Top posting users this month
No user |
Similar topics
ஏனைய படைத்தளபதிக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டியதில்லை: அனோமா பொன்சேகா
Page 1 of 1

ஏனைய படைத் தளபதிகளுக்கு பீல்ட் மார்ஷல் பதவி வழங்கப்பட வேண்டியதில்லை என முன்னாள் இராணுவத் தளபதியின் மனைவி அனேமா பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மரணத்திலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய எனது கணவர் வடக்கு போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்.
போர் இடம்பெற்ற காலத்தில் கடமையாற்றிய ஏனைய படைத்தளபதிகள் பீல்ட் மார்ஷல் பதவி கேட்பது பொருத்தமற்றது.
எனது கணவர் எதிர்நோக்கிய சவால்களை ஏனைய படைத் தளபதிகள் எதிர்நோக்கவில்லை.
பீல்ட் மார்ஷல் பதவியை பெற்றுக் கொண்டதன் பின்னர் அரசியலில் ஈடுபடுவதற்கு எவ்வித தடையும் கிடையாது. சில நாடுகளில் பீல்ட் மார்ஷல்கள் ஜனாதிபதிகளாக கடமையாற்றியுள்ளனர்.
நாட்டு மக்களுக்கு சேவையாற்ற எந்தப் பதவியும் தடையாக அமையாது என அனோமா பொன்சேகா கொழும்பு பத்திரிகையொன்றுக்கு செவ்வியளித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தலைமையில் கொழும்பில் இன்று நடைபெறும் நிகழ்வில் ஜெனரல் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷலாக பதவி உயர்த்தப்பட உள்ளார்.
பொன்சேகாவை பீல்ட் மார்ஷல் பதவி உயர்த்தும் நிகழ்வு இன்று!
ஜனநாயக கட்சி தலைவரும் பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதம அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகாவை, பீல்ட் மார்ஷல் பதவிநிலைக்கு உயர்த்தும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் விமான தளத்தில் இந்த நிகழ்வு நடைபெறவுள்ளது. இந்நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட பல அமைச்சர்,உறுப்பினர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.
உயரிய பதவியான பீல்ட் மார்ஷல் பதவி உயர்வு நிகழ்வை முன்னிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு விசேட அடையாள சின்னமொன்றையும் கையளிக்கவுள்ளார்.
இந்த நிகழ்வினை முன்னிட்டு இன்று பிற்பகல் 3.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை காலி முகத்திடலில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
1970ஆம் ஆண்டில் கெடட் உத்தியோகத்தராக இராணுவத்தில் இணைந்துகொண்ட சரத் பொன்சேகா, 2009 ஆம் ஆண்டில் பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியாக சேவையாற்றி பின் ஓய்வுபெற்றார்.
சுமார் 30 வருடகால யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் இராணுவத் தளபதியாக சரத் பொன்சேகா கடமையாற்றியிருந்தார்.
ஒருபோதும் ஓய்வுபெறாத பதவிநிலையான பீல்ட் மார்ஷல் பதவியானது, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவருக்கு சமமானதாகும். நாடொன்றின் முப்படையில் உயரிய பதவியாக பீல்ட் மார்ஷல் பதவி கருதப்படுகின்றது குறிப்பிடதக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» பீல்ட் மார்ஷலாக பதவி உயர்வு பெற்றார் பொன்சேகா! 22ம் திகதி பதவியேற்பு
» பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு வழங்கப்பட்டுள்ள கார்
» ரணவிரு சேவா அதிகார சபையின் தலைவி: அனோமா பொன்சேகா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum