Top posting users this month
No user |
ஸ்ரீரங்கம் கோவிலில் ஏகாதசி திருவிழா: பகல் பத்து உற்சவம் இன்று தொடங்கியது
Page 1 of 1

திருச்சி, டிச. 22–
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டமாகவும் போற்றப்படுகிறது. இங்கு மூலவராக பெருமாளும், தாயாராக ரெங்கநாயகியும் அருள் பாலிக்கிறார்கள். உலக பிரசித்தி பெற்ற இந்த கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்றது ஆகும்.
ஆழ்வார்கள் பன்னிருவரில் தலைவராகிய நம்மாழ்வாருக்கு மோட்சம் என்றழைக்கப்படும் வைகுந்த பதவி அளிப்பதே வைகுண்ட ஏகாதசி நாளின் சிறப்பாகும். மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி திதியை நடுநாயகமாக கொண்டு முன் பத்து நாட்கள் ‘பகல் பத்து’ என்றும் ஏகாதசி தினத்தில் இருந்து பின் பத்து நாட்கள் ‘ராப்பத்து’ என்றும் 20 நாட்கள் இந்த திருவிழா நடைபெறுகிறது.
விழா நாட்களில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் 4000 பாசுரங்கள் அரையர்களால் பெருமாளுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நேற்று தொடங்கியது. திருவிழாவின் முதல் நிகழ்ச்சியாக நேற்று இரவு 7 மணிக்கு கர்ப்ப கிரகத்தில் திருநெடுந்தாண்டகம் தொடங்கியது. அப்போது நாலாயிர திவ்ய பிரபந்தத்தின் முதல் பாடலான ‘மின்னுருவாய்’ என்று தொடங்கும் பாடல் பாடப்பட்டது. அதைத் தொடர்ந்து 29 பாசுரங்களை பெருமாளுக்கு அரையர்கள் இசையுடனும், அபிநயத்துடனும் சமர்ப்பித்தார்கள்.
பகல் பத்தின் முதல் திருநாள் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இன்று காலை 6.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு அர்ஜூன மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு அரையர் சேவையும், பொது ஜன சேவையும் நடைபெற்றது. மாலை 6.15 மணிக்கு அர்ஜூன மண்ட பத்தில் இருந்து புறப்பட்டு மூலஸ்தானம் சேருகிறார்.
பகல்பத்தின் அடுத்தடுத்த நாட்களில் இதே போல் நம்பெருமாள் அர்ஜூன மண்டபம் எழுந்தருளுகிறார். பகல்பத்து நிகழ்ச்சிகள் 31–ந் தேதி வரை நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 1–ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பரம பதவாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. அன்று இரவு 10 மணி வரை பரமபத வாசல் திறந்திருக்கும். அடுத்து வரும் 10 நாட்களான ராப்பத்து நாட்களில் மதியத்திற்கு பிறகு பரமபத வாசல் திறந்திருக்கும்.
ராப்பத்தின் எட்டாம் நாளான 8–ந்தேதியன்று நடைபெறும் ‘வேடுபறி’ நிகழ்ச்சி நாளன்று மட்டும் பரமபதவாசல் திறந்திருக்காது. விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணுசீனி வாசன், இணை ஆணையர் ஜெயராமன், மேலாளர் விஜயன், கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum