Top posting users this month
No user |
Similar topics
வட,கிழக்கில் காணாமல் போனோரின் உறவுகள் எதிர்வரும் 23 ஆம் திகதி முன்னெடுக்கும் அமைதி வழிபோராட்டம்!
Page 1 of 1

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடத்தப்பட்டு, காணாமல் போகச்செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்வரும் 23ஆம் திகதி வடக்கு,கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களும் உள்ளடங்களாக மிகப்பெரியளவிலான அமைதி வழி கவனஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்படவுள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணிக்கு வடக்கு,கிழக்கில் உள்ள சகல மாவட்டங்களிலும் சம நேரத்தில் மிகப்பெரிய அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டத்தையும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட செயலகங்களை நோக்கிய ஊர்வலத்தையும் பின்னர் மகஜர் கையளிப்புக்களையும் செய்யவுள்ளதாக வடக்கு கிழக்கு காணாமல் போகச்செய்யப்பட்டவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவுகளின் அமைப்பு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்து ஒழுங்குகளும் செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.கிளிநொச்சி மாவட்டத்திலும் நடைபெறும் இந்த அமைதிவழி போராட்டம் கிளிநொச்சி ஏ9 வீதியில் உள்ள உதிரவேங்கை வைரவர் கோவில் முன்பாக திங்கட்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும்.
இவ்வார்ப்பாட்டத்திற்காக பேருந்து ஒழுங்குகள் தரப்பட்டுள்ளன. கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலத்திற்கு அருகில் இருந்து புறப்படும் பேருந்து வட்டக்கச்சி சந்தை,வட்டக்கச்சி மத்திய கல்லூரி,கோவிந்தன் கடைச்சந்தி, காக்காகடை சந்தி என்பற்றின் ஊடாக வந்தடையும்,
கிளிநொச்சி தருமபுரம் மத்திய கல்லூரிக்கு அருகில் இருந்து புறப்படும் பேருந்து புளியம்பொக்கணை சந்தி.கண்டாவளை சந்தி, முரசுமோட்டை முருகானந்தா கல்லூரி, பரந்தன் ஊடாக வந்தடையும், கிளிநொச்சி வேரவில் மகா வித்தியாலயத்திற்கு அருகில் புறப்படும் பேருந்து நாச்சுக்குடா சந்தி,பூநகரி வாடியடி பரந்தன் ஊடாக வந்தடையும்,
கிளிநொச்சி முழங்காவில் மகா வித்தியாலத்திற்கு அருகில் புறப்படும் பேருந்து ஜெயபுரம் வன்னேரி ஆனைவிழுந்தான் அம்பலபெருமாள் சந்தி,அக்கராயன் வைத்தியசாலை சந்தி. திருமுறிகண்டி பொன்னகர் சந்தி இரணைமடு சந்தி ஊடாக வந்தடையும் ,
கிளிநொச்சி உருத்திரபுரம் 10ம் வாய்க்கால் கூழாவடி சந்தியில் இருந்து புறப்படும் பேருந்து எட்டாம் வாய்க்கால் இந்துக்கல்லூரி கரடிப்போக்கு சந்தியூடாக வந்தடையும், கிளிநொச்சி பளையில் இருந்து புறப்படும் பேருந்து பளை பஸ் நிலையத்தில் இருந்து புதுக்காட்டு சந்தி இயக்கச்சி சந்தி,உமையாள்புரம் பரந்தன் ஊடாக வந்தடையும்.
மேற்குறிப்பிட்ட சகல இடங்களில் இருந்தும் எதிர்வரும் திங்கட்கிழமை காலை 7.30 மணிக்கு பேரூந்துகள் புறப்படும் என்பதை ஏற்பாட்டாளர்கள் காணாமல் போகச்செய்யப்பட்ட உறவுகளின் சொந்தங்கள், சிறையில் உள்ள அரசியல் கைதிகளின் சொந்தங்கள்,மனித உரிமை ஆர்வலர்கள்,ஊடவியலாளர்கள், புத்திஜீவிகள் கிராமிய மாவட்ட மட்டங்களின் பொது அமைப்புக்கள,மக்கள் பிரதிநிதிகள்,
உள்ளிட்ட உயிர்கள் மேலும் எங்கள் உறவுகள் மேலும் கருணையுள்ள உள்ளங்கள் ஆகியோருக்கு ஏற்பாட்டாளர்கள் உரிமையுடன் தெரிவித்துக்கொள்வதுடன், சகல மாவட்டங்களிலும் ஒரு நேரத்தில் நடக்கும் இந்த அமைதி வழி கவனயீர்ப்பு போராட்டத்தில் அனைத்து மக்களும் திரண்டு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் காந்தி சதுக்கத்தில் எதிர்வரும் 23ஆம் திகதி காலை 10 மணி ஆரம்பமாகி ஊர்வலமும் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» மட்டக்களப்பில் காணாமல் போனோரின் உறவுகள் உண்ணாவிரதம்: 500 பெண்கள் பங்கேற்பு
» அரசியல் கைதிகள் என்ற சொற்பிரயோகமே இருக்கக் கூடாது: வவுனியாவில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
» கிளிநொச்சியில் நாளை காணாமல் போனவர்களின் உறவுகள் அடையாள உண்ணாவிரதம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum