Top posting users this month
No user |
Similar topics
அதியுயர் பாதுகாப்பு வலயங்களை விடுவிப்பதில் உடன்பாடில்லை: பேராசிரியர் வசந்த பண்டார
Page 1 of 1

அதியுயர் பாதுகாப்பு வலயங்களை நீக்கி விட்டு அவ்விடத்தினை மக்களுக்கு பகிர்ந்தளிப்பது தொடர்பில் தமக்கு உடன்பாடு இல்லையென தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் ஊடகப்பேச்சாளரும் பேராசிரியருமான வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.
வடக்கு மாகாண தமிழ் மக்களுக்கு காணி வழங்குவதற்கு எதிரான கருத்துக்களில் இருந்து ஒரு போதும் முரண்பட்டுக் கொள்ளவில்லை. சொந்தக் காணிகளை இழந்த அந்த மக்களுக்கு காணி வழங்க வேண்டிய கடமை ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு உள்ளது என்ற கருத்திலும் நாம் உறுதியாகவேயுள்ளோம்.
வடக்கில் பல விவசாய நிலங்கள் உள்ளன. அது தொடர்பாக நாம் எந்த கருத்துக்களையும் தெரிவிக்கமாட்டோம். அவற்றை மக்களிடம் மீளக்கொடுப்பதனூடாக அம்மக்கள் பயனடைவார்கள். அவர்களது பொருளாதார தொழில் தேவைக்கான சூழலையும் உருவாக்கிக் கொள்வார்கள்.
இப்படி இருக்க அதியுயர் பாதுகாப்பு வலயங்களாக அடையாளப்படுத்தப்பட்ட இடங்களிலுள்ள காணிகளை மக்களுக்கு வழங்குவதால் நாட்டின் தேசிய பாதுகாப்பு சீர்குலைவது மட்டுமன்றி, மக்களுக்கு பொருத்தமானதொரு வாழ்க்கை சூழலை அமைத்துக்கொள்வது கடினமாயிருக்கும் என்றும் தெரிவித்துள்ள பேராசிரியர் பண்டார அமைச்சர், சுவாமிநாதன் சம்பூர் கடற்படை முகாமை நீக்கி பொது மக்களுக்கு அவ்விடங்களை கையளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதில் தமக்கு உடன்பாடில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இப்படியான சூழலில் இவர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.கடற்படை தளங்களோ அல்லது அதியுயர் பாதுகாப்பு வலயத்திலோ மக்களுக்கு சிறந்ததொரு வாழ்க்கை சூழலை அமைத்துக் கொடுக்க முடியாது. அத்துடன் அவர்கள் வாழ்வாதாரத்துக்கு தேவையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அந்த சூழல் பொருத்தமானதாக அமையாது.
ஆனாலும் இப்போது ரணில் அதியுயர் பாதுகாப்பு வலயங்களை பிரித்து வழங்கியுள்ள காரணத்தால் அது தொடர்பில் பேசுவதில் பயனில்லை.ஆனால் இதன் பின்விளைவுகளை ரணில் சந்திப்பார் என்பது உறுதி என்றார்.
கொழும்பு பொரளை தேசிய ஒருங்கிணைப்பு ஒன்றியத்தின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் மேற்போன்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை அங்கு கருத்துத் தெரிவித்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் உறுப்பினர் பெங்கமுவே நாலக்க தேரர்,
தேசிய அரசு என்ற பெயரில் ரணில் - மைத்திரி கூட்டாட்சியில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொண்டவர்கள் சுதந்திரக்கட்சியின் துரோகிகள் என தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத்தெரிவித்த அவர்,
தேசிய அரசாங்கத்தை உருவாக்கியிருக்கும் ரணிலின் அரசாங்கத்தில் இணைந்து கொண்ட இவர்கள் நாட்டின் நலன்கருதி ஆட்சிக்கு வந்தவர்கள் அல்ல. தமது சொந்த தேவைகளை நிறைவேற்றி கொள்ளவே அமைச்சுப்பதவிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். இவர்கள் தேசியத்தின் துரோகிகளாக கருதப்பட வேண்டியவர்களாவர்.
அத்துடன் ஐனாதிபதிக்கான அதிகார குறைப்பானது பிரிவினைவாதிகளை வலுவடையச் செய்யும். இதனை உணர்ந்து கொண்டுள்ள மக்களுக்காக மஹிந்த மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டியது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேறிய 2400 சிங்களவர்களுக்கான காணிகளை மீண்டும் வழங்க வேண்டும் எனவும் அங்கு அவர் தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு வழங்கும் சிவில் பாதுகாப்பு படையினர் அதில் இருந்து நீக்கம்!
» மகிந்தவுக்கு வெட்கமில்லையா?: வசந்த சேனாநாயக்க கேள்வி
» வசந்த வாசல் கவிச்சரம் 2007
» மகிந்தவுக்கு வெட்கமில்லையா?: வசந்த சேனாநாயக்க கேள்வி
» வசந்த வாசல் கவிச்சரம் 2007
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum