Top posting users this month
No user |
Similar topics
காணிப் பிரச்சினைகளை விசாரணை செய்ய விசேட செயலணி! பிரதமர் ரணில் இணக்கம்
Page 1 of 1

கிழக்கு மாகாணத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் காணி பிரச்சினைகளை விசாரணை செய்து, அவற்றுக்கு உரிய நிவாரணங்களை வழங்க அதிகாரமிக்க விசேட செயலணி ஒன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் செயலணியினை அமைக்கும் பணியைதான் செய்யப் போவதாகவும் அது பற்றி கலந்தாலோசிப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸ்ஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலியை தொடர்பு கொள்வதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.
அம்பாறை மாவட்டத்தில் நீண்ட காலமாக தீர்க்கப்படாது தொடர்ந்து வந்த 21 காணிகள் தொடர்பான ஆவணங்களை முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் பிரதமரிடம் பாராளுமன்றத்தில் வைத்து ஏற்கனவே ஒப்படைத்திருந்தார்.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் இது போன்று தீர்க்கப்படாதுள்ள பிரச்சினைகள் சம்பந்தமான ஆவணங்கள் தற்போது தயாராகி விட்டதனால் அடுத்தவாரம் விசேட செயலணி அமைக்கும் போது அவை சமர்ப்பிக்கப்படவுள்ளன.
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்னர் தயாரிக்கப்பட்டிருந்த ஆவணங்களில் உள்ள விபரங்களை தற்போதுள்ள நிலவரங்களுக்கு ஏற்றவாறு மீளாய்வு செய்து புதிய தகவல்களையும் உள்ளடக்கியதான ஆவணங்களே தற்போது பிரதமரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
இவ் ஆவணங்களைப் பரிசீலித்து நியாயமான தீர்வுகளை வழங்குவதற்காக சகல அதிகாரம் பொருந்திய ஒரு விசேட செயலணியை அமைக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதமரைக் கேட்டிருந்தது. அரசியல் மற்றும் இனவாத நோக்குடன் கிழக்கு மாகாணத்தில் கடமை புரிந்த உயர் அதிகாரிகள் யுத்த பின்னணியை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு இக் காணிப் பிரச்சினைகளுக்கு நியாயமான தீர்வுகளை வழங்காது இழுத்தடித்து வந்துள்ளனர்.
இவ்வாறான அவலநிலையைக் காரணமாகக் காட்டியே விசேட செயலணியை அமைத்துத் தருமாறும் 100 நாள் வேலைத்திட்டத்திற்குள் இதனை அமுல்படுத்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» துமிந்தவிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை விசாரணை செய்ய மூன்று விசேட பொலிஸ் குழுக்கள்
» நேற்றைய தினம் இலங்கை வந்தடைந்த பூட்டான் பிரதமர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளார். அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரையும் பூட்டான் பிரதமர் இன்று சந்தித்து பேச்சுவ
» மகிந்தவை பிரதமர் வேட்பாளராக நிறுத்தும் இணக்கம் கட்சிக்குள் இல்லை: சுசில் பிரேமஜயந்த

Permissions in this forum:
You cannot reply to topics in this forum