Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இரும்பை மாகாளீஸ்வரர் திருக்கோயில்

Go down

இரும்பை மாகாளீஸ்வரர் திருக்கோயில் Empty இரும்பை மாகாளீஸ்வரர் திருக்கோயில்

Post by oviya Sat Apr 18, 2015 3:17 pm

தீர்த்தம் : மாகாள தீர்த்தம்
தலவிருட்சம் : புன்னை

புதுவையிலிருந்து திண்டிவனம் செல்லும் வழியில் திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு அருகில் வலதுபுறம் 2 கி.மீ தொலைவு சென்றால், இத்திருக்கோயிலை அடையலாம். புதுவையிலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது. கி.பி. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோவில்.

கோவில் வரலாறு :

சிவனிடம் வரம் பெற்ற அம்பன், அம்பாசுரன் எனும் இரு அசுரர்கள் பார்வதி தேவியின் மீது ஆசை கொண்டு, திருமணம் செய்து கொள்ள விரும்பினர். அவர்களை பார்வதிதேவி, மகாகாளி அவதாரம் எடுத்து வதம் செய்தாள். இதனால் பிரம்மஹத்தி தோஷம் பிடித்த அம்பாள், இத்தலத்தில் சிவனை நோக்கி தவம் செய்து, தோஷம் நீங்கப்பெற்றாள்.

மகாகாளர் எனும் மகரிஷி சிவதல யாத்திரையின் போது வடக்கே உஜ்ஜயினியில் ஒரு லிங்கமும், தெற்கே மயிலாடுதுறைக்கு அருகே அம்பர் மாகாளத்தில் ஒரு லிங்கமுமாக பிரதிஷ்டை செய்து வணங்கினார். அவர் கிழக்கே வந்தபோது, இத்தலத்தின் மகிமையை அறிந்து இங்கேயும் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார்.

சுவாமியும் “மகாகாளநாதர்’ என்ற பெயர் பெற்றார். கோயிலின் கிழக்கு பக்க வாசல் மாகாளேச்வரர் இந்தியாவில் 3 இடங்களில் குடி கொண்டுள்ளார். அவை :- !) உஜ்ஜயினி , 2) அம்பர் (சோழநாடு) 3), இரும்பை மாகாளம்.

கோவில் அமைப்பு :

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். கருவறையில் லிங்கம் மூன்று பாகங்களாக பிளந்து, மூன்று முகங்களுடன் இருக்கிறது. இம்மூன்று பாகங்களையும் ஒரு செம்பு பட்டயத்தில் கட்டி வைத்து பூஜைகள் செய்கின்றனர். இம்முகங்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகளை குறிப்பதாகச் சொல்கிறார்கள்.

சிவனின் இந்த மும்மூர்த்தி தரிசனம் மிகவும் அபூர்வமானது. லிங்கத்தின் நேர் எதிரே நந்திகேஸ்வரர் வீற்றுள்ளார். வெளிப் பிரா காரத்தில் நர்த்தன கணபதி சந்நிதி. இதை அடுத்து தட்சிணாமூர்த்தி சந்நிதி. சற்று தள்ளி விநாயகருக்கும் முருகனுக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.

குயில்மொழி நாயகி:

அம்மனின் திருநாமம் குயில் மொழி நாயகி. இவள் தனிச்சன்னதியில் தாமரை மலர் பீடத்தின் மேல், தெற்கு பார்த்தபடி மகாலட்சுமியின் அம்சத்துடன் நின்ற கோலத்தில் அருளுகிறாள். கடுவெளி சித்தர் அரசமரத்தின் அடியில் தவம் செய்த போது, அம்பாள் குயில் வடிவத்தில் இம்மரத்தில் தங்கியிருந்து சித்தரை கண்காணித்து, அவரது தவத்தின் மேன்மையை தன் குரலால் சிவனிடம் சொல்வாளாம்.

இதனால் அம்பாளுக்கு “குயில்மொழி நாயகி’ என்று பெயர் ஏற்பட்டது. பேச்சு சரியாக வராதவர்கள், இசை கற்பவர்கள், இசைக் கலைஞர்கள் அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபட்டு, அதனை நாக்கில் தடவிக் கொள்கின்றனர்.

இவ்வாறு செய்வதால் குரல் வளம் சிறக்கும், கலைகளில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. அம்பாள் சன்னதிக்கு முன் இடது புறத்தில் நடராஜர் தனிச்சன்னதியில் இருக்கிறார். இவரது கால் சற்று கீழே மடங்கியபடி இருக்கிறது. இதனை நடராஜரின் சந்தோஷ கோலம் என்கிறார்கள் பங்குனி உத்திரத்தில் முருகக் கடவுளுக்கு காவடி எடுப்பது விசேஷமான நிகழ்ச்சியாகும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum