Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


மார்கழி நாயகியே! உன் மலர் திருவடியை எப்போது தரிசிப்போம்

Go down

மார்கழி நாயகியே! உன் மலர் திருவடியை எப்போது தரிசிப்போம் Empty மார்கழி நாயகியே! உன் மலர் திருவடியை எப்போது தரிசிப்போம்

Post by oviya Sat Apr 11, 2015 2:15 pm

* நெஞ்சமே! நான் சொல்வதைக் கேட்பாயாக. ஆண்டாள் நாச்சியார் முன்செய்த தீவினைகளைப் போக்கி நம்மைக் காத்திடுவாள். மேலான இன்பமான மோட்ச கதியளித்து நம்மைக் கரை சேர்ப்பாள். இனிமையும், நன்மையும் தரும் நல்வாக்கினைத் தந்து உயர்வளிப்பாள். திருப்பாவை பாடிய செல்வ மகளான ஆண்டாளின் சிவந்த திருவடிகளை தினமும் வணங்குவோமாக.
* ஆண்டாளின் திருவடிகளைச் சரணடைந்து விட்டால் வேறு வழிபாடு ஏதும் செய்ய வேண்டாம். பிரம்மன் உள்ளிட்ட தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் யாவரும் வணங்கும் வைகுண்டப்பெருமான் மீது பாசுரம் பாடிய அந்த உத்தமியைச் சரணடையுங்கள்.
* பெரியாழ்வாரின் பிரியமான புத்திரியும், ஹரி நாமத்திலே லயித்து, அவன் திருவடிக்கே பக்தி செய்தவளும், மூவுலகங்களும் போற்றும் ஸ்ரீவில்லிபுத்தூரில் வீற்றிருப்பவளுமான கோதை நாயகியின் பாதார விந்தங்களைப் பற்றிக் கொள்வோமாக.
* "உலகம் தழைத்தோங்க அவதரித்தவளே! ஹரி நாம சங்கீர்த்தனமே தன் ஜீவனாகக் கொண்டவளே! ஸ்ரீரங்கநாயகனுக்கு உகப்புடன் மாலை அளித்த செல்வப்பெருமாட்டியே!' என்று சொல்லி வழிபட்டு ஆண்டாளின் பாதத்தை அடைக்கலம் புகுந்திடு வோமாக.
* ஆண்டாளைப் போல யாரையேனும் உலகில் பார்த்ததுண்டா? மங்கள வாழ்வு அருளும் திருவடிவம் கொண்டவள் அவள். பாவை பாடிய சுடர்க்கொடி. ஆயர்பாடி ஆய்ச்சியர் ஈடேற்றம் பெற வந்த மாதவச்செல்வி. அவளது பாதங்களைச் சரணடைவோம்.
* சேலைகளைத் திருடியவனும், புன்னை மரத்தில் ஒளிந்தவனுமான கண்ணனைப் பாடியவளே! நடனகோபாலன் என்னும் குடக்கூத்தாடும் திருமாலைச் சரணடைந்தவளே! கோபியர் மனக்குறை தீர்த்த கிருஷ்ணனை மனதில் பதித்தவளே! உன் செந்தாமரைப் பாதங்கள் எங்களுக்கு அடைக்கலமாகட்டும்.
* கண்ணனின் திருக்கரம் பற்றியவளும், அவனை மணக்க கனா கண்டு பாசுரம் பாடியவளுமான ஆண்டாளே! உனது கருணையை நாங்கள்
எப்போது பெறுவோமோ? புண்ணியம் மிகுந்த திவ்யதேசமான ஸ்ரீவில்லிபுத்தூரை நாங்கள் சென்று சேர்வது எப்போதோ?
* அச்சுதனும், அனந்தனுமான கண்ணன் மீது ஆசை வைத்த ஆண்டாளின் திருவடிகளை எங்கள் தலையில் ஏற்பது எப்போதோ? மூவுலகம் போற்றும் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு முடிவாகச் சென்று சேவிப்பது எப்போதோ?
* துளசிவனத்தில் அவதரித்து, உலகம் ஆண்ட ஆண்டாளே! உனக்கு தொண்டு புரியும் பாக்கியம் எப்போது கிடைக்குமோ? நீர்வளம் மிக்க முக்குளம் நிறைந்த ஸ்ரீவில்லிபுத்தூர் திருத்தலத்தை, எங்கள் உள்ளம் மகிழ அடைவது எப்போதோ?
* அன்னம் போல நடைபயிலும் ஆண்டாளின் திருவடியின் கீழ் வாழும் பாக்கியம் எப்போது எங்களுக்கு கிடைக்குமோ? அன்னவயல் என்றும், புதுவை நகரம் என்றும் சொல்லப்படும் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சென்று சேரும் பாக்கியம் எங்களுக்கு எப்போது கிடைக்குமோ?
டூஆடிப்பூரத்தில் அவதரித் தவளே! குயில் போல் பாசுரம் பாடியவளே! குலமாதர் குணம் காக்கும் கோதை ஆண்டாளே! உனக்கு பணி செய்யும் பாக்கியம் எப்போது கிடைக்கும்? கண்கள் குளிரும்படி ஸ்ரீவில்லிபுத்தூர் நாயகியான உன்னைக் காணும் பேறு எப்போது வாய்க்கும்? தாயே! உன்னை வேண்டி நிற்கும் எங்களுக்கு விரைந்து அருள் புரிய வேண்டும்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum