Top posting users this month
No user |
Similar topics
பராசக்தியே வருக ! நல்லருள் தருக !
Page 1 of 1
பராசக்தியே வருக ! நல்லருள் தருக !
ஆடி மாதத்தில் அம்பிகை வழிபாட்டை நாம் செய்து கொண்டிருக்கிறோம். அவள் பராசக்தியாக விளங்குகிறாள். பராசக்தி என்பதற்குரிய விளக்கத்தையும் நாம் தெரிந்து கொண்டாக வேண்டுமே! படிப்போமா!
ஆதியில் ஒளி தோன்றியது. அந்த ஒளியில் ஆதிசக்தி தோன்றினாள். படைக்கும் கடவுளாக பிரம்மனையும், காக்கும் கடவுளாக விஷ்ணுவையும், அழிக்கும் கடவுளாக சிவனையும் படைத்தவள் சக்தியே. அந்த ஆதிசக்தியே கல்விக்குரிய கலைமகளாக, செல்வத்திற்குரிய அலைமகளாக, வீரத்திற் குரிய மலைமகளாகவும் ஆட்சி செய்கிறாள். தாய்க்கெல்லாம் தாயாக இருக்கும் இந்த சக்தி உயர்ந்தவள் என்பதாலேயே, மாதா, பிதா, குரு, தெய்வம் என்று தாயை முதன்மையாக வைத்தார்கள். அன்னையில்லாமல் இந்தப் பிள்ளை இல்லை என்னும் வழக்கும் இதனால் தான் உண்டானது. இந்த ஆதிசக்தியை பராசக்தி என்றும்
வழங்குவர். "பரா' என்றால் அளவிடமுடியாதது என்பது பொருள். அளவிடவே முடியாத சக்தியின் இருப்பிடமாகத் திகழ்வதால் அம்பிகை பராசக்தி எனப்பட்டாள். இவளே ஆலயங்களில் அருள் செய்கிறாள். ஒவ்வொரு இடங்களிலும் ஒவ்வொரு வடிவழகு கொண்டு வெவ்வேறு திருநாமங்களில் வழங்கப்படுகிறாள். மகாசக்தி உமையவளே
மாரியாக, காளியாக, சங்கரியாக, துர்க்கையாக, முத்தாரம்மனாக, இசக்கியம்மையாக கொலு
வீற்றிருந்து உலக உயிர்களை தன் கடைக்கண்ணால் காத்து கரையேற்றுகின்றாள்.
அவளை வணங்கும் போது,
""தனம் தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம் தரும், நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே!''
என்று இந்த வார ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகளில் பாடி மகிழ்வோமே
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum