Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி

Join the forum, it's quick and easy

Tamil Ujiladevi Forum
Tamil Ujiladevi Forum

Tamil Ujiladevi Forum உங்களை அன்புடன் வரவேற்கின்றது!!!

இங்கு உங்களுக்கு எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் உண்டு ஆகவே உங்களின் மேலான ஆக்கங்களை பதியுமாறும் அன்புடன் வேண்டுகிறோம் .

தங்களின் படைப்புகள் மற்றும் கருத்துக்களை வெளியிட பதிவு செய்யுங்கள்

நன்றி
Tamil Ujiladevi Forum
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

Top posting users this month
No user


கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு: தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்

Go down

கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு: தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள் Empty கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு: தமிழக பட்ஜெட்டின் சிறப்பம்சங்கள்

Post by oviya Wed Mar 25, 2015 12:56 pm

தமிழகத்தின் முதல்வரான ஓ.பன்னீர் செல்வம் இன்று தனது முதல் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.

இதில், முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்லவம் 2015-2016 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேரவையில் வெகுவாக பாராட்டிப் பேசினார்.

பட்ஜெட் சிறப்பம்சங்கள்

* 40.3 கோடி மனுக்களுக்கு அம்மா திட்டம் மூலம் நிவாரணம்.

* பொதுச்சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைய ஏற்பாடு.

* அம்மா திட்டம் மூலம் 43.9 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு தீர்வு தரப்பட்டுள்ளது.

* தமிழ்த்துறையின் வளர்ச்சிக்கு ரூ 46.77 கோடி நிதி ஒதுக்கீடு.

* 17,18,19ம் நூற்றாண்டைச் சேர்ந்த 120 அரிய புத்தகங்கள் இலக்க முறையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

* சாலை விபத்துகளை தடுக்க உயர் முன்னுரிமை.

* சாலை விபத்துகளை தவிர்க்க கூடுதலாக ரூ.16 கோடி ஒதுக்கீடு.

* சிறைத்துறைக்கு ரூ 227.03 கோடி நிதி ஒதுக்கீடு.

* சிறைச்சாலை கைதிகளுக்கு தொழிற்பயிற்சி அளிக்க ரூ10.78 கோடி ஒதுக்கீடு.

* தீயணைப்புத் துறையை நவீனப்படுத்த ரூ10.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* காவல்துறைக்கு ரூ5,568 கோடி நிதி ஒதுக்கீடு.

* நீதித்துறைக்கு ரூ 809.70 கோடி ஒதுக்கீடு.

* 169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல்.

* கிராமப்புற வறுமை ஒழிப்பின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணும் பணி விரைவில் முடியும்.

* தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டம் ரூ 250 கோடி.

* தமிழக வாழ்வாதர திட்டத்திற்கு ரூ 107 கோடி ஒதுக்கீடு.

* பயனாளிகளுக்கு மானியங்களை நேரடியாக அளிக்கும் திட்டம் சிறப்பாக செயல்படுகிறது.

* சமூக நலத்திட்ட உதவித்தொகை, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.

* விவசாயிகளுக்கு பயிர்க் கடனாக ரூ.5,500 கோடி வழங்க இலக்கு.

* ரூ.4,955 கோடியாக இருந்த பயிர் கடன்கள் ரூ.5.500 கோடியாக அதிகரிப்பு.

* சாதாரண நெல்லுக்கு குவிண்டால் ரூ.50, சன்னரக நெல்லுக்கு குவிண்டால் ரூ.70 மானியம்.

* விவசாயிகளுக்கு சரியான நேரத்தில் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.

* நெல்லுக்கான மாநில அரசின் உற்பத்தி ஊக்கத் தொகை ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.

* விவசாயிகளுக்கு கடன்கள் வட்டின்றி வழங்கப்படும்.

* தோட்டக்கலை பயிர்ப் பரப்பு 25.9 லட்சம் ஏக்கராக அதிகரிப்பு.

* விலையில்லா ஆடுகள், பசுக்கள் வழங்க ரூ.241 கோடி நிதி ஒதுக்கீடு.

* 12,000 கறவை பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்க திட்டம்.

* 25 கால்நடை மருந்தகங்கள் புதிதாக தரம் உயர்த்தப்படும்.

* கைத்தறை மற்றும் நெசவுத்துறைக்கு 499.16 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* கைத்தறி விற்பனையை ஊக்குவிக்க தள்ளுபடி மானியத் திட்டத்திற்கு ரூ.78.45 கோடி.

* தமிழகத்தில் உள்ள 113 அணைகளை புனரமைக்க ரூ.450.13 கோடி ஒதுக்கீடு.

* நீர்ப்பாசத் துறைக்கு ரூ.3,727.37 கோடி நிதி ஒதுக்கீடு.

* நதிநீர் இணைப்புத் திட்டங்களுக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* மின்சாரத் துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு.

* 2015-16ம் ஆண்டில் மின்சார மானியத்திற்கான ஒதுக்கீடு ரூ.7,136 கோடியாக உயர்வு.

* நெடுஞ்சாலைத் துறைக்கு 8,828 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த சாலை கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ.2,800 கோடி ஒதுக்கீடு.

* 427 கி.மீ. சாலைகள் ரூ.2,414 கோடியில் இரு வழித்தட சாலைகளாக தரம் உயர்த்தப்படும்.

* கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5,422.08 கோடி நிதி.

* 6 ஆயிரம் கி.மீ. ஊரக உள்ளாட்சி அமைப்புச் சாலைகளை மேம்படுத்த ரூ.1,400 கோடி நிதி.

* வரும் நிதியாண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகள்.

* திறன் மேம்பாட்டு பயிற்சிக்கான நிதி ரூ.100 கோடியில் இருந்து ரூ.150 கோடியாக உயர்வு.

* சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு ரூ.365.91 கோடி நிதி ஒதுக்கீடு.

* தகவல் தொழில்நுட்பவியல் துறைக்கு ரூ.82.94 கோடி நிதி ஒதுக்கீடு.

* சூரிய ஒளி பசுமை வீடுகள் திட்டத்திற்கு ரூ.1,260 கோடி ஒதுக்கீடு.

* மாணவர்களுக்கான இலவச பேருந்து பயண மானியத்திற்கு ரூ.480 கோடி.

* டீசல் மானியம் ரூ.500 கோடி ஒதுக்கீடு.

* மக்கள் நல்வாழ்வுக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8,245 கோடியாக உயர்வு.

* தேசிய சுகாதார இயக்க திட்டத்திற்கு ரூ.1,342.67 கோடி.

* முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ரூ.781 கோடி நிதி ஒதுக்கீடு.

* கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித் திட்டத்திற்கு ரூ.668.32 கோடி ஒதுக்கீடு.

* குழந்தைகள் நல பரிசு பெட்டக திட்டத்திற்கு ரூ.50 கோடி.

* மகளிர் சுகாதர திட்டத்திற்கு ரூ.60.28 கோடி நிதி ஒதுக்கீடு.

* மெட்ரோ ரயில் பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்ற ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு.

* 107 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படுகிறது.

* அன்னதான திட்டம் மேலும் 206 கோயில்களுக்கு விரிவு.

* 250 பழம்பெரும் கோயில்களை புனரமைக்க ரூ.90 கோடி நிதி ஒதுக்கீடு.

* பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்திற்கு ரூ.140.12 கோடி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.1,575.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* பள்ளிக் குழந்தைகளுக்கு பல்வகை கலவை சாதம் வழங்க ரூ.1,470.53 கோடி.

* சுற்றுலாத் துறைக்கு ரூ.183.14 கோடி.

* அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு ரூ.110.57 கோடி நிதி உதவி.

* பிற பல்கலைக் கழகங்களுக்கு ரூ.868.40 கோடி நிதி உதவி.

* பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு.

* உயர்கல்வித் துறைக்கு ரூ.3,696.82 கோடி நிதி.

* விலையில்லா பாடப்புத்தகங்கள், நோட்டுகள் உள்ளிட்டவை வழங்க நிதி ரூ.1,037.85 கோடி.

* 6.62 லட்சம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க ரூ.219.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* ரூ.450.96 கோடி நிதியில் பள்ளிக் கட்டமைப்பு வலுப்படுத்த திட்டம்.

* தொழிலாளர் நலத்துறைக்கு மொத்தம் ரூ.139.26 கோடி.

* தொழிலாளர் நல வாரியங்களுக்கான நிதி உதவிக்காக ரூ.70 கோடி.

* மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக ரூ.364.62 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களுக்கு ரூ.18,668 கோடி.

* ஓய்வூதிய காப்பீட்டு திட்டத்தில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு மருத்துவ சிகிச்சை.

* பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கு ரூ.250.49 கோடி.

* விடுதி பராமரிப்பு மற்றும் உணவு செலவினங்களுக்கு ரூ.82.69 கோடி.

* சிறுபான்மையினர் நலனுக்காக ரூ.115.80 கோடி நிதி ஒதுக்கீடு.

* கள்ளர் சீரமைப்பு பள்ளிகளுக்காக ரூ.101.50 கோடி.

* இலங்கைத் தமிழர் நலனுக்காக ரூ.108.46 கோடி நிதி ஒதுக்கீடு.

* வணிகவரி வசூல் ரூ.72,068 கோடி இலக்கு.

* எல்.இ.டி. விளக்குகளுக்கான மதிப்புக்கூட்டு வரி 5 சதவீதமாக குறைப்பு.

* செல்போன் மீதான மதிப்புக் கூட்டு வரி 14.5% இருந்து 5% ஆக குறைப்பு.

* 10 குதிரைத் திறன் மோட்டார் பம்பு, பாகங்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைப்பு.

* மீன்பிடிப்புக்கு பயன்படும் துணைப்பொருட்கள் மீதான மதிப்புக் கூட்டு வரி முற்றிலும் நீக்கம்.

* உயிரி எரிபொருள் மூலம் (கரும்பு சக்கையை தவிர) உற்பத்தியாகும் மின்சாரம் மீதான வரி விலக்கப்படும்.

* பசுமை எரிசக்தி உற்பத்தியாளர்களை ஊக்குவிக்க வரி விலகு.

இந்த வரி குறைப்பு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.650 கோடி இழப்பு ஏற்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.

திமுக வெளிநடப்பு

சட்டப்பேரவை கூடியதும், பட்ஜெட் உரையை ஒத்திவைத்துவிட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் இதற்கு பேரவை தலைவர் அனுமதி அளிக்காததால் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

தேமுதிக தர்ணா

மேலும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவை வளாகத்தில் கருப்பு சட்டை அணிந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
oviya
oviya

Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum