Top posting users this month
No user |
Similar topics
முல்லைத்தீவு பிரதேச சபை தேர்தலுக்கான இடைக்கால தடையை நீக்க கோரி உச்ச நீதிமன்றில் வாதம்
Page 1 of 1

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய இரண்டு பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை நீக்குமாறு உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேற்படி பிரதேச சபைகளுக்கான தேர்தலை நிறுத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த வாதம் அரசியல் கட்சிகளின் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பர் ஆஜராகி குறித்த இரு சபைகளுக்குமான தேர்தலை நடத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடை நீக்கப்பட வேண்டும் எனவும் முற்றாக இவ்வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் வாதாடினார்.
அதேவேளை சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி இன்று மன்றுக்கு ஆஜராக முடியவில்லை என அறிவித்து அவகாசம் கோரப்பட்டதற்கிணங்க இந்த வழக்கு விசாரணை ஏப்ரல் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.
குறித்த இடைக்காலத் தடையை நீக்கி, வழக்கை தள்ளுபடி செய்வதா அல்லது வழக்கு விசாரணைகளை தொடர்வதா என்பது குறித்து அன்றைய தினம் தீர்மானிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றின் சார்பிலும் சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.
புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று ஆகிய இந்த பிரதேச சபைகளுக்கான தேர்தல்கள் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி நடைபெறவிருந்த நிலையில் அதற்கு முதல் நாளன்று அத்தேர்தலுக்கு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» இளைஞர் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகள் பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைப்பு
» இலங்கை மீதான மீன் ஏற்றுமதி தடையை விரைவில் நீக்க ஐரோப்பிய ஒன்றியம் உறுதி
» வித்தியா கொலை வழக்கு: 9வது சந்தேகநபர் எவ்வாறு கொழும்புக்கு தப்பிச் சென்றார்? சட்டத்தரணி கே.வி நீதிமன்றில் கடும் வாதம்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum