Top posting users this month
No user |
Similar topics
மேர்வின் சில்வா வெளியிடும் தகவல்களால் மகிந்த குழப்பத்தில்
Page 1 of 1

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச குடும்பத்தினருடன் மிகவும் நெருக்கமாக இருந்த முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா, தற்போது ராஜபக்ச குடும்பத்தினர் தொடர்பாக வெளியிட்டு வரும் தகவல்களால், மகிந்த ராஜபக்ச உட்பட முக்கிய நபர்கள் பெரும் குழப்பத்தில் இருந்து வருவதாக தெரியவருகிறது.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அண்மையில் வழங்கி பேட்டி ஒன்றில் கருத்து வெளியிட்ட மேர்வின் சில்வா, ராஜபக்சவினர் செய்யுமாறு கூறிய வேலைகளையே தாம் செய்ததாகவும் பின் அவர்கள் செய்நன்றி மறந்து போயினர் என்றும் கூறியிருந்தார்.
அத்துடன் வெள்ளை வான் சம்பவங்களின் பின்னனியில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இருப்பதாகவும் அவர் வெள்ளை வான் கலாச்சாரத்தின் பிதாமகன் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டிருந்தார்.
தன்னிடம் இதற்கான சாட்சியங்கள் இருப்பதாகவும், கோத்தபாய ராஜபக்ச உருவாக்கியுள்ள கொலை செய்யும் குழுக்கள் இன்னும் சுதந்திரமாக நடமாடுவதாகவும் இந்த தகவல்களை வெளியிடுவதால், தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
கம்பஹா தெல்கொட பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, தான் உட்காரும் போது உட்கார அஞ்சியவர்களும் தன் காலடியில் அமர்ந்தவர்களும் தற்போது தன்னை பற்றி பல கதைகளை கூறி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
தற்போது நாட்டில் பலர் அதிகாரங்களை தன்வசம் எடுத்து கொண்டு செயற்பட்டு வருவதாக கூறி மகிந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவையும் விமர்சித்துள்ளார்.
தன்னை அரசியலுக்கு வர வேண்டும் எனக் கூறுபவர்கள் அரசியலுக்கு வந்து செயற்படுவதாகவும் அவர்கள் செல்வந்தர்கள் என்பதால், அரசியலுக்கு வர முடிந்திருக்கலாம் எனவும் மகிந்த சந்திரிக்காவை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் ஒருவருக்கு வாக்களித்த போதிலும் நிறைவேற்று சபையில் இருந்து கொண்டு பலர் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» எனக்கு எதிரான முறைப்பாட்டை நிராகரிக்கிறேன்! மேர்வின் சில்வா
» நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்கான காரணத்தை கண்டுபிடித்தார் மேர்வின் சில்வா!
» வெள்ளை வான் கடத்தல் தொடர்பில் சாட்சியமளிக்கும் மேர்வின் சில்வா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum