Top posting users this month
No user |
Similar topics
விண்வெளியில் விரைவில் மிகப்பெரிய மின்நிலையம்: இஸ்ரோ விஞ்ஞானி உறுதி
Page 1 of 1

விண்வெளியில் இன்னும் இருபது ஆண்டுகளில் மின் நிலையம் நிறுவப்படும் என்று திருவனந்தபுரம் இஸ்ரோ விஞ்ஞானி ராஜீவன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரியில் மின்னியல், மின்னணு மற்றும் சிவில் பொறியியல் துறை சார்பில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கில் இஸ்ரோ விஞ்ஞானி ராஜீவன் பங்கேற்றுள்ளார்.
அப்போது பேசிய அவர், விண்வெளியில் 24 மணிநேரமும் கிடைக்கும் சூரியசக்தியை சாதகமாக்கி, அதிகளவு செயற்கைக் கோள்களை விண்ணுக்கு ஏவி, அவற்றை விண்ணிலேயே ஒருங்கிணைத்து மிகப் பெரிய விண்வெளி மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது.
பன்னாட்டு விஞ்ஞானிகளுடன் இணைந்து கடும் சவாலான இந்த சாதனையை இன்னும் 20 ஆண்டுகளில் இந்திய விஞ்ஞானிகள் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும் இந்த மின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை பூமிக்கு அனுப்பும் வயர்லெஸ் தொழில்நுட்பங்களான நுண்அலை மற்றும் லேசர் ஒளிக்கற்றைகள் குறித்து ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது.
இதன்மூலம் கைப்பேசி, மடிக்கணனி மற்றும் பிற மின்உபகரணங்களுக்கு, மின்பொறி, கம்பி இணைப்பு தேவைப்படாது.
விண்வெளி மின்நிலையம் செயல்படத் தொடங்கும்போது உலகில் மின்பற்றாக்குறை தீரும்.
விண்வெளி மின்நிலையத்தில் இருந்து மின்சாரத்தைப் பெற்று ரயில்கள், பேருந்துகள் போன்றவற்றையும் இயக்க முடியும்.
மேலும், இந்தியாவில் மின் தட்டுப்பாட்டைப் போக்க மாணவர்கள் தாம் கற்ற கல்வியைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» விரைவில் பொதுத் தேர்தல்: ஜனாதிபதி உறுதி- சிவில் உறுப்பினர்கள் தெரிவு ஒத்திவைப்பு
» கண்டாவளை மத்திய வகுப்புத் திட்ட காணிப் பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு: சிறீதரன் எம்.பி உறுதி
» மங்கள்யான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட செவ்வாய்க் கிரகத்தின் முப்பரிமாண படம்: இஸ்ரோ வெளியிட்டது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum