Top posting users this month
No user |
Similar topics
தேர்தல் திருத்தச்சட்டம் தற்போதைக்கு இல்லை! 19வது திருத்தம் நிறைவேற்றப்படும்!- பிரதியமைச்சர் அஜித் பெரேரா
Page 1 of 1

புதிய தேர்தல் முறைமை தற்போதைக்கு கொண்டுவரப்பட மாட்டாது என வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
19வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் நிறைவேற்று அதிகாரங்கள் குறைந்த ஜனாதிபதி முறைமை எஞ்சியே உள்ளது.
முன்னதாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்பட வேண்டுமாயின், பாராளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உட்பட சில அரசியல் சக்திகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தன.
தற்போது உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்திற்கு அமைவாக உத்தேச 19வது திருத்தச்சட்டத்தில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தவேண்டி காணப்படும் சரத்துக்கள் அகற்றப்பட்ட பின்னர் அதனை நடைமுறைப்படுத்துவதால் அப்பிரச்சினையிலிருந்து வெளிவரக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
அத்திருத்தம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்களில் நிச்சயம் குறைவு ஏற்படும். 19வது திருத்தச்சட்டம் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் நிறைநவேற்றப்படும் எனவும் குறிப்பிட்டார்.
19வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பாராளுமன்றம் கலைக்கப்படும் பட்சத்தில் தற்போதுள்ள முறைமையிலேயே தேர்தல் நடைபெறும். தேர்தல் முறைமை தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக இந்த 19வது திருத்தச்சட்ட நடைமுறையின் பின்னர் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய தேர்தல் முறைமையொன்று அமைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
தற்போதைக்கு தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» யார் விலகிச் சென்றாலும் பிரச்சினை இல்லை!- அஜித் பீ பெரேரா
» 20வது திருத்தச்சட்டம் குறித்து இணக்கம் இல்லை: விஜேதாச ராஜபக்ஸ
» நாமலின் டுவிட்டர் கருத்து தவறானது: அஜித் பீ பெரேரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum