Top posting users this month
No user |
Similar topics
விகிதாசார தேர்தல் முறைமையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை: விக்ரமபாகு
Page 1 of 1

விகிதாசார தேர்தல் முறைமையை மாற்றியமைப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாதுதென விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாக இருந்த போதிலும் விகிதாசார முறைமையை மாற்றியமைக்க யாருக்குமே உரிமையில்லை.
விகிதாசார தேர்தல் முறைமை ஜே.ஆர்.ஜயவர்தனவால் மக்களுக்கு வழங்கப்பட்ட வரப்பிரசாதம், இதை யாரும் மாற்றியமைக்க நினைத்தால் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தமது கட்சியின் தலைவர் ஒருவரால் பெற்றுக்கொடுக்கப்பட்ட தேர்தல் முறையை மாற்ற ஐக்கிய தேசிய கட்சி உடன்படும் பட்சத்தில் அது கட்சிக்கும் கட்சித் தலைவருக்கும் இழைக்கும் துரோகம் எனவும், அதனை துரோகி கட்சியாகத்தான் நாம் நோக்குவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற தேசிய நிறைவேற்று சபைக் கூட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஒன்றென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் குறிப்பிட்டிருந்தார்.
மூளைக் கோளாறு உள்ளவர்கள்தான் இரண்டு கட்சிகளும் ஒன்றென இவ்வாறு தெரிவிப்பார்கள்.
கடந்த 2005ம் ஆண்டு மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவு தெரிவித்து அவருக்காக தேர்தல் பிரச்சார பணிகளில் அநுரகுமார திசாநாயக்க முழுமூச்சுடன் செயற்பட்டார்.
மஹிந்த ராஜபக்ஷ அன்று எந்த பாதையை தேர்ந்தெடுத்தார் என்பது அநுரகவிற்கு தெரியாமல் போய்விட்டதா?அன்று மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு இன்று இரு கட்சிகளும் ஒன்றென தெரிவிக்கின்றார்.
தேசிய நிறைவேற்று சபையை உருவாக்குவதற்கு யோசனை முன்வைத்ததும் அவரே தான். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால் மஹிந்த தமது குடும்பத்தை வேரோடு அழித்திருப்பார் என ஜனாதிபதி மைத்திரி தெரிவித்திருந்தார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டிருந்த சமயம் தான் நண்பரின் வீட்டில் மறைந்திருந்ததாக அவர் உலகத்திற்கே அறிவித்திருந்தார்.
அவ்வாறானதொரு கொடுங்கோல் ஆட்சியே கடந்த 10 வருடங்களாக இந்த நாட்டில் நடைபெற்றது.
மற்றையது வெள்ளை வானில் மக்களை கடத்திச் சென்றார்கள், அவன்காட் ஆயுத களஞ்சியசாலையை கடலில் மட்டுமன்றி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலும் வைத்திருந்தனர்.
சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான நவீன ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இவற்றை வைத்து கடந்த ஆட்சி காலத்தில் என்னவெல்லாம் செய்தார்கள் என்று யாருக்கு தெரியும். இவ்வாறான ஒரு ஆட்சியை வேறு எந்த ஆட்சியுடனும் ஒப்பிட முடியாது.
அநுரகுமார ஆரம்பம் எது முடிவு எது என்று அறிந்துகொள்ளாமல் இரு கட்சிகளும் ஒன்றென கூறி வருவது முட்டாள்தனமானது எனவும் தெரிவித்துள்ள கருணாரத்தன,
எதிர்வரும் 19ம் திகதி தேர்தல் முறை குறித்து கலந்துரையாடி முக்கிய தீர்மானங்கள் எட்டப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றாது தேர்தல் நடத்த எவருக்கும் உரிமையில்லை!– ஹெல உறுமய
» நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 225 இருந்து 255 ஆக அதிகரிக்க இணக்கம் - விகிதாசார முறை இரத்து?
» மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை மீற ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் உரிமையில்லை: சமூக நீதிக்கான பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum