Top posting users this month
No user |
Similar topics
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு பல்வேறு இடர்பாடுகள் உண்டு. கிராஞ்சி அ.த.க.பாடசாலையில் சி.சிறீதரன்
Page 1 of 1

கிளிநொச்சி பூநகரி கல்விக்கோட்டத்தில் உள்ள பாடசாலைகளில் ஒன்றான கிளிநொச்சி பூநகரி கிராஞ்சி அ.த.க.பாடசாலையில் காணப்படும் வளப்பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய உரியவர்களோடு தொடர்புக் கொண்டு வழியேற்படுத்துவேன் என பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரவித்துள்ளார்.
கிராஞ்சி பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் நிகழ்வுகள் கடந்த 11 நாள் சிறப்பாக நடைபெற்றது,இதில் முதன்மை விருந்தினராக யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பா.உறுப்பினர் சி.சிறீதரன், சிறப்பு விருந்தினர்களாக வலைப்பாடு பங்கு தந்தை ஏ.பி.சில்வெஸ்ரர்தாஸ், கிராஞ்சி கிராம சேவையாளர் கு.கணேசமூர்த்தி ,நலன்விரும்பி த.பத்திநாதர் உட்பட பூநகரி கோட்டத்தின் அதிபர்கள் ஆசிரியர்கள் பழைய மாணவர்கள் பெற்றோர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு சிறப்பித்துள்ளனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் பங்கு பற்றிய மாணவர்களுக்கு மதிப்பளித்து உரையாற்றிய பா.உறுப்பினர் சி.சிறீதரன் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேசத்திற்கு பொதுவாக பல்வேறு இடர்பாடுகள் உண்டு.தண்ணீர் பிரச்சினை,போக்குவரத்து,மண் அகழ்வு உட்பட மக்கள் பாதிக்கப்படும் பிரச்சனைகள் பல உண்டு.
எனினும் இந்த மண்ணில் இருக்கின்ற பற்றுக்காரணமாக அதிபர்கள்,ஆசிரியர்கள் வேறு பொதுப்பணியைச் சேர்ந்தவர்களும் இந்த மாணவர்களின் நன்மை கருதி இடையறாத முயற்சிகளால் கல்வித்தரம் போன்றவற்றை பேணிவந்தாலும் நிவர்த்தி செய்யப்படவேண்டிய அவசியமும் அவசரமுமான பணிகளை நான் உணர்கின்றேன்.
இந்த பாடசாலையில் ஆண்டு 6 தொடக்கும் 11 வரையான மாணவர்களுக்கு இதுவரை கணித,விஞ்ஞான பாடங்களுக்கு ஆசிரியர் இல்லை என்ற வேதனையான சேதியை அறிந்துள்ளேன்.இந்த வருடமும், அடுத்த வருடமும் க.பொ.த.சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவுள்ள மாணவர்களின் நிலை என்ன அவர்களின் எதிர்காலம் என்ன இது தொடர்பாக பெற்றோர்கள் ஏக்கம் வெளியிட்டுள்ளனர்.இவற்றை புரிந்துகொள்கின்ற நிலையில் இதற்கு நடவடிக்கை எடுக்க நான் செயலாற்றுவேன் என தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன்.
இங்கிருக்கின்ற மாணவர்கள் அயலில் உள்ள முழங்காவில் மகா வித்தியாலயத்திற்கு சென்று கணித விஞ்ஞான பாடங்களை கற்கவேண்டிய சூழ்நிலையை மாற்ற உரியவர்களோடு நான் தொடர்புகொண்டு தீர்வை ஏற்படுத்துவேன் என்பதையும் உறுதி கூறுகின்றேன்.விளையாட்டுப் போன்ற புறச்செயற்பாடுகளுக்கு அப்பால் கல்வியே பிரதானமாக உள்ள நிலையில் அவற்றிற்கான வளங்கள் நிறைவாக இருக்கவேண்டியது மிக அவசியமே என தெரிவித்தார்.

oviya- Posts : 50968
மன்றத்தில் இணைத்த தேதி : 12/12/2014
Similar topics
» கிளிநொச்சி- பூநகரி ஏ32 வீதியில் பாலம் ஒன்று சேதமடைந்துள்ளதால் போக்குவரத்து தடை
» பூநகரி கிராமங்களின் தேவைகளை ஆராயும் பொருட்டு மக்கள் சந்திப்பில் பா.உறுப்பினர் சிறீதரன்
» கல்வி என்ற இலக்கினூடாக பல்வேறு வெற்றிகளை பெற வேண்டும்: சி.சிறீதரன் பா.உ

Permissions in this forum:
You cannot reply to topics in this forum