Top posting users this month
No user |
Similar topics
மக்களின் விருப்பங்களை நிறுவ சந்தர்ப்பம் வழங்குங்கள்: ரில்வின் சில்வா
Page 1 of 1

மக்கள் விரும்பும் அரசாங்கத்தை அமைத்து கொள்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அம்முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரில்வின் சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
மஹிந்தவின் சர்வாதிகார ஆட்சியை கவிழ்க்கும் வகையிலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கும் நோக்கிலும் 58 இலட்சம் மக்கள் ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்திருந்தார்கள்.
இதன் அடிப்படையில் கட்சி தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் தற்போதைய ஜனாதிபதிக்கு பூரண ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை இந்த நாட்டிற்கு பொருத்தமற்றது எனும் ம.வி.முவின் தலைவர் ரோஹண விஜேவீரவின் நிலைப்பாட்டிலேயே நாம் இன்றும் உள்ளோம் என ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் அடிப்படையில் எதிர்காலங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் எனும் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது எனவும்,
புதிய தேர்தல் முறை ஜனநாயகத்தை உறுதிபடுத்துவதுடன், அனைத்து மக்களின் பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் சாதாரணமாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் எனும் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 23ம் திகதிக்கு பின்னர் பொது தேர்தலை நடத்த வேண்டும் என்பதை தற்போதைய அரசாங்கம் எவ்வித தயக்கமுமின்றி நிறைவேற்ற வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.
பொது தேர்தல் தற்போது அவசியமில்லை, தற்போதைய அரசாங்கத்தை கொண்டு செல்வதற்கு ஆதரவு வழங்குவதாக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவரின் இந்த கருத்து கடந்த அரசாங்கத்தின் ஆட்சி காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் மேற்கொண்ட இலஞ்ச, ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் நோக்கிலேயே காணப்படுகின்றது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி ஆதரவளிப்பதில் எமக்கு பிரச்சினையில்லை. எனினும் அது பொது தேர்தல் இடம்பெற்ற பின்னர் இடம்பெற வேண்டும் என்பதே ம.வி.முன்னணியின் நிலைப்பாடு.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குதல், மீண்டும் சுயாதீன ஆணைக்குழுவை நிறுவும் வகையில் கொண்டுவரப்படவுள்ள 19வது திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எதிர்க்கட்சி தலைவர்,
ஜனநாயகத்தை குழிதோண்டி புதைக்கும் வகையில் 2010ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 18வது திருத்தத்திற்கு ஆதரவளித்திருந்தார்.
இதிலிருந்து தெரியவருவது என்னவெனில் அவர் உண்மையில் ஒரு அரசியல்வாதி என கூறுவதில் அர்த்தமும் இல்லை, அவ்வாறு கூறுவதற்கு வெட்கமாகவும் உள்ளது என ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத்திட்டம் நிறைவு பெற்றவுடன், பொது தேர்தலை நடத்தி உறுதியான அமைச்சரவை அமைக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளதுடன்,
மக்கள் விரும்பும் அரசாங்கத்தை நிறுவுவதற்கு மக்களுக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும் மக்கள் விடுதலை முன்னணி கேட்டு கொண்டுள்ளது.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பான விசாரணைகள் ஆமை வேகத்தில்: ரில்வின் சில்வா குற்றச்சாட்டு
» மக்களின் எதிர்பார்ப்பே எமது எதிர்பார்ப்பாகும்: பெ. இராஜதுரை - மக்களின் சக்திமிக்க அமைப்பாக த.மு.கூட்டணி: எஸ்.ஸ்ரீதரன்
» மட்டக்களப்பில் அஞ்சல் வாக்களிக்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பம்: பி.எஸ்.எம்.சார்ள்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum