Top posting users this month
No user |
Similar topics
எண்ணத்தில் நலமிருந்தால் இன்பமே எல்லோர்க்கும்...!
Page 1 of 1

* மனதில் எழும் எண்ணங்களை வடிகட்டி, நல்லதை திரும்பத் திரும்ப எண்ணுவதும், தேவையற்ற தீய எண்ணத்தை விட்டுவிடவும் தீர்மானிப்பதே எண்ணம் ஆராய்தலாகும்.
* மனிதன் உணர்ச்சி வசப்பட்டவனாக இருப்பது கூடாது. அந்நிலையில் நம் தவறை திருத்திக் கொள்ள முடியாது. அறிவு நிலையில் மனதை வைத்துக் கொள்ள பழக வேண்டும்.
* வாழ்வில் திடீரென எந்த புதிய மாற்றத்தையோ, சாதனையோ செய்து விட முடியாது. படிப்படியாகத் திட்டமிட்டால் நல்ல மாற்றங்களை வரவழைத்துக் கொள்ள முடியும்.
* நற்பண்பு என்பது நல்ல சிந்தனையோடு ஒன்றிய செயல், நற்செயலோடு ஒன்றிய சிந்தனையாக வாழ்வதே.
* மனத்தூய்மை, ஒழுங்கான உணவு, அளவான உழைப்பு, முறையான ஓய்வு இவற்றுடன் கூடிய வாழ்க்கை நோயற்ற வாழ்விற்கு துணை புரியும் காரணிகள்.
* வாழ்வின் நோக்கம், அதற்குரிய வாழ்க்கை முறை இரண்டையும் அறிந்தவனே இன்பமாக வாழ முடியும்.
* தெளிந்த திறனும், ஆற்றலும் படைத்த நல்ல எண்ணத்திற்கு இயற்கையே கட்டுப்பட்டு ஒத்துழைக்கிறது.
* மனதை அடக்க நினைத்தால் அலையத் தொடங்கும். அறிய நினைத்தால் அடங்கி விடும்.
* தன்னைத் தானே தாழ்த்திக் கொள்வதும், உயர்த்திக் கொள்வதும் மனதில் தான் இருக்கிறது. மனதை உயர்த்திக் கொண்டால் மாண்பு மிக்க இன்ப வாழ்வு பெற்று மகிழலாம்.
* நல்ல எண்ணத்தை விருப்பத்துடன் மனதில் இயங்க விடுவதோடு, கவனத்துடன் தவறான எண்ணங்களை தவிர்ப்பதும் மிகவும் அவசியமானது.
* உலகிலுள்ள அனைவருக்கும் நன்மை தருவனவற்றை மட்டுமே மனதால் எண்ணவும், வாயால் சொல்லவும், செயலால் செய்யவும் வேண்டும்.
* எண்ணத்தில் உறுதி, ஒழுங்கு, நலம் அமைந்து விட்டால் எல்லாருக்கும் அனைத்தும் எண்ணிய வகையில் ஈடேறும்.
* உண்மையில் மனிதனுக்கு எதிரி ஒருவன் இருக்கிறான் என்றால், அது உள்ளத்தில் எழும் ஒழுங்கற்ற எண்ணமே.
* உண்ணும் உணவு உடம்பெங்கும் பரவி ஆற்றலை உண்டாக்குகிறது. ஆனால், எண்ணும் எண்ணமோ உலகெங்கும் பாயும் சக்தி படைத்தது.
* திறமையையும், வல்லமையையும் பெருக்கிக் கொள்ள இடைவிடாமல் முயற்சிக்க வேண்டும்.
* எந்த ஒரு சூழ்நிலையிலும் கோபம் மனதில் வராவிட்டால், அந்த மனிதன் ஞானம் அடைந்து விட்டதாகவே பொருள்.
* "கடவுளாக நான் இருக்கிறேன்' என்ற உயர்ந்த நிலையை ஒருவன் உணர்ந்து விட்டால், அவனிடத்தில் சிறிய "நான்' என்னும் அகந்தை அற்று விட்டதாக அர்த்தம்.
* வாழ்வில் சிறக்க வேண்டும் என்றால் எப்போதும் எல்லோரையும், "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தக் கற்றுக் கொள்ளுங்கள்.
* பிறரை வாழ்த்தும் போது மனம் ஒரு நுண்ணிய அமைதி நிலைக்கு ஆட்படுகிறது. அதனால், மனதில் வலிமையும் தெளிவும் உண்டாகிறது.
* ஒரு சிறு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தினால், அதன் பலவீனம் நீங்கி நன்றாக வளரத் தொடங்கும்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum