Top posting users this month
No user |
கிளிநொச்சியில் நாளை காணாமல் போனவர்களின் உறவுகள் அடையாள உண்ணாவிரதம்
Page 1 of 1

கடந்த காலத்தில் வடக்கு கிழக்கிலும், 2009 இறுதிப் போரின்போதும் காணாமல் போகச்செய்யப்பட்டும், கடத்தப்பட்டும், கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டும் உள்ள உறவுகளின் சொந்தங்கள் திரண்டு நாளை அடையாள உண்ணாவிரதத்தை நடாத்த உள்ளனர்.
கிளிநொச்சி கந்தசாமி கோவில் வளாகத்தில் காலை 9 மணி தொடக்கம் இந்த உண்ணாவிரதம் நடைபெறவுள்ளது.
இதில் மனித உரிமை அமைப்புக்கள், மதகுருமார்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் என பலரும் பெருமளவில் திரண்டு தங்களுக்கு ஆதரவு வழங்குமாறு காணாமல் போனவர்கள் மற்றும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் உறவுகள் அழைப்பு விடுத்துள்ளனர்.
காணாமல்போன உறவுகளை மீட்டுத் தருமாறு யாழில் ஆர்ப்பாட்டம்! [ புதன்கிழமை, 04 மார்ச் 2015]
யாழ்.மாவட்டத்தில் 1996ம் ஆண்டு தொடக்கம் இறுதியுத்தம் வரையில் காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தியுள்ளதுடன், அரசாங்க அதிபருக்கு மகஜரும் கையளித்திருக்கின்றனர்.
யாழ்.குடாநாட்டில் வெள்ளை வாகனத்தில் படையினரின் சீருடையுடனும், அடையாளம் தெரியாமலும் வந்த ஆயுததாரிகளினால் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு பின்னர் காணாமல்போயினர்.
இவர்களுடைய உறவினர்களே இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது மக்கள் வீதியில் உட்கார்ந்து தங்கள் பிள்ளைகளின் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைத் தாங்கியவாறு கண்ணீர்விட்டழுது, தங்கள் பிள்ளைகள் எங்கே இருக்கின்றார்கள் என அறிந்து தகவல் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
இதன் பின்னர் யாழ்.மாவட்டச் செயலாளரை சந்தித்து மகஜர் ஒன்றை கையளித்த மக்கள், பின்னர் வடமாகாண ஆளுநர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோரையும் சந்தித்துப் பேசியதுடன் அவர்களுக்கும் மகஜர்களை கையளித்தனர்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum