Top posting users this month
No user |
Similar topics
மனக்குறைகள் தீர்க்கும் மாகாளீஸ்வரர்
Page 1 of 1
மனக்குறைகள் தீர்க்கும் மாகாளீஸ்வரர்
புதுவையில் இருந்து 10 கி.மீ. தூரத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது இரும்பை மாகாளீஸ்வரர் ஆலயம். புதுவை-திண்டிவனம் சாலையில் திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் இருந்து 2 கி.மீ. தொலைவு. இங்கு வழிபட்டால் மனக்குறைகள் அனைத்தும் நீங்குகின்றன என்கிறார்கள். குடும்ப விருத்திக்கும், ஒற்றுமைக்கும் புகழ்பெற்ற ஆலயம் இது. 1300 ஆண்டுகளுக்கு முன்பு மாகாள மகரிஷியால் கட்டப்பட்டு அவரால் பூஜிக்கப்பட்டு வந்தது. இதனாலேயே இங்குள்ள இறைவன் மாகாளீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். மாகாள மகரிஷி இதுபோல உஜ்ஜயினி மாகாளம், அம்பர் மாகாளம் ஆகிய ஆலயங்களையும் நிறுவியுள்ளார். திருஞான சம்பந்தர், சுந்தரர், சேக்கிழார் ஆகியோர் இந்த ஆலயத்தைப் பற்றி பாடியுள்ளனர்.ஆலயத்தைச் சுற்றி இலுப்பை மரங்கள் அதிகம் இருந்ததால் அந்த பகுதி இலுப்பை என அழைக்கப்பட்டு பின்னர் அது மருவி இரும்பை என மாறியிருப்பதாக கூறுகிறார்கள். ஆலய கருவறையில் உள்ள சிவலிங்கம் இரண்டாக பிளந்து பின்னர் ஒன்றாக சேர்ந்ததாக கூறப்படுகிறது. அந்த சிலை பிளந்ததற்கான அடையாளங்கள் இப்போதும் காணப்படுகின்றன.
oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum