Top posting users this month
No user |
Similar topics
தாயின் முகம் இங்கு நிழலாடுது! தந்தை மனம் இங்கு உறவாடுது!
Page 1 of 1

எப்போதும் நல்லவனாக இருக்க அக்கறை செலுத்துங்கள். காலப்போக்கில் உங்களின் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள்.
* அனைத்தும் மனதில் தான் இருக்கிறது. தூய்மை, தூய்மையின்மை என்னும் இரண்டும் அவரவர் மனநிலையைப் பொறுத்ததே.
* மனதில் தூய்மை இருக்குமானால், எண்ணும் எண்ணம், காணும் காட்சி, செய்யும் செயல் அனைத்திலும் அதன் பிரதிபலிப்பை காண முடியும்.
* கடமையை மட்டும் செய்து கொண்டிருங்கள். அதே சமயத்தில் ஆழ்மனதில் கடவுள் மீது அன்பு செலுத்துங்கள்.
* உலகின் நிலையாமையை உணர்ந்து விட்டால், கடவுளின் திருவடிகளில் சரணடைவது எளிய காரியம் தான்.
* பயப்பட வேண்டாம்! கலியுகத்தில், மனதால் செய்யும் பாவம் பாவமே ஆகாது. அதனை எண்ணிச் சிறிதும் வருந்த வேண்டாம்.
* ஈடுபடும் செயலில் வெற்றி பெற வேண்டுமானால், உடல் உழைப்பும், விடாமுயற்சியும் மிக அடிப்படையானவை.
* உண்மையான பக்தி இருக்குமானால், புனிதப் பயணத்தால் ஏற்படும் பயனை விட அதிகமாகவே வீட்டில் இருந்தே கூட பெற முடியும்.
* ஆசை இருக்கும் வரை பிறவிச்சங்கிலி தொடர்ந்து கொண்டேயிருக்கும். நுண்ணிய விதை போல இருக்கும் ஆசை பெரிய ஆலவிருட்சம் போல வளர்ந்து விடும் ஆற்றல் படைத்தது.
* மனிதன் தனக்குத் தேவையானதை தேடுவதில் அக்கறை காட்டுவதில்லை. குறுகிய புத்தியின் காரணமாக வேண்டாதவற்றை சிந்தித்துக் கொண்டிருக்கிறான்.
* உலகிலுள்ள அனைவரும் ஆசை எண்ணங்களைத் துறந்து விட்டால், இந்த உலகமே முடிவிற்கு வந்து விடும்.
* கடவுளே தாயும், தந்தையுமாக இருந்து நம்மை வழி நடத்துகிறார். அவரைப் பிரார்த்திப்பவர்கள், தங்களுக்கு ஏற்படும் துன்பத்தில் இருந்து எளிதாக விடுதலை அடைகின்றனர்.
* சாதிக்க முடியாததையும் சாதிக்கும் திறன் பக்திக்கு மட்டுமே இருக்கிறது என்ற உண்மையை அனுபவத்தின் வாயிலாக மட்டுமே உணர முடியும்.
* அன்பின்றி ஆண்டவனை அறிய முடியாது. பக்திக்கு அடிப்படை உண்மையான அன்பு மட்டுமே.
* சந்தேகம், நம்பிக்கை இரண்டுமே மனதில் எழுகிறது. சந்தேகத்தை புறக்கணித்து விட்டு நம்பிக்கையில் உறுதி கொண்டு நில்லுங்கள்.
* தூங்கிக் கொண்டிருக்கும் சோம்பலை விட்டு, சுறுசுறுப்புடன் பணியாற்றுங்கள். தோள்களை நிமிர்த்தி, அரிய செயல்களை வாழ்வில் சாதித்துக் காட்டுங்கள்.
* இரும்பு யுகமான இந்த கலியுகத்தில் சத்தியத்தைக் கடைபிடிப்பதே பெருந்தவம். அதைப் பின்பற்றினால் தெய்வீக நிலையை அடையலாம்.
* தாய், தந்தையரை காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை. அவர்களிடம் உள்ள சொத்துக்காக மதிப்பு அளிப்பது என்பது நன்றியற்றவர்களின் செயல்.
* பொறுமைக்கு நிகரான பண்பு வேறில்லை. அதுவும் பொறுமை பெண்களுக்கு பன்மடங்கு சிறப்பைத் தருகிறது.
* உண்மை என்பதற்காக பிறருக்கு துன்பம் தரும் விஷயங்களை கண்மூடித்தனமாகச் சொல்வது இரக்கமற்ற மனிதர்களின் செயல்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum