்னிகா பரமேஸ்வரியின் சரிதத்தைப் படிப்பவர்களும், காதார கேட்பவர்களும் இவ்வுலகில் சகல செல்வங்களும் பெற்று வாழ்ந்திடுவர்’ என்கிறது கந்தபுராணம். ஆரிய வைசியர் குலத்தவர் தாங்கள் செய்த புண்ணியம் மற்றும் வழிபாட்டு பலன்கள் காரணமாக திருக்கயிலை மலையில் வாழும் வாய்ப்பைப் பெற்றனர். அவர்களில் சோமதத்தன் என்பவரின் மகள் கீர்த்தி, பேரழகு படைத்தவள். அவளது அழகில் மயங்கிய சித்திர கண்டன் என்ற கந்தர்வன், அவளை மணம் செய்ய விரும்பி, தன்விருப்பத்தினை வைசிய குல முனிவர்களிடம் தெரிவித்தான். இதற்கு கீர்த்தியும், முனிவர்களும் சம்மதிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த சித்திரகண்டன் ‘பூலோகத்தில் பிறந்து அக்னியில் விழுந்து அழிந்து போவீர்களாக!’ என்று வைசியர்களுக்கு சாபம் கொடுத்தான். ‘அகம்பாவம் பிடித்த நீ, பூலோகத்தில் பிறந்து தலை வெடித்து அழிவாய்’ என்று வைசியர்களும் பதிலுக்கு சாபம் கொடுத்தனர். இதற்குப் பிறகும் கூட சித்திரகண்டன், கீர்த்திக்கு தொந்தரவு கொடுத்து வந்தான். இதனால் பொறுமை இழந்த வைசியர்கள் நந்திதேவரிடம் முறையிட, சித்திரகண்டனை நந்திதேவர் தன் பார்வையால் எரித்து அழித்தார். இதையடுத்து கீர்த்தியின் தந்தையும், தாயும் பூலோகத்தில் ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவில் வந்துதித்தனர்.

கீர்த்தியின் தந்தை குசுமச் செட்டியாகவும், தாயார் குசுமாம்பிகையாகவும், வாசவாம்பாள் எனும் வாசவியாக கீர்த்தியும் பிறந்தனர். வாசவியின் உடன் பிறந்த சகோதரராக நந்திதேவரே, விரூபாட்சன் என்ற பெயரில் அவதரித்தார். இதே காலத்தில் ராஜமகேந்திரவரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்த விஷ்ணுவர்தன், தான் சென்ற இடம் எல்லாம் வெற்றி வாகை சூடினான். விஷ்ணுவர்தன் வேறு யாருமல்ல, சித்திரகண்டன் தான். வெற்றிக் களிப்பில் பெனுகொண்டா நகருக்கு வந்தான். அங்கே வாசவியைக் கண்டு காதலுற்றான். எப்படியாவது வாசவியை மணம் முடிக்க ஆசைப்பட்டான்.

வாசவியின் தந்தையான குசுமச் செட்டியிடம் பெண் கேட்டான். வைசிய குலத்தில் தோன்றிய பெண்ணை, சத்திரிய குலத்தில் தோன்றிய அரசனுக்கு மணம் முடித்து தர இயலாமையை எடுத்துக் கூறியும் விஷ்ணுவர்தன் கேட்பதாக இல்லை, தொடர்ந்து வற்புறுத்தினான். இதையடுத்து தன் குலத்தாருடன் ஆலோசித்து பதில் கூறுவதாக குசுமச் செட்டி கூறினார். 18 நகரங்களில் இருந்து 714 கோத்திரத்தார், குசுமச் செட்டியின் அழைப்பால் வந்து சேர்ந்தனர். பெனுகொண்டாவில் உள்ள நகரேஸ்வரர் ஆலயத்தில் உள்ள வைசிய மகா சபையில் கூடி பிரச்சினையை விவாதித்தனர்.

எனினும் 612 கோத்திரக்காரர்கள் பெண் கொடுக்கலாம் என்று உடன்பட்டனர். மீதமுள்ள 102 கோத்திரக்காரர்களும் பெண் கொடுக்க வேண்டாம் என்றனர். இதனால் கோபமடைந்த 612 கோத்திரக்காரர்களும் நாட்டை விட்டு வெளியேறினர். இவர்களை ‘நெய்செட்டி’ என்று அழைக்கின்றனர். இவ்வளவு பிரச்சினைக்கும் தானே காரணம் எனக் கருதிய வாசவி, இதற்குத் தானே பரிகாரம் செய்ய எண்ணி தீக்குளிக்க முடிவெடுத்தாள். அவள் கட்டளைப்படி அங்குள்ள நகரேஸ்வரர் எனும் சிவபெருமான் ஆலயத்தின் முன் அக்னி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் வாசவி அக்னிப் பிரவேசம் செய்தாள்.

அவளுடன் 102 கோத்திரக்காரர்களும் தங்கள் குழந்தைகளை மட்டும் விட்டு விட்டு தங்கள் மனைவியர்களுடன் அக்னிப் பிரவேசம் செய்து திருக்கயிலையை அடைந்தனர். இவர்களை ‘எண்ணெய் செட்டி’ என்று அழைக்கிறார்கள். வாசவி அக்னிப்பிரவேசம் செய்த செய்தியைக் கேட்டவுடன், விஷ்ணுவர்தன் தலை சுக்கு நூறாக வெடித்துச் சிதறியது. இதனைக் கேள்விப்பட்ட அவனது மகன் ராஜராஜேந்திரன் தன் தந்தையின் தவறுக்கு மன்னிப்பு கேட்டு, பிராயச்சித்தமாக தன் ராஜ்ஜியம் முழுவதையும் வைசியர்களுக்கே காணிக்கையாகக் கொடுத்தான்.

ஆனால் அங்கிருந்த 102 கோத்திரக்காரர்களின் வாரிசுகளும் ராஜராஜேந்திரன் கொடுத்த ராஜ்ஜியத்தை ஏற்கவில்லை. அப்போது வாசவி அக்னிக் குண்டத்தில் இருந்து பார்வதிதேவியின் ஒரு வடிவாக, கன்னிகா பரமேஸ்வரியாகத் தோன்றி மன்னன் மகனை ரட்சித்தாள். பின்பு தன்னுடன் அக்னிப்பிரவேசம் செய்த நல்லவர்களை வாழ்த்தினாள். ‘இன்று முதல் நீங்கள் (102 கோத்திரக்காரர்கள்) பொன், பொருள், கல்வி, புகழ் உள்ளிட்ட சகல சம்பத்துக்களையும் பெற்று குறைவின்றி வாழ்வீர்கள். நான் உங்கள் குல தெய்வமாக இருந்து உங்கள் சந்ததியினரையும், என்னை வழிபடும் பிற மத, இனத்தவரையும் காத்தருள்வேன்’ என்று வரமளித்து மறைந்தாள். இதனைக் கண்ட ஆரிய வைசியர்கள் ‘ஓம் வாசவி பார்வதி தாயே நமஹ’ எனக் கூறி வணங்கி நின்றனர்.

ஆரிய வைசியர்கள் ஆண்டுதோறும், வாசவித் தாயின் அவதார நன்னாளை வைகாசி மாத வளர்பிறை தசமியில் சிறப்பாக கொண்டாடுகின்றனர். அதுபோல் வாசவியின் அக்னிப் பிரவேசத்தை தை அமாவாசைக்கு இரண்டாவது நாளில் கொண்டாடுகின்றனர். வாசவி கன்னிகா பரமேஸ்வரியின் ஆலயம் ஆந்திர மாநிலம் பெனுகொண்டாவில் உள்ளது. தமிழ்நாட்டில் திருவள்ளூர், விழுப்புரம், சென்னை, காஞ்சீபுரம், கடலூர், கிருஷ்ணகிரி, கோவை, ராமநாதபுரம், திருச்சி, சிவகங்கை, திருவண்ணாமலை, மதுரை மற்றும் புதுச்சேரியிலும் வாசவி அம்பாளுக்கு பல திருக்கோவில்கள் அமைந்துள்ளன.

இவற்றில் குறிப்பிடத்தக்கது சென்னை பிராட்வேயில் உள்ள கொத்தவால்சாவடி ஆதியப்பா தெருவும், கோடவுண் தெருவும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ள வாசவி தேவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஆலயம் ஆகும். இத்தலத்தில் அம்மன் இரண்டு திருக்கரங்களுடன் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த அன்னையை உற்று நோக்கினால், மதுரை மீனாட்சி அம்மனே நம் முன் நிற்பது போல் தத்ரூபமாக இருக்கிறது. கருவறையின் உள்ளே இடதுபுறம் உற்சவர் வாசவி அம்மன் உள்ளாள். கருவறையின் வெளியே வலதுபுறம் சற்று ஓரமாக அரச மரத்தின் கீழ் விநாயகரும், நாகப்புற்றும் உள்ளன.

நாகர் சிலைகளும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் நாகப்புற்றுக்கு பால் வார்த்து, 9 நெய் தீபம் ஏற்றி மூன்று வாரங்கள் தொடர்ந்து வணங்கி வந்தால், சர்ப்ப தோஷங்கள், மாங்கல்ய தோஷங்கள் அகலும். வாசவி அம்மனின் கடைக்கண் பார்வையில் நவக்கிரக சன்னிதிகள் உள்ளன. எனவே இத்தல அம்மனை வழிபட்டு, கருவறை தீபத்தில் தொடர்ந்து 9 வாரங்கள் நெய் சேர்த்து வந்தால் சரக கிரக தோஷங்களும் அகலும் என்பது ஐதீகம். ஆலயம் முழுவதும் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மனின் வரலாறு ஓவியமாக தீட்டப்பட்டுள்ளது.

வாசவி அம்மனுக்கு ஊறவைத்த பச்சைப் பருப்பை வேகவிட்டு, கையால் மசித்து, உப்பு காரமிட்டு நைவேத்தியம் செய்கிறார்கள். வாசவியின் அக்னிப் பிரவேச நாள் அன்று, அன்னையை முழு நெற்றுத் தேங்காயில் ஆவாஹனம் செய்து ஹோம குண்டத்தில் இடுகிறார்கள். அன்னையை இறக்கிய பின் கருவறையில் உள்ள அம்மனை மூட்டை, மூட்டையாக மலர்களைக் கொண்டு நிறைத்து கதவை மூடி விடுவார்கள். அன்று மாலையில் கதவைத் திறந்து புஷ்பங்களை அகற்றி, உஷ்ணத்தில் இருக்கும் அம்பாளுக்கு 1000 லிட்டர் பசும்பால் அபிஷேகம் செய்து குளிர வைப்பார்கள். தொடர்ந்து சிறப்பு அபிஷேகம் செய்து, தங்க கவச அலங்காரம் செய்வார்கள்.
'Kannika Parameshwary caritattaip of readers, myself and all the riches in the world with ketpavarkalum Live today,' says kantapuranam.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum