Top posting users this month
No user |
Similar topics
நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம்!
Page 1 of 1
நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம்!
* இன்பத்தை தேடி எங்கும் அலைய வேண்டாம். அன்பு உண்டானால் இன்பம் உண்டு.
* அன்பு கொள்கையில் இருந்தால் மட்டும் போதாது. செய்கையில் வெளிப்பட வேண்டும். உன்னிடம் கோடி ரூபாய் இருந்தாலும், தேச நன்மைக்காக கொடுத்துவிட்டு ஏழையாகி விடத் துணிவாயானால், நீ அன்புடையவனாகக் கருதப்படுவாய்.
* நேரத்தை வீணாகக் கழிப்பது கூடாது. அதை பயனுள்ள வழியில் ஊக்கத்துடனும், மகிழ்ச்சியுடனும் செலவழிக்க வேண்டும்.
* கண்ணைத் திறந்து கொண்டு படுகுழியில் விழுவதைப் போல, மனித சமூகம் நன்மையை நன்றாக உணர்ந்தும் கூட, தீமையில் சிக்கித் தத்தளிக்கிறது.
* பொய், நயவஞ்சனை, நடிப்பு, ஏமாற்றுதல் போன்ற கெட்ட வழிகளில் பொருள் ஈட்டக்கூடாது.
* மலர்ந்த முகம், இனியசொல், தெளிந்த மனதுடன் இருக்க முயலுங்கள். இடைவிடாமல் உழைத்து பெருமையுடன் வாழுங்கள். இவற்றையெல்லாம் செய்து, நன்மை கிடைக்கவில்லையென்றாலும், விதிவசம் என்று மகிழ்ச்சியோடு இருங்கள்.
* கடந்த காலத்தில் நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேல் நடக்க வேண்டிய விஷயத்தில் கருத்து செலுத்துங்கள்.
* தன்னிடத்தில் உலகத்தையும், உலகத்திடம் தன்னையும் எவன் காண்கிறானோ அவனே கண்ணுடையவன்.
* கோயிலுக்குப் போனாலும் சரி, போகாவிட்டாலும் சரி.. பிறரை ஏமாற்றுவதை நிறுத்தி விட்டாலே தெய்வத்தின் அருளைப் பெற்று விட முடியும்.
* துளியும் மற்றவர்களை ஏமாற்றுவதில்லை என்ற நிலையை உடையவன் எவனோ, அவனே கடவுள்.
* நன்றி மறவாத நல்ல குணம் மனிதனுக்கு வேண்டும். அதுவே அவனுக்கு பெரிய மூலதனமாக இருக்கும்.
* எதுவரை மனிதன் அநியாயம் செய்கிறானோ, அதுவரை கலியுகம் இருக்கும். அநியாயத்தை விட்டு விட்டால் கிருதயுகம்(சத்தியயுகம்) அந்த கணமே வந்து விடும்.
* அமைதி, தைரியம், சக்தி, ஆற்றல், அருள், பக்தி சிரத்தை, பலம் போன்ற நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்.
* மனிதனுக்குப் பகைவர்கள் வெளியில் இல்லை. அவனது மனதிற்குள் இருக்கும் பயம், கோபம், சந்தேகம், பொறாமை போன்றவையே எதிரிகள்.
* நம்பிக்கை இருந்தால் ஆகாய கங்கை கூட பூமிக்கு வந்துவிடும். எவ்வளவு பெரிய ஆபத்து வாழ்வில் குறுக்கிட்டாலும், நம்பிக்கை இருந்தால் வெற்றி கிடைத்து விடும்.
* நம்பிக்கை என்பது விடாமுயற்சி தான். முயற்சி உள்ளவனை துன்பங்கள் பயமுறுத்தாது.
* நல்ல விஷயத்தை எடுத்துச் சொல்வது எளிது. ஆனால், சொன்னபடி நடந்து காட்டுவது அரிது.
சொல்கிறார் பாரதியார்
abirami- Posts : 4514
மன்றத்தில் இணைத்த தேதி : 26/12/2014
Similar topics
» நன்றி மறவாத நல்ல மனம் வேண்டும் என்றும் அதுவே நம் மூலதனம்!
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி
» மனம் அற்ற மனம்: மன அமைதிக்கு எளிய வழிகள்
» இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, 13வது சட்டத் திருத்தத்தை நடைமுறைப்படுத்துவோம் என்றும், அதனடிப்படையில் தமிழ்ச் சிறுபான்மை மக்களுக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் தமிழ் மக்களுக்கு ஒரு வாக்குறுதி
» மனம் அற்ற மனம்: மன அமைதிக்கு எளிய வழிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum