Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


விமான பயணத்தில் நடிகை ஸ்ருதியுடன் சண்டையிட்ட அமைச்சர்?

Go down

விமான பயணத்தில் நடிகை ஸ்ருதியுடன் சண்டையிட்ட அமைச்சர்? Empty விமான பயணத்தில் நடிகை ஸ்ருதியுடன் சண்டையிட்ட அமைச்சர்?

Post by oviya Sun Apr 12, 2015 3:42 pm

விமான பயணத்தின் போது ஆந்திர அமைச்சருடன் நடிகை சுருதிஹாசன் தகராறு செய்ததாக வெளியான தகவல் குறித்து அந்த அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகை சுருதிஹாசன் ஐதராபாத்தில் இருந்து திருப்பதிக்கு விமானத்தில் சென்ற போது, அதே விமானத்தில் ஆந்திர மாநில அறநிலையத்துறை அமைச்சர் மாணிக்யால ராவும் பயணம் செய்துள்ளார்.

பயணத்தின் போது மாணிக்யால ராவ் கைப்பேசியில் சத்தமாக பேசியது அது தனக்கு அசவுகரியத்தை ஏற்படுத்தியதால், அதுபற்றி விமான பணிப்பெண்ணிடம் சுருதிஹாசன் புகார் செய்ததாகவும், இதனால் வாக்குவாதம், தகராறு ஏற்பட்டதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில், இது குறித்து மாணிக்யால ராவ் நேற்று விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர் கூறுகையில், திருப்பதிக்கு விமானத்தில் நான் பயணம் செய்த போது, கைப்பேசியில் எனக்கு முக்கியமான குறுந்தகவல் வந்தது.

இதைத்தொடர்ந்து, எனது கட்சிக்காரர் ஒருவருக்கு சிகிச்சை அளிப்பது தொடர்பாக நான் அவசரமாக மருத்துவரிடம் பேசினேன்.

அப்போது எனது முன் இருக்கையில் அமர்ந்து இருந்த சுருதிஹாசன், சத்தம் போட்டு பேச வேண்டாம் என்று என்னிடம் கூறியபோது, அவருக்கு சைகை மூலம் பதில் அளித்துவிட்டு தொடர்ந்து பேசினேன்.

இதையடுத்து சுருதிஹாசன் விமானப் பணிப்பெண்ணிடம் கூறியதால், அவர் என்னிடம் வந்து, ‘சற்று மெதுவாக பேசுங்கள்’ என்று கூறினார்.

அவரிடமும் நான், முக்கியமான விஷயம் பற்றி பேசுவதால், 2 நிமிடம் அனுமதிக்குமாறு சைகை மூலம் தெரிவித்து விட்டு பின்னர் பேசி முடித்ததும் கைப்பேசியை ‘சுவிட்ச் ஆப்’ செய்து விட்டேன்.

மேலும், நடந்தது இது தான் என்றும், மற்றபடி எனக்கும் சுருதிஹாசனுக்கும் இடையே வாக்குவாதமோ, தகராறோ நடைபெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum