Top posting users this month
No user |
Similar topics
அறுபத்து மூவர் என்ற அற்புத உற்சவம்
Page 1 of 1
அறுபத்து மூவர் என்ற அற்புத உற்சவம்
சிவாலயங்களில் பக்தோற்சவம் எனும் பெயரில் அடியவர்களுக்கு விழா நடத்த வேண்டுமென்று ஆகம நூல்கள் கூறுகின்றன. பெருந்திருவிழாவில் கொடியிறங்கிய பின்னர் பக்தோற்சவம் எனப்படும் விழா நடைபெறுகின்றது. சிவாலயங்களில் சண்டீசருக்கு மட்டுமே பக்தோற்சவம் நடத்தப்படுகிறது. சிவாகமங்களில் அறுபத்துமூவர் பற்றிய குறிப்புகள் இல்லை. ஆகமங்களின் காலம் நம்மால் ஆராய்ந்து அறிய முடியாத பழங்காலமாகும். அதனால் பின்னாளில் தோன்றிய அடியவர்கள் பற்றிய செய்திகளை அந்நூல்களில் காண முடிவதில்லை.
நாம் போற்றும் அடியவர்கள் எல்லோரும் ஏறத்தாழ 1,300 ஆண்டுகளுக்கு முன்பு மண் மேல் தோன்றி வாழ்ந்தவர்கள். எனவே, அவர்களைப் பற்றியோ அவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய விழாக்கள் பற்றியோ ஆகமங்கள் மற்றும் அதன்வழி நூல்களில் செய்திகளைக் காண முடிவது இல்லை. பன்னிரண்டாம் நூற்றாண்டிற்குப் பின்னர் ஏற்பட்ட பக்தி எழுச்சியால் ஆலயங்களில் பெரிய புராணத்துள் கூறப்பட்டுள்ள அடியவர்களின் திருவுருவங்களை எழுந்தருளி வைத்து வழிபடும் வழக்கம் வந்தது. அப்படி எழுந்தருளி வைக்கப்பட்ட திருவுருவங்களுக்கு நாள் வழிபாடுகளும், சிறப்பு வழிபாடுகளும் ஏற்படுத்தப்பட்டன.
பெரிய தலங்களில் அறுபத்துமூவர் எனப்படும் அடியவர் கூட்டத்திற்கு மூலத் திருவுருவங்கள் அமைக்கப்பட்டதுடன் உலாத் திருமேனிகளும் செய்து வைக்கப்பட்டன. திருவுலா திருமேனிகளுக்கு விழாக்களும் ஏற்பாடு செய்யப்பட்டன. இவ்விழாக்கள் யாவும் ஒரே மாதிரியாகவோ குறிப்பிட்ட நடைமுறையைப் பின்பற்றியோ நடத்தப்படுவதில்லை. மக்களின் வசதி, பொருளாதாரம் முதலிய வாழ்வியல் சூழ்நிலைக்கேற்ப நடத்தப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்த விழா கொண்டாடப்படும் நாள் குறித்த வரையறை ஏதுமில்லை. திருக்கழுக்குன்றத்தில் மூன்றாம் திருநாளிலும் திருவண்ணாமலை அருணாசலேசுவரர் ஆலயம், பெருநகர் பிரம்மபுரீசர் ஆலயம் முதலியவற்றில் ஆறாம் நாளிலும், திருமயிலை கபாலீச்சரத்தில் எட்டாம் நாளிலும் நடத்தப்படுகின்றன.
அதுபோல் திருவண்ணாமலையில் காலையிலும், திருவொற்றியூரில் மாலையிலுமாக இவ்விழா நடைபெறுகிறது. மயிலாப்பூரில் நடைபெறும் அறுபத்து மூவர் விழா காலை விழாவுக்கு உரியதே. என்றாலும் மக்களின் வசதி கருதியும் வெயிலின் கொடுமை கருதியும் இவ்விழா மாலையில் நடைபெறுகின்றது. இதனால் மாலையில் நடைபெற வேண்டிய குதிரை வாகன உற்சவம் இரவு பத்து மணிக்கும் இரவு நடைபெற வேண்டிய பஞ்சமூர்த்தி விழா நள்ளிரவு 12 மணிக்கும் நடைபெறுகின்றன. இனி தென்னகச் சிவாலயங்களில் சிறப்புடன் நடைபெற்று வரும் அறுபத்துமூவர் விழாக்கள் பற்றிய சிறப்புச் செய்திகளைக் கண்டு மகிழலாம்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்துமூவர் விழா
அறுபத்து மூவர் விழா என்றதுமே அன்பர்கள் அடியவர்கள் அனைவரின் நெஞ்சிலும் தோன்றும் காட்சி சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீஸ்வரர் ஆலயத்தில் நடைபெறும் அறுபத்து மூவர் விழாவேயாகும். இது பங்குனி மாதம் உத்திர நாளைக் கடைநாளாகக் கொண்டு ஆலயத்தில் நடத்தப்படும் பெருந்திருவிழாவின் போது எட்டாம் நாள் மாலையில் நடத்தப்படுகிறது. மாலையில் விநாயகர் முன்செல்ல, பெரிய வெள்ளி விமானத்தில் கபாலீஸ்வரரும் விமானத்தில் பின்னால் கற்பகாம்பாளும் பவனிவர சிங்கார வேலவரான முருகனும், சண்டீசரும் தொடர்ந்து வர, விழா நடைபெறுகிறது.
அடியவர்கள் அவரைப் பார்த்த வண்ணமே வீதிகளில் எழுந்தருளுகின்றனர். கேடயம் என்னும் சப்பரங்களில் ஒன்றிற்கு நால்வர் வீதம் 18 சப்பரங்களில் அவர்கள் பவனி வருகின்றனர். இச்சப்பரங்களுடன் திருஞான சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனித்தனியாகப் பெரும் பல்லக்குகளில் உடன் வருகின்றனர். இத்தலத்து அடியவரான சிவநேசரும் அவரது மகளும் பாம்பு தீண்டி மாண்டு திருஞானசம்பந்தரால் உயிர்ப்பிக்கப்பட்டவளுமான அங்கம்பூம்பாவையாரும் தனித்தனியே ஸ்ரீவிமானங்களில் பவனி வருகின்றனர். இவர்களுடன் முண்டகக்கண்ணி அம்மன், கோலவிழியம்மன், வாசகி உடனாய திருவள்ளுவர், திரௌபதி அம்மன் எனப் பல்வேறு தெய்வங்களும் பவனி வருகின்றனர்.
சிந்தாதிரிப்பேட்டையிலிருந்து திருமுருகன் இவ்விழாவுக்கு எழுந்தருளி வீதி வலம் காண்கிறான். பத்து லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூடும் விழாவாக இது அமைகிறது. விழாவில் தண்ணீர்ப்பந்தல் என்னும் பெயரில் அரங்குகள் அமைக்கப்படுகின்றன. இவற்றில் மக்கள் நன்மைக்காக நீர், மோர், பானகம், ஐஸ்கிரீம், பிரிஞ்சி, புளிசாதம், பொங்கல் முதலான உணவுப் பொருட்கள் பிஸ்கட், சாக்லெட், மிட்டாய்கள் போன்ற தின்பண்டங்களை அவரவர் சக்திக்கேற்ப தானமாக வழங்குகின்றனர். குதூகலமான விழாவாக இது அமைகிறது.
இவ்விழா நாளின் காலையில் திருஞானசம்பந்தர் பதிகம் பாடி, எலும்பும் சாம்பலுமாக எஞ்சியிருந்த பூம்பாவையை உயிர்ப்பிக்கும் ஐதீக விழா நடத்தப்படுகிறது. அங்கம் பூம்பாவை திருவுருவத்தை விமானத்தில் வைத்து அலங்கரித்துத் திருக்குளத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மண்டபத்தில் எழுந்தருள வைத்து திரையிட்டு வைத்திருப்பர். சிவநேசன் செட்டியர் திருஞான சம்பந்தரை எதிர்கொண்டு அழைக்கும் நிகழ்ச்சியும் சம்பந்தர் அவ்விடம் வந்து மட்டிட்ட புன்னை எனக் தொடங்கும் பாசுரத்தைப் பாடும் நிகழ்ச்சியும் நடைபெறும். ஓதுவார் அந்தப் பதிகத்தை முழுவதுமாகப் பாடுவார்.
அத்துடன் பெரிய புராணத்தில் இந்நிகழ்ச்சி தொடர்பாக உள்ள செய்யுள்களும் ஓதப்படும். பாடல்கள் முடிந்ததும், திரையை விலக்கி அங்கம்பூம்பாவைக்கு தீபாராதனை செய்யப்படும். அப்போது அங்கு மண் சட்டியில் வைக்கப்பட்டிருக்கும் நாட்டுச்சர்க்கரையை எடுத்து மக்களுக்குப் பிரசாதமாக வழங்குகின்றனர். பின்னர், அங்கம்பூம்பாவை, சிவநேசர், திருஞானசம்பந்தர் ஆகிய மூவரும் வடக்குமாட வீதியாக வலம் வந்து திருக்கோபுர வாயிலில் நிற்பர். பிற்பகல் இவர்களுக்கு கபாலீஸ்வரர் காட்சி கொடுக்கும் விழா நடைபெறும். அதைத் தொடர்ந்தே அறுபத்து மூவர் விழா கொண்டாடப்படுகிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அறுபத்து மூவர்
» அறுபத்து மூவரும், பன்னிரு ஆழ்வாரும்
» ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசி திருவிழா: பகல் பத்து உற்சவம் இன்று தொடங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum