Top posting users this month
No user |
Similar topics
சுன்னாகம் கிணறுகளில் கழிவுப் படிமங்கள்! நீரைப் பருக வேண்டாம்!- அமைச்சர் ஹக்கீம்
Page 1 of 1

சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள பல கிணறுகளில் கிறீஸ் படிமங்களும் கழிவு எண்ணெய் படிமங்களும் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் மேற்படி கிணறுகளின் நீரைப் பருகுவதை மக்கள் தவிர்த்துக் கொள்ளுமாறு நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று சபையில் தெரிவித்தார்.
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் நிபுணர்கள் குழு மேற்படி கிணறுகளின் மாசுகள் தொடர்பில் உறுதிப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
மேற்படி கிணறுகளில் படிந்துள்ள படிமங்கள் வேறு கிணறுகளுக்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் இக்கிணறுகளில் கழிவு எண்ணெய் படியவில்லை என வடக்கு மாகாண சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை கூறுவதாக கூறப்பட்டு வருகிறது.
அவ்வறிக்கையை நான் கோரிய போதிலும் இதுவரையிலும் அதனை காட்டவில்லை என்றும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன் போது தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நேற்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா இது தொடர்பாக எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே ஹக்கீம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்
சுன்னாகம் பிரதேசத்தில் அமைந்துள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் படிந்துள்ளது என்பதை ஆராய்வதற்கு தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதன்போது இடம்பெற்ற ஆய்வில் 73 வீதமான கிணறுகளில் கழிவு எண்ணெய் படிமங்கள் படிந்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.
மேற்படி மின் உற்பத்தி நிறுவனத்தை சுற்றியுள்ள 2.5 கிலோ மீற்றர் பிரதேசங்களில் இந்த பாதிப்பு உள்ளது. இதனால் தான் நாம் அப்பிரதேச மக்களுக்கு தினமும் ஆறு பௌசர்களில் நீர் விநியோகித்து குடும்பமொன்றுக்கு 250 லீற்றர் நீரை வழங்கி வருகின்றோம்.
இதற்கான செலவை நாம் அந்த மின்சார சபையிடமே பெற வேண்டியுள்ளது. அவர்களால் தான் இந்த பிரச்சினை உருவானது. இந்நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
மேலும் இன்று (நேற்று) காலை பிரதமரின் தலைமையில் நடந்த கூட்டத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படும் நீர் விநியோகத் திட்டத்தில் சுன்னாகம் பகுதியை உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2 வருடங்களில் நடைமுறைக்கு வரும் இக் கூட்டத்தில் சம்பந்தனும் கலந்து கொண்டிருந்தார் என்றார்.
அப்பகுதியிலுள்ள கிணறுகளில் கழிவு எண்ணெய் கிறீஸ் படிமங்கள் இருப்பதனால் மக்கள் அக் கிணற்று நீரை அருந்தக் கூடாது அத்துடன் நாம் எமது ஆய்வுகளை இன்னும் விரிவுபடுத்தியுள்ளோம்.
அப்பகுதிகளிலுள்ள சகல கிணறுகளிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளோம். சுன்னாகம் பிரதேசத்திற்கு மேலதிக நீர் தேவைப்பட்டால் அதனை வழங்கத் தயாராக இருக்கின்றோம் என்றார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» வடக்கு கிழக்கு ஒன்றிணைந்த ஆட்சி வேண்டாம்! நல்லாட்சி போதும்: ஹக்கீம்
» அமைச்சர் நந்திமித்ரவுக்கு ஐ.தே.கட்சியில் வேட்புமனுவை வழங்க வேண்டாம்: மாத்தளையில் தீர்மானம்
» வாய்த் தகராறுடன் திறந்து வைக்கப்பட்ட கார்பெக்ஸ் பாடசாலையின் ஆய்வுகூடம் - பாடசாலைக்குள் அரசியலை கொண்டுவர வேண்டாம்: கல்வி இராஜாங்க அமைச்சர் வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum