Top posting users this month
No user |
Similar topics
நடிகை நயன்தாரா பெயரில் அரங்கேறிய மோசடி
Page 1 of 1
நடிகை நயன்தாரா பெயரில் அரங்கேறிய மோசடி
நடிகை நயன்தாராவின் பெயரில் நடந்த நூதன மோசடியில் ஐந்து பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை, சுந்தராபுரத்தை அடுத்த நாகராஜபுரத்தைச் சேர்ந்தவர், சிவா (எ) சிவானந்தம். இவர் கோழி கறிக்கடை நடத்தி வருகிறார்.
இவரும், கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்த, பாபு (எ) அப்துல் அகது லியாகு (34) என்பவரும் சேர்ந்து, சினிமா படம் எடுக்க முடிவு செய்தனர்.
இதற்காக, குனியமுத்தூரில், அலுவலகம் ஒன்றை திறந்தனர். சிவானந்தம், தன் நண்பர்களான பாலமுருகன், காந்திராஜன் மற்றும் மோகனசுந்தரம் ஆகியோரை, பாபுவுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
இதன்பின் அனைவரும் சென்னை சென்று, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜாவை சந்தித்தனர்.
படத்தில், நடிகர் ஆர்யா, நடிகை நயன்தாரா ஆகியோரை நடிக்க வைக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில், படம் எடுப்பதற்காக, தான் கொடுத்த தொகையை திரும்ப பெற்றுக்கொண்டு, சிவானந்தம் விலக முடிவு செய்தார்.
இதற்காக, நேற்று முன்தினம் இரவு சிவானந்தம், மூன்று பேருடன் சென்று பாபுவிடம், தான் கொடுத்த, 2 லட்சம் ரூபாயை திருப்பி தருமாறு கேட்டுள்ளார்.
இதனால், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன், அங்கிருந்த மோகனசுந்தரம் சிவானந்தத்தை தாக்கியுள்ளார்.
மேலும் சிவானந்தத்துடன் வந்த பாண்டியன், மோகனசுந்தரத்தை தாக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
இரு தரப்பினரும் கொடுத்த புகாரின்படி போத்தனூர் பொலிசார் வழக்கு பதிவு செய்து, சிவானந்தம், பாபு, பாலமுருகன், காந்திராஜன், மோகனசுந்தரம் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
தற்போது தப்பியோடிய பாண்டியன் உள்ளிட்ட மூவரை தீவிரமாய் தேடி வருகின்றனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» நடிகை நயன்தாரா வீட்டுக்கு ஜப்தி நோட்டீஸ்: அதிகாரிகள் அதிரடி
» ஹஜ் யாத்ரீகர்களிடம் ரூ.2.68 கோடி மோசடி செய்த நடிகை அதிரடி கைது
» ரமணா பட பாணியில் அரங்கேறிய சதி! இறந்த வாலிபருக்கு சிகிச்சையளித்த மருத்துவமனை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum