Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டவர்கள் அதுகுறித்து தெளிவுபடுத்துமாறு கோரிக்கை

Go down

இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டவர்கள் அதுகுறித்து தெளிவுபடுத்துமாறு கோரிக்கை Empty இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொண்டவர்கள் அதுகுறித்து தெளிவுபடுத்துமாறு கோரிக்கை

Post by oviya Sat Mar 28, 2015 12:11 pm

இராஜதந்திர கடவுச்சீட்டுகளை கொண்டுள்ளவர்கள் எந்த காரணத்திற்காக அவற்றைப் பெற்றுக்கொண்டனர் என்பதை தெளிவுபடுத்துமாறு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த அரசாங்கத்தின் போது பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இயங்கி வந்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், பல சிறப்புரிமைகளை வழங்கும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை பலருக்கு வழங்கியிருந்தது.

இது தொடர்பாக திணைக்களத்தின் அதிகாரிகள் மீளாய்வு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்தே ராஜதந்திர கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ளவர்கள் எப்படி, எந்த காரணங்களின் அடிப்படையில் அவற்றை பெற்றுக்கொண்டனர் என்பது குறித்து தமக்கு தெளிவுபடுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உதவி கட்டுப்பாட்டாளர் டி. சொய்சா தெரிவித்தார்.

முன்னாள் ஆட்சியாளர்களின் கீழ் இயங்கிய ஜனாதிபதி செயலகம் பல பேருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை வழங்குமாறு பரிந்துரைத்திருந்தது.

ஜனாதிபதி செயலகம் பரிந்துரைத்திருந்த காரணத்தினால், அதிகாரிகள் இராஜதந்திர கடவுச்சீட்டை விநியோகிக்கும் போது அந்த நபர்களின் தகுதி குறித்து கேள்வி எழுப்பவில்லை.

எனினும் இராஜதந்திர கடவுச்சீட்டுகளை விநியோகிக்கும் முன்னர் அரசாங்கம் கடைபிடிக்கும் நடைமுறைகளை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

கடந்த அரசாங்கத்தின் போது ஜனாதிபதி செயலகத்தின் பரிந்துரைகளுக்கு அமைய விநியோகிக்கப்பட்ட 39 இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன எனவும் டி.சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், அமைச்சர்கள் சிரேஷ்ட அரச அதிகாரிகள், உயர் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களின் நீதியரசர்கள், இராஜதந்திரிகள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வழங்கி வருகிறது.

ஆனால், வெளிநாடுகளில் உள்ள தூதரங்களில் பணிபுரிவோரின் மனைவி மற்றும் பிள்ளைகளுக்கும் இந்த இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆயிரத்து 809 பேருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டுக்களை திணைக்களம் வழங்கியுள்ளதுடன் அவர்களில் 50 பேரிடம் இது தொடர்பாக விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும் உதவி கட்டுப்பாட்டாளர் டி.சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய பிரமுகர்களை தவிர வெளிநாட்டு சேவையில் பணியாற்றும் அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சின் சகல நிறைவேற்று அதிகாரிகள், பௌத்த பீடங்களில் தலைமை பிக்குகள், இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத தலைவர்கள் மற்றும் தேயிலை விரிவாக்கல் பிரிவுக்கு பொறுப்பான ஆணையாளர் ஆகியோருக்கும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்கள் வழங்கப்படுகின்றன.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum