Top posting users this month
No user |
Similar topics
19வது அரசியலமைப்பை ஆதரிக்கும் ஜே.வி.பி
Page 1 of 1
19வது அரசியலமைப்பை ஆதரிக்கும் ஜே.வி.பி
19வது அரசியலமைப்பிற்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்தில் வாக்களிக்க மக்கள் விடுதலை முன்னணி தீர்மானித்துள்ளது.
பத்தரமுல்லையிலுள்ள கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் பொது செயலாளர் ரில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் சமர்பிக்கப்பட்ட 19வது திருத்த சட்டமூலத்தில் பெருமளவிலான அதிகாரங்கள் குறைக்கப்படாத போதிலும், குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டதே தற்போதைய அரசாங்கம் பெற்று கொண்ட மாபெரும் வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த அரசியலமைப்பு திருத்த சட்டம், தேர்தல் முறை மாற்றத்துடன் சபையில் சமர்பிக்கப்படாத பட்சத்தில் அதற்கெதிராக வாக்களிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் தெரிவித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
தேர்தல் காலத்தில் நிறைவேற்று அதிகார முறைமையை இல்லாதொழிப்பதற்காக முதலாவது போராட்டத்தை ஆரம்பிக்கும் நோக்கில் ஜாதிக ஹெல உறுமய 19வது அரசியலமைப்பிற்கு எதிராக வாக்களிப்பதாக தெரிவித்துள்ளதன் அர்த்தம் என்ன என ரில்வின் சில்வா கேள்வியெழுப்பியுள்ளார்.
அரசாங்கம் தற்போது தான் ஆட்சிக்கு வந்ததன் இலக்கை நோக்கி செல்லாமல் கடந்த அரசாங்கத்தின் வழியில் சென்று கொண்டிருக்கின்றது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» அரசியலமைப்பை மாற்ற திருத்தங்களை கோரும் பிரதமர் ரணில்
» தகவல் அறியும் சட்டமூலத்தை ஆதரிக்கும் சுதந்திர கட்சி?
» விடுதலைப் புலிகளை ஆதரிக்கும் ஐக்கிய தேசிய கட்சி! பிரதி சபாநாயகர் குற்றச்சாட்டு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum