Top posting users this month
No user |
Similar topics
விக்னேஸ்வரன் ஒரு நீதி அரசியல்வாதி
Page 1 of 1
விக்னேஸ்வரன் ஒரு நீதி அரசியல்வாதி
உயர்நீதிமன்ற நீதியரசராக இருந்து ஓய்வுபெற்ற சி.வி. விக்னேஸ்வரனிடம் அயோக்கியர்களின் புகலிடமாக இருக்கும் அரசியல் துறையில் பிரவேசிக்க தயக்கம் இருந்து வந்தது.
எனினும் ஒரு இன அழிப்பு போரின் உச்சக்கட்டம் காரணமாக அவர் ஆழமாக அர்ப்பணிப்புடன் கூடிய அரசியலுக்குள் பிரவேசித்தார்.
விக்னேஸ்வரன் புதிய சுவாசத்துடன் மற்றவர்களில் இருந்து வேறுப்பட்ட நேர்மையான மற்றும் தைரியமான அரசியல்வாதியாக இருப்பார் என்பதால், அவரது அரசியல் வருகையை தமிழர்கள் வரவேற்றனர்.
தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற பின்னர் 2013 ஆம் ஆண்டு கொழும்பில் உள்ள விக்னேஸ்வரனின் வீட்டில் அவரை சந்தித்த ஊடகவியலாளர் ஒருவர் அரசியல் தொடர்பில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள விக்னேஸ்வரன், தன்னை ஏனைய அரசியல்வாதிகளுடன் ஒப்பிட வேண்டாம் எனவும் தான் மற்றையவர்களை விட வித்தியாசமானவர் என கூறியுள்ளார்.
முதலமைச்சராக பதவிக்கு வந்த பின்னர் அவரது வார்த்தைகளும், நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருந்ததுடன் அவர் தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியிருந்தார். மகிந்த ராஜபக்சவும் வடக்கு மாகாண சபை தொடர்பில் பல வாக்குறுதிகளை விக்னேஸ்வரனுக்கு வழங்கியிருந்தார்.
ஜனாதிபதி என்ற வகையில் மகிந்த ராஜபக்ச இந்த வாக்குறுதிகளை வழங்கியதாக விக்னேஸ்வரன் நம்பினார்.
எனினும் மகிந்த ராஜபக்ச அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாது தான் கீழ் மட்ட அரசியல்வாதி என்பதை காட்டினார்.
விக்னேஸ்வரன் தனது அதிகாரத்தையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக்கொள்வதற்காக இராணுவ ஆளுநருடன் மோத வேண்டியிருந்தது. எனினும் அரசியல் அதிகாரம் அவருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது.
இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன புதிய ஜனாதிபதியாக தெரிவானார். அவர் தமிழ் மக்களின் மனதையும் எண்ணங்களையும் வெல்ல சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற போதிலும் 60 வருடங்களாக நீடித்து இருக்கும் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இன்னும் முனைப்புகளை மேற்கொள்வில்லை.
மைத்திரிபால சிறிசேனவின் வெற்றிக்கு தமிழ் மக்களே பின்பலமாக அமைந்தனர் என்பதால், ஜனாதிபதி என்ற வகையில், தமிழர்களின் பிரச்சினைளுக்கு தாமதமின்றி தீர்வை வழங்க வேண்டியது அவரதும் அவரது அலுவலகத்தினதும் பொறுப்பும் கடமையுமாகும்.
எவ்வாறாயினும் இலங்கை என்பது சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என வெளியாகும் அறிக்கைகள் மூலம் சிங்கள அரசியல்வாதிகள், கடந்தகால மகாவம்ச மனநிலை அரசியல் தலைவர்களில் இருந்து மாறியிருப்பதை அவதானிக்க முடிகிறது.
மைத்திரிபால சிறிசேன ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர் என்பதால், நல்லாட்சி, சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றங்களுக்கு தண்டனை வழங்கி பொறுப்புக்கூறலுக்கு விக்னேஸ்வரன் அழுத்தங்களை கொடுக்க வேண்டும்.
இந்த நேசத்துக்குரிய கொள்கைகளில் ஏதேனும் ஒரு தோல்வி கண்ட பிறகு மற்றொரு அரசியல் சந்தர்ப்பத்தை தேடுவதே ஒரு ராஜதந்திரம்.
அவ்வாறான வாய்ப்பு தவறவிட்ட நிலையில், முடிவடைந்துவிட்டது என்றாலும் விக்னேஸ்வரனின் இனப்படுகொலை தீர்மானம், தைரியமான வெளிப்படையான மற்றும் தகுதியுடைய தீர்மானமாகும்.
1948 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது முதல் நேரடி மற்றும் மறைமுக இனப்படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சந்தர்ப்பவாத தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசியல் சக்திகளுடன் இணைந்து கடந்த அரசு தமிழர்களின் அரசியல் சக்தி மற்றும் உடல் பலத்தை இரக்கமற்றவகையில் ஒடுக்கியது. இது அரச பயங்கரவாதத்தை ஊக்குவித்தது.
தமிழர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களின் முகங்களில், மிறச்சி, இராணுவமயப்படுத்தல் மற்றும் நில ஆக்கிரமிப்பு சாதாரண குடிமக்கள் பாதுகாப்புப் படைகளால் ஆக்கிரமிக்கப்படுதல், குறைவான வாழ்வாதாரம், பாதுகாப்பு படைகளின் தயவில் இருக்க வேண்டிய நிலைமை என்பன தமிழ் மக்கள் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினைகளாகும்.
இந்த நிலையில், முன்னெடுக்கப்பட்டுவரும், பொதுமக்கள் ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்திற்கு எந்த தாக்கத்தையும் உருவாக்கியதாக தோன்றவில்லை.
பிரச்சினைகளை அதிகரித்து நிலைமையை மேலும் மோசமாக்கும் விதத்தில், ரணில் மற்றும் சம்பிக்க போன்ற மைத்திரியின் பங்காளிகளின் செயற்பாடுகள் மைத்திரி அரசாங்கத்தின் நேர்மை தொடர்பில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சி.வி. விக்னேஸ்வரன் நல்ல மனிதர் அவருடன் எளிதாக வடக்கு மற்றும் கிழக்கு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என மைத்திரி, சி.வியை பாராட்டும் படி தெரிவித்துள்ளார்.
எனினும் விக்னேஸ்வரன் பொய்யர், அவரது பேச்சு பெறுமதியானதல்ல என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளர்.
மைத்திரி, சி.வியின் நீதித்துறை நேர்மையை புரிந்து கொண்டுள்ளார் எனினும் சி.வி அரசியல் நேர்மையை புரிந்து கொள்ளவில்லை.
இனப்படுகொலை மற்றும் சர்வதேச விசாரணை தொடர்பான விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சேர்ந்த சிலர் மைத்திரியின் மந்திரத்தை நம்புகின்றனர். சிலர் எதிர்க்கின்றனர். சிலர் ஆர்ப்பாட்டங்களை நடத்துகின்றனர்.
ஐக்கியமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இல்லாமல் தமிழ் மக்களின் கோரிக்கைகளை பிரதிபலிப்பது என்பது சந்தேகத்திற்குரியது என்பதை மன்னர் ஆயர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
அனைத்து தமிழ் குழுக்களை ஒன்றிணைத்து தமிழர் ஐக்கிய முன்னணியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மாற்றுவது சிறந்ததாக அமையும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சீரமைக்கப்பட்டு உருக்குலைந்த தமிழர்களை காப்பற்றுவதற்காக ஒரு உறுதியான பாதையில் அஞ்சாத, உண்மையாக செல்லக் கூடியவர்களிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட வேண்டும்.
தெளிவான மற்றும் வெளிப்படையான உண்மையான தமிழ் அரசியல்வாதிகளுக்கு உலக அளவில் குறிப்பாக புலம்பெயர் நாடுளில் பரிவும் ஆதரவும் இருந்து வருகிறது.
மைத்திரி அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவுக்காக வலிந்து சென்று செயற்படும் விதமாக தனது ராஜதந்திர பாதையை மாற்றிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தமிழர்களுக்கான சர்வதேச ஆதரவை நீக்கிவிடக் கூடிய முயற்சியாக காணப்படுகிறது.
மைத்திரியின் மென்மையான கருத்துக்கள் விக்னேஸ்வரனுக்கு முறையான நீதி காத்திருக்கிறது என்று தோன்றலாம்.
விக்னேஸ்வரனின் தமிழ் வரலாற்றில் பதிவுகள், இராணுவமயப்படுத்தல் மற்றும் இனப்படுகொலை பிரச்சினை குறித்த துணிச்சல் யதார்த்தமான தோரணைகளை உடைக்கும் நோக்கமாக இது இருக்கலாம்.
விக்னேஸ்வரன், உண்மை மற்றும் நீதி மீது நம்பிக்கையுடையவர். தமிழர்கள் கண்ணியம் மற்றும் சுய மரியாதையுடன் வாழ ஒரு வழி திறக்க கொள்கை ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் கருத்துகிறார்.
எனினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய உறுப்பினர்கள், பரந்த உலக தமிழர்களின் ஆதரவு நிலையில் பாரிய தாக்கத்தை இது ஏற்படுத்தும் என கருதுகின்றனர்.
இலங்கைத் தமிழர்களுக்கு உணர்வுபூர்வமான ஆதரவை வழங்கி வரும் தமிழக அரசியல்வாதிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் விக்னேஸ்வரனுக்கு எதிரான விமர்சனங்கள் இந்தளவு துரிதமான கதியில் தேவையற்ற ஒன்றாகவே உள்ளது.
தமிழர்கள் குறிப்பாக, தமிழ்நாட்டு மக்கள் தமிழர்களின் துன்பங்களை மற்றும் சிங்களம் அரசாங்கங்களின் அரச பயங்கரவாதம் என்பவற்றை மறக்கவில்லை.
ஈழத் தமிழர்களுக்காக, தமிழர்கள் உணர்வுகளை வெளிப்படுத்துவதும் கண்டனங்களை வெளியிடுவதும் அவர்களின் ஜனநாயக உரிமை, அதற்கு கண்டனங்கள் இருக்க முடியாது.
எனினும் இலங்கையில் இறந்து போன தமிழ் இனம் உயிர்த்தெழ பல பல விக்னேஸ்வரன்களின் தேவை அவசரமானது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தற்போதைய அரசியல் ரீதியான தட்டுப்பாட்டை தவிர்க்க விக்னேஸ்வரனின் நடைமுறை ரீதியான மற்றும் நெகிழ்வு போக்கான அணுகுமுறைக்கு முழு ஆதரவையும் வழங்க இதுவே நல்ல தருணம்.
அதேவேளை போர்க் குற்றவாளி என்று இனப்படுகொலைப் போரை வழிநடத்திய சரத் பொன்சேகாவின் பீல்ட் மார்ஷல் என்ற உயர்ந்த இராணுவ மரியாதை அளித்த மைத்திரியின் அண்மைய செயல், போர்க் குற்றவாளிகள் பாதுகாக்கும் அவரது உறுதியையும் உண்மையான நிறத்தைதையும் காட்டுகிறது.
சரத் பொன்சேகாவுக்கு பீல்ட் மார்ஷல் மரியாதை வழங்கும் நிகழ்வை பல வெளிநாட்டு ராஜதந்திரிகள் எதிர்த்ததுடன் அந்த நிகழ்வையும் புறக்கணித்தனர்.
அதேவேளை யாழ்ப்பாணம் உட்பட இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய பிரதமர் மோடி கூட தமிழர்கள் பிரச்சினைகளை தீர்க்க மைத்திரியை நம்ப வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் கோரிக்கை விடுத்ததுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு பல விடயங்களில் உறுதிமொழிகளை வழங்கினார்.
ஒரே நேரத்தில் அவரது வார்த்தைகளில் ஒன்றுமே இல்லாமல் இருப்பது போல் தோன்றும் எனினும் பிரச்சினையை இலங்கை அரசாங்கத்தின் ஊடாகவே தீர்த்து கொள்ள வேண்டும் என்பதே அதன் அர்த்தம்.
இலங்கையின் 60 வருடகால பிரச்சினையை தீர்ப்பதில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரசுகளின் தலையீடுகளை ஏற்றுக்கொள்ளபோவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் ஏற்கனவே அறிவித்து விட்டது.
இவ்வாறு தம்பு கனகசபை என்பவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல்வாதி என்பவன் நகைச்சுவைக்குரிய கதாபாத்திரமாக மாறியுள்ளான்: மஹிந்த அமரவீர
» முகநூல் ஊடாக முன்னாள் அரசியல்வாதி ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்: சட்ட நடவடிக்கை எடுக்க முடிவு
» விக்னேஸ்வரன் அடுத்த மாதம் அமெரிக்காவிற்கு விஜயம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum