Top posting users this month
No user |
Similar topics
40 ஆண்டு மர்மம் வெளியாகுமா? நேதாஜியின் மறைவு ரகசியங்கள்
Page 1 of 1

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய விவரங்களை வெளியிடுவது தொடர்பாக முடிவு செய்ய மத்திய அமைச்சரவை அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக பாதுகாக்கப்பட்டு வரும் நேதாஜியைப் பற்றி 90 க்கும் மேற்பட்ட ரகசிய கோப்புகளை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதே கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.
எனினும், இவற்றை வெளியிட்டால், மேற்கு வங்க மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும், இந்தியாவின் நட்பு நாடுகள் சிலவற்றுடன் உறவுகள் பாதிக்கப்படும் என்பதால் அந்த கோப்புகள் பகிரங்கமாக வெளியிடப்படாமல் பாதுகாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேதாஜி தொடர்பான ரகசிய கோப்புகளில் உள்ள விபரங்களை வெளியிடலாமா? என்பது தொடர்பாக முடிவு செய்ய அமைச்சரவை செயலாளர் அஜித் சேத் தலைமையில் மத்திய அமைச்சரவை அதிகாரிகள் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பில் உள்ள நேதாஜி தொடர்பான 27 ரகசிய கோப்புகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் பாதுகாப்பில் உள்ள இதர ரகசிய கோப்புகளையும் வெளியிடுவதால் பிற நாடுகளுடனான இந்தியாவின் உறவுமுறைகள் பாதிக்கப்படுமா? என்பது தொடர்பாக இந்த குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த குழுவின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவிருக்கிறது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நேதாஜியின் மரணம் நாடுகளின் தவறுகளுக்காக மறைக்கப்படுகிறதா?
» நேதாஜியின் மரணத்திற்கு காரணம் ஜவஹர்லால் நேரு: இது சாமியின் 2வது குண்டு
» தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 28ம் ஆண்டு வீரவணக்க நாள்! வான்படையின் சிறப்புத் தளபதி கேணல் சங்கரின் 14ம் ஆண்டு வீரவணக்க நாள்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum