Top posting users this month
No user |
நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்
Page 1 of 1
நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்
நல்லருள் புரியும் நால்வர் நற்பதம்
விலைரூ.125
ஆசிரியர் : வ.த.இராமசுப்பிரமணியன்
வெளியீடு: திருமகள் நிலையம்
பகுதி: சமயம்
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தெய்வத் தமிழைப் பாடி, சைவத்தை தன்நிலைக்கு உயர்த்தியவர் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தியார், மாணிக்கவாசகர் ஆகிய நால்வர். இவர்களது நற்றமிழ் பணிகளை இந்நூல் விவரிக்கிறது.திருஞானசம்பந்தர் அவதார நோக்கங்களாக சேக்கிழார் காட்டும் எட்டு காரணங்கள்:
*சைவம், வைதீகம் தழைத்தல்,
*திருநீறு பொலிதல்
*ஏழிசை வளர்தல்
*வேதம், வேள்வி பரவல்
*தமிழ் உயர்தல்
*உலகம் மகிழ்தல்
*பிற மதம் விலகல்
*சைவநெறி ஒளிர்தல்
இந்த எட்டும் நூலில் விளக்கப்பட்டுள்ளன. "திருநெறிய தமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாகும் என்று தமிழில் வல்லவர், பாடல்பாடி பாவங்கள் தீர்த்து விடுவதாக கூறியுள்ளார்.
சமணத்தை வென்று சம்பந்தரும், அப்பரும், சைவத்தை நிலைநாட்டியதும், பவுத்தத்தை வென்று மாணிக்கவாசகர் சைவத்தை உயர்த்தியதும் நூலில் முத்திரை பதித்து எழுதப்பட்டுள்ளது சிறப்பாகும். ஆனால், முன் முகப்பு நூல் படத்தில் அம்மன் படத்தை அப்பர் என்றும் கோவில் பூசாரியை சுந்தரர் என்றும் காட்டியிருப்பது தவறல்லவா?
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum